Science reado meter is translation article from English by Ayesha natarasan



அறிவியலின் வெற்றிகளை கொண்டாடும் இந்த நவீன உலகம், அதன் தப்பாட்டங்களால் ஏற்பட்ட வீழ்ச்சிகளை பேரழிவுகளை வசதியாக மறந்து விடுகிறது. சில விஷயங்களை மூடி வைக்க முடிவது இல்லை. உதாரணமாக 1986ல் சாலஞ்சர் விண்கலம் (ஷட்டில்) – விண்வெளியில் இருந்து புவிக்குள் நுழையும் தருணத்தில் 46,000 அடி உயரத்தில் வெடித்து சிதறி ஏழு – விண்வெளி வீரர்களை கொன்றதை சொல்லலாம்.

முதலில் பாக் 1.92 எனும் வேகத்தில் பயணித்தபோது ராக்கெட், சரியாக 11:39:13 சர்வதேச நேரத்தில், புவியின் காற்று மண்டலத்திற்குள் நுழைந்த 73ம் வினாடியில், வெடித்தது என்ற புள்ளி விபர பம்மாத்துகளில் நாஸா இறங்கியது. அப்புறம் விஞ்ஞானிகள் குழு ஒன்றை – விசாரணை மற்றும் வெடிப்புக்கான ஓ – வளையம் எனும் ரப்பர் வால்வில் ஏற்பட்ட ஒரு சிறு பொறி – வலது பக்க திட – ராக்கெட் பூஸ்டரை வெடிக்க வைத்து விட்டது. அடுத்த முறை ரப்பர் வளையத்திற்கு பதிலாக பிளாஸ்டிக் வளையம் பயன்படுத்தவும் என்று – சமையலில் உப்பு கொஞ்சம் தூக்கல் என்பது போல கமிஷன் அறிவித்தது. ஓ – வளையம் சாலஞ்சரின் விண் நோக்கிய – டேக் ஆஃப் நடக்கும் போதே – குறை குளிர் வெப்பத்தில் கூட வேலை செய்யாமலே இருந்தது. ஐந்துமுறை, ராக்கெட் ஏவுவதே தள்ளிப் போனது. அப்போதே ஏன் மாற்றவில்லை என்று யாருமே கேட்கவில்லை. ஆராயவே தேவை இல்லை கோளாறு என்று நாஸாவுக்கு ஏற்கெனவே தெரியும். 7 லட்சம் டாலர் செலவாகும் என்பதால் – சரி பார்ப்போம் என ரிஸ்க் எடுத்தார்களாம்.

இதுகூட சும்மா ஏழுபேர் மரணம் தானே என்று நாம் குறைத்து மதிப்பிடலாம். பிரபலமான பி.பி.சி.டி.வி ஒன்று தட்பவெப்பநிலை குறித்து சரியாக அறிவிக்க வேண்டும் அல்லது அப்படி ஒரு நிகழ்ச்சியையே ரத்து செய்து விடலாம். 1987ல் அக்டோபர் 15 அன்று பி.பி.சி – லண்டன் அலுவலகத்திற்கு ஒரு பரபரப்பான போன்-கால் வருகிறது. `பிஸ்கே வளைகுடாவில் ஒரு மகா சூறாவளி அதிவேகமாக கரைநோக்கி வருவதாக சொல்கிறார்களே உண்மையா?` பி.பி.சி தட்பவெப்ப நிபுணராக அப்போது இருந்தவர் மை்கெல் ஃபிலிச். `அப்படி எதுவும் இல்லை` என்று சொல்லி துண்டிக்கிறார். அட்லாண்டிக் சமுத்திரத்தில் பிஸாயிட் புயல் சூறாவளி பற்றி பி.பி.சி விவாதித்தது அன்று மாலையில் அமெரிக்க ஃபுளோரிடாவில்தான் வீசும் என்றார்கள்.

