கவிதை : இப்படிக்கு காலம் (Ippadikku Kaalam) - சிறந்த தமிழ் கவிதைகள் - Tamil Poetry - எல்லாம் என் வசம் என்றே வாழ்ந்திருந்தேன் சில காலம் - https://bookday.in/

கவிதை : இப்படிக்கு காலம்

கவிதை : இப்படிக்கு காலம்

எல்லாம் என் வசம் என்றே வாழ்ந்திருந்தேன் சில காலம்.
காலம் என்றால் என்னவென்று நான் அறிந்திராத பருவம் அது.

விளக்கிச் சொல்ல தேவையில்லாத ,
வார்த்தைகளற்ற ஒரு பெருவழியில்
உன்னைச் சந்தித்தேன்.

முதல் சந்திப்பிலேயே
என்னை மூச்சுமுட்டச் செய்தாய் .

உடையட்டும் என்ற துணிச்சலுக்குள்
ஒட்ட வைக்கும் நுட்பமும்
உன்னிடம் சேர்ந்து இருப்பதை
என்னால் காண முடிந்தது.
ஒட்ட வைக்க வாய்ப்புள்ள அளவிற்கே
உடைக்க வேண்டும் என்பதை
நீ மறந்து போனது என் விதி.

ஒலியற்ற உன் சத்தம்
என்னை