அவர்கள் சொன்ன புயல் அதே நாள் மாலை அமெரிக்க ஃபுளோரிடாவில் வீசாமல் இங்கிலாந்தின் ஃபுளோரிடா கீ எனும் ஊரில் கடும் அரிக்கேன் சூறாவளியாக வீசி 167 பேரை கொன்றது. சாரி … பாரோ மீட்டரில் தவறான – உலக வரைபடத்தை மாட்டி விட்டோம் என்று பி.பி.சி. அசால்டாக – ஒரு பில்லியன் டாலர் பேரழிவுக்கு பிறகு கூச்சமின்றி அறிவித்தது. மைக்கெல் ஃபிலிச் ரொம்ப மொக்கையாக பிரான்சில் தட்பவெப்ப நிபுணர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் அப்படி ஆனதாகவும் – முதல் நாள் தட்பவெப்பத்தையே ஒரு வாரம் இப்படி அப்படி லேசாக மாற்றி தான் வாசித்ததாகவும் கூறினார். இந்த பெரும் ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பிறகும் – பி.பி.சி.யின் தட்பவெப்ப அறிக்கை வாசிக்கப்பட்டே வருகிறது. உள்ளூர் மீனவர் – விவசாய மக்களால் தப்பித்து ஓடும் அளவுக்கு முன்கூட்டி கணிக்க முடிவதும் அறிவியல்தான் என்பதே உண்மை.

No description available.

அடுத்தது 1986ல் ரஷ்ய செர்னோபில் அணுமின்நிலையத்தில் நடந்ததை நாம் மன்னிக்கவே முடியாது. செர்னோபில்லில் நடந்தது ஏதோ – தொழிற்துறை விபத்து என்பதுபோல அறிவியல் நம்மை நம்பச் சொல்கிறது. ரஷ்யாவின் பரம எதிரி நாடான அமெரிக்காவில்கூட, விஞ்ஞானிகளுக்கும் `அதற்கும்` சம்பந்தமில்லை… பாதுகாப்பு இன்னும் நான்றாக செய்திருக்கலாம் என்பது போல பம்மாத்து செய்வதை இன்று வரை நிறுத்தவில்லை. செர்னோபில்லில் மொத்தம் நான்கு – ரியாக்டர்கள் இருந்தன. 1986 ஏப்ரல் 26ம் தேதி பணிக்கு வந்த நாலுபேர் – முதலில் – ஏன் என்று அவர்களுக்கே தெரியாதாம் – ரியாக்டர் கூலிங் அமைப்பை நிறுத்தி விட்டார்கள். போரான் – கார்பைடு குழல்கள் மொத்தம் 15 தேவை இருந்தது எட்டுதான். மீதி 7 நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்தன. லாரிகள் வருவதற்கு காலதாமதமாகும் என்பதால் எட்டு போரான் – கார்பைடு குழல்களை பயன்படுத்தி – நியூக்ளியர் – பிளவை கட்டுப்படுத்த முயன்றார்கள். அணுப்பிளவு – இரும்பு காங்கிரீட் கவசத்தை தகர்த்து விட்டது. சில வினாடிகளில் 4,300 பேர் மடிந்தார்கள். 70,000 பேர் ஊனமுற்றே வாழ்கிறார்கள். இன்று வரை அங்கே புல் பூண்டு கூட முளைக்கவில்லை. வானில் வெளியேறி காற்றில் பரவிய அணுவியல் துகள் 17 நாடுகளில் – பரவி லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களையும் நாசம் செய்தது.

ஹிரோஷிமா நாகசாகி போதாதென்று ஜப்பானின் தக்காளி வர்த்தகம் செர்னோபில் கதிர்வீச்சால் தவிடுபொடி ஆனது. அப்புறம், இந்த மரபியல்வாதிகள் படுத்தும் பாடு. அவர்கள் கொடிய தீரா வியாதிகளை குணப்படுத்த ஜீன் – தெரப்பி என்று மரபியல் மாற்று சிகிச்சையை அறிமுகம் செய்தார்கள். சில நோய்கள் பலவகை தொற்றுகளை அது சரி செய்வதாகவும், ஜெனடிக் – பொறியியல், மரபியல் மருத்துவம் அது இது என்று ஏக தடபுடல். ஆனால் இந்த விஷயத்தில் மருத்துவ உலகம் செய்த கொடுமையான ஆய்வுகள் சிலவற்றின் விபரங்கள் வெளிவருவதே கிடையாது. உதாரணத்துக்கு நாம் வில்லியம் பிரெஞ்சு ஆண்டர்சன் என்பவரை பற்றி பேசலாம். 1990ம் வருடம் இந்த ஒரு ஆள் எத்தனை வகை வகையான மரணங்களுக்கு காரணமானார் தெரியுமா. தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் மருத்துவ – மரபியல் ஆய்வுப் பேராசிரியராக இருந்த வில்லியம் ஆண்டர்சன், தான் சிறார் – குமிழி நோய் எனும் மிகக் கொடிய (bubble – boy desease) நோய் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமியை காப்பாற்றி குணமடைய வைத்து விட்டதாக செய்தி வருகிறது. ஆர்னிதைன் டிரான்ஸ் கார்பரி மைலேஸ் (OTC) குறைபாடு என்று பொதுவாக இந்த நோய் அழைக்கப்படுகிறது. உடலில் தேவையான அளவை விட பல மடங்கு அமோனியா அளவு அதிகரிக்கும் நிலை அது. காலையில் முதல் உணவு உண்டதும் புரதத்தில் இருந்து சுரக்கும் அமோனியா அளவில் அதிகமானால் மூளையை பாதித்து உடனடியாக மரணம் வரை கூட பாதிப்பு ஏற்படலாம் எனும் நிலை. அமேனியாவை கட்டுப்படுத்தும் சில மருந்துகள் உணவு முறை மாற்றம் என்று குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தினால் மரணத்தை கட்டுக்குள் வைக்க மருத்துவ உலகம் கற்றது.

ஆனால் வில்லியம் ஆண்டர்சனும் அவரது ஆய்வுக் குழுவும் அடினோ வைரஸ் வகை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும் – வெக்டார் எனும் அந்த வைரஸை தடுப்பூசிபோல் செலுத்தினால் அது – குழந்தைகளின் கல்லீரலில் உள்ள மரபணுக்களில் தூண்டல் பெற செய்து அமோனியாவை உடைத்து ரத்தத்தில் கலந்து செல்களை நோக்கி அனுப்பி உயிர் காக்கும் என்றும் வாதிட்டனர். அவர்கள் குணப்படுத்திய சிறுமியை யாரும் பார்த்திருக்கவில்லை. முறைப்படி மருத்துவ ஆய்வுக்கு இந்த விஷயத்தை உட்படுத்தாமலே 117 குழந்தைகளுக்கு அவர்கள் வைரஸை செலுத்தினார்கள். ஆறே நாட்கள் ரணகளமானது. மொத்தம் மூன்று குழந்தைகள் தவிர யாரையுமே காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகள் இறந்தது அமோனியாவாலா அல்லது வில்லியம் ஆண்டர்சனின் அடினோ வைரஸ் தாக்கியதாலா என்பதை மருத்துவ உலகம் வெளியிடவே இல்லை. இன்று வரை அந்த மூன்று குழந்தைகள் எப்படி உயிர் தப்பினார்கள் என்பதை ஆராயத் தொடங்கியது அதை விடக் கொடுமை.

No description available.

இதெல்லாம் பரவாயில்லை. சில சமயம் இந்த மாதிரி ஆய்வுகள் அத்துமீறிபோய் விடுவதும் உண்டு. 1950களில் பிரேசிலில் மரபியல் விஞ்ஞானிகள் செய்த தேவையில்லாத வேலை இது. ஆப்பிரிக்கக் காடுகளில் பிரமாண்ட தேன்கூடுகள் மட்டும் ராட்சச தேனீக்கள் உண்டு. ஆனால் இவை கொட்டினால் மரணம் நிச்சயம். ஐரோப்பிய தேனீக்கள் கொட்டினால் கொஞ்சநேரம் வலிக்கும் அவ்வளவுதான் ஆனால் தேன்கூடு ரொம்ப சிறியது. அந்த விஞ்ஞானிகளின் கணிப்பு ராட்சச தேனீக்களை – ஐரோப்பிய தேனீக்களுடன் கலப்பினம் செய்தால் பிரேசிலின் அமேசான் காடுகளில் பிரம்மாண்ட தேன்கூடுகள் கிடைக்கும் என்று யாருக்கோ ஒரு குறுக்கு யோசனை வந்துள்ளது. உடனே அறிவியல் செயலில் குதித்தது. ஆறே மாதத்தில் கலப்பினம் ரெடி… நீங்கள் நினைத்ததை இயற்கையும் இயற்கை தெரிவும் நினைக்க வேண்டும். பிரேசில் தேனீ்களின் தேன் கூடுகளது அளவு மாறவில்லை. ஆனால் முதல் பரிசோதனையிலேயே 17 பேர் அந்த புதிய ரக தேனீக்கள் கொட்டியதில் மரணமடைய – விஞ்ஞானிகளையே அவை அலற அலற ஓட வைத்ததுதான் மிச்சம். முற்றிலும் அழிக்கவும் முடியவில்லை. மெக்சிகோ, அரிசோனா, கலிபோர்னியா என்று இந்த புதிய ரக விஷத் தேனீக்கள் இப்போதும் அவ்வப்போது தலைகாட்டுகின்றன. இதெல்லாம் மீறி அந்த மரபியல் மாமேதைகளின் ஆய்வும் தொடர்கிறது.

ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கழகம் இப்போது திருந்தி விட்டது. ஆனால் 1980களில் உலக அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் வெறியில் – தங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு யாருமே எப்படி பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாத ஊக்க மருந்துகளை தன்னால் வழங்க முடியும் என்று ஜார்ஜ் கிளாம்பர் எனும் மருந்தியல் நிபுணர் அறிவிக்கிறார். மனித வளர்ச்சி ஹார்மோன், எரித்ரோ பொய்டீன், பீட்டாபிளாக் எனும் வகை ஊசியை விளையாட்டு வீரர்களுக்கு செலுத்தினால் அவர்கள் ஆறு மடங்கு அதிக உடல் பலத்தோடும் வேகத்தோடும் செயல்பட வாய்ப்பு உள்ளது என்பது கிளாம்பரின் வாதம். ஆஸ்திரேலியா பதக்கப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ஒன்றில் வந்தால் போதும் – நாட்டின் பெருமை உயர்வதோடு ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பும் கிடைக்கும் என்பது ஆஸ்திரேலிய விளையாட்டு குழுமத்தின் பேராசை. 1956ல் ஏற்கெனவே ஒருமுறை மெல்போர்னில் ஒலிம்பிக்கை ஆஸ்திரேலியா நடத்தி இருந்தது. 1988 ஒலிம்பிக்கை நடத்த – விக்டோரியா நகரை தயார் செய்தும் வந்தது.

இந்த நிலையில் அன்று சில மாதங்கள் கிளாம்பர் வைத்ததே சட்டமாக இருந்தது. 1980ல் 15வது இடத்தில் ஆஸ்திரேலியா இருந்தது. 1956ல்தானே போட்டிகளை நடத்தியபோது அது நாலாம் இடம் பிடித்தது. இந்த நிலையில் 1984 ஒலிம்பிக் போட்டிகளில் வெல்ல கிளாம்பர் நம்பிக்கை ஊட்டுபவராக பார்க்கப்பட்டார். மித்தைல் – ஹெக்ஸா – நமைன் எனும் ஒருவகை ஊக்கியை எல்லார் முன்னிலையிலும் ஏதாவது ஒரு விலங்கிற்கு செலுத்தி நேரடி விளக்கம் தர அவர் ஏற்பாடு செய்தார். யானையை வைத்து பரிசோதிக்கலாம் என்று யார் சொன்னார்கள் என தெரியவில்லை. உலகிலேயே எடை மிகுந்த மெதுவாக அசைபோடும் விலங்கு யானையையே வேகமாக ஓடவைத்து காட்டினால் நம்புவார்கள் என்று அவருக்கு தோன்றி இருக்கலாம். உண்மையில் தாங்க முடிந்த அளவு மித்தைல் – ஹெக்ஸோ – நமைன் 0.25 மில்லிதான். யானைக்கு படிப்படியாக டோஸை உயர்த்தலாம் என்று அவரது உதவியாளர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கிளாம்பர் முழுசாக 5 மில்லியை ஊசி மூலம் செலுத்தினார். சற்று நேரத்திற்கு எதுவும் நடக்கவில்லை ஏறத்தாழ ஐநூறு பேர் குழுமி இருந்த அந்த சிறிய மைதானத்தில் திடீரென்று யானை ஒரு வட்டப்பாதையில் சுற்றி சுற்றி வரத் தொடங்கியது. பிறகு அது சற்றே வேகம் பிடித்தபோது நடக்கப்போவது தெரியாமல் பலத்த கர ஒலி எழுப்பப்பட்டது. மேலும் சற்று நேரத்தில் யானை இங்கும் அங்கும் ஓடிப்பாய்ந்து பலவாறு தலைதெறிக்க கட்டுப்பாடே இல்லாமல் கூட்டத்தில் நுழைந்து அரைமணிநேரம் பலரையும் பந்தாடியது. சிலர் ஒலிம்பிக்கில் ஓடுவதை விட அதிக வேகமாக ஓடித்தப்பியது உண்மைதான். கடைசியாக சுவர் ஒன்றில் மோதி பொத்தென விழுந்தது. ஆறுமணி நேரம் மருத்துவர்கள் போராடினார்கள். யானையின் மரணம் கொட்டை எழுத்துக்களில் மறுநாள் செய்தியாக வெளிவர ஆஸ்திரேலிய ஒலிம்பிக் வாரியம் தனக்கும் அந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விட வேண்டி வந்தது.

இதெல்லாம் ஒன்றுமே இல்லை எனுமளவுக்கு 1993ல் புவியியல் விஞ்ஞானி ஸ்டான்லி வில்லியம்ஸ் அறிவியலின் பெரிய காமெடி வில்லனானார். தென்-மேற்கு கலிபோர்னியாவில் காலரஸ் எனும் எரிமலை ஒன்று உள்ளது. 14,000 அடி உயரம் மலை. நான்கே மைல் தூரத்தில் 5,000 அடி கீழே ஒரு சிறுநகரம் உள்ளது. சான்ஜுவான் டி டாஸ்டோ என்பதே அந்த ஊரின் பெயர். மூன்று லட்சம் அதன் மக்கள் தொகை. எல்லா பெரிய பரபரப்பு பெரு நகரங்களிடமிருந்தும் தன்னை துண்டித்துக்கொண்ட டாஸ்டோவின் மக்கள் விழித்தெழுவது அந்த எரிமலை பொங்கும் போது மட்டும்தான். 1580, 1616, 1797, 1830, 1865, 1869, 1891, 1936, 1963 என முப்பதாண்டுக்கு ஒருமுறை என்று ஏறத்தாழ ஊர் பழகிக்கொண்டது.

Buy When Science Goes Wrong: Twelve Tales from the Dark Side of Discovery Book Online at Low Prices in India | When Science Goes Wrong: Twelve Tales from the Dark Side of

காலரஸ் எரிமலையின் பெரிய ஈர்ப்பு எரிமலை பாறைகள். மக்னா எனும் அவ்வகை பாறை எல்லா எரிமலைக்கும் உண்டு என்றாலும் காலரஸ் பாறைகள் சிலிக்காவால் ஆனவை. உருகும் வெப்பக் குழம்பாக வெளியேறும் சிலிக்கா பின் குளிர்வடைந்து திட நிலை அடைகிறது. ஹவாய் போன்ற எரிமலைகள் போல எரிமலையில் இருந்து குழம்பாக ஓடும். அது போல கீழ்நோக்கி காலரஸ் சிலிக்கா ஓடுவது இல்லை. ஒரு உறைந்த குழம்பாய் மேலே பலகாலம் கூழ்மமாக தங்குகிறது. இதிலிருந்து எரிமலை வாயுக்களை எடுத்தால் அதில் தொழிற்துறைக்கு பெரிய புதையலே கிடைக்கும் என்று கூறி ஸ்டான்லி வில்லியம்ஸ் களம் இறங்கினார். அவர் மட்டும் ஆய்வு செய்ய முன்வந்திருந்தால் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்க மாட்டார். ஐ. நா.சபை நடத்திய கனிமங்கள் மாநாட்டில் எல்லாரையும் குழப்பினார். நேரடியாக அந்த குழம்பு நுரையை ஆய்வு செய்வது பற்றியும் ஒரு – நேரடி களப்பயணம் செய்வதற்கும் ஏராளமான நிதியை பெற்றார். 46 பிற விஞ்ஞானிகள் பெரும்பாலும் பல நாடுகளில் இருந்து வந்தவர்கள். சுவிட்சர்லாந்து, ரஷ்யா, பிரான்சு என அடுக்கிக்கொண்டே போகலாம். தனது அமெரிக்க சகாக்கள் ஆறுபேருடன் வில்லியம்ஸ் நேரடியாக 1993ல் ஜனவரி 13 அன்று பாஸ்டோ வந்தார். ஊரே காலி. ஏற்கெனவே 170 சிறு சிறு கொதி வாயுக்களின் வெளியேற்றமும் – உள்ளூர் நில அதிர்வும் உணரப்பட்டிருந்தது. இன்னும் கொதி நிலை முற்றி எரிமலை உமிழ்வு தொடங்க ஒரு வாரம் ஆகும் என வில்லியம்ஸ் தவறாக கணித்தார். விர்ஜீனியா புரூஸ் எனும் பெண் எரிமலை நிபுணர் அவர்களை எச்சரித்ததுடன் எரிமலை வாய் வரை செல்ல வேண்டாம் என்றும் டெக்டோனிக் அடுக்குகள் விலகும். பக்கவாட்டு பகுதியோடு நின்றுவிடலாம் என்று கூறி பத்துபேரை நிறுத்தினார். மற்றவர்கள் வில்லியம்ஸோடு எரிமலைவாய் வரை சென்று பயந்தாரிகள் என இவர்களை திரும்பிப் பார்த்து ஊளையிட்போது சரியாக மதியம் 01.41 மணிக்கு குழம்பு கொப்பளித்து வெளியேறத் தொடங்கியது. ஊர் சொன்னதே சரி.

அந்த ஒட்டுமொத்த பயணத்தில் பிழைத்தது பதினாறு பேர். ஏறத்தாழ வறுத்தெடுத்த சிக்கன் கணக்காக வில்லியம்ஸ் உயிர் பிழைத்தார். ஆனால் ஏன்தான் பிழைத்தோமோ என நினைத்து நோகும் அளவிற்கு 6 வருடம் விசாரணை நடந்தது வேறு விஷயம். எரிமலை ஒன்றை ஆய்வு செய்ய 112 வகை கருவிகள் உள்ளன. நேரடியாக மாதிரிகளை திரட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை வில்லியம்ஸால் கடைசீவரை கூற முடியவில்லை. துல்லியமாக எரிமலை குழம்பு வெளியேற்றத்தை கணிக்க முடிந்த உள்ளூர் மக்களை அந்த எரிமலை – நிபுணத்துவ விஞ்ஞானிகள் பொருட்படுத்தாது உட்பட பல விஷயங்களை ஐ. நா பிறகு அறிவித்தது சரிதான். இதுபோன்ற அபத்த ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்குவது ஏன் என்பது குறித்து அவர்கள் மூச்சுவிடவில்லை. உலகெங்கும் இதுபோல அபத்தமான ஆனால் ஆபத்தான பல ஆய்வுகள் இன்றும் தொடரவே செய்கிறது – நம் உடலை வைத்து மருத்துவ உலகம் இப்போதும் என்னென்ன ஆய்வுகளை நடத்தி வருகிறது என்பது தனியாக (நடுக்கத்தோடு ) எழுத வேண்டிய விஷயம்.

Franklin & Marshall – The Science of Sexual Orientation
——-
(சைமன் லீ வே – இங்கிலாந்தில் பிறந்த நரம்பியல் விஞ்ஞானி. தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இக்கட்டுரை அவரது 1999 நூலான வென் சையின்ஸ் கோஸ் ராங் (When Science Goes Wrong) புத்தகத்தில் உள்ளது)

———



தொடர் 1:

அறிவியல் ரீடோ மீட்டர் 1: மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



தொடர் 2:

அறிவியல் ரீடோ மீட்டர் 2:  “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

 



தொடர் 3:

அறிவியல் ரீடோ மீட்டர் 3: “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



தொடர் 4:

அறிவியல் ரீடோ மீட்டர் 4: “குண்டக்க மண்டக்க அறிவியல்” – ரிச்சர்டு ஃபைன்மன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



தொடர் 5:

அறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம்! – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



அறிவியல் ரீடோ மீட்டர் 6: நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடு வாங்கப் போல… (நீங்கள் அணுவா… அதை பரிசோதிக்கும் கருவியா) – ஹெயின்ஸ் ஆர்.பாஜெல்ஸ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



அறிவியல் ரீடோ மீட்டர் – 7: ஏற்கெனவே வந்திட்டாங்கய்யா… வந்திட்டாங்க! – காரல் சாகன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



அறிவியல் ரீடோ மீட்டர் – 9: நல்லாத் தானேடா போயிட்டிருந்துச்சு?! (இசை மட்டுமா இசை) – வால்டர் லெவின் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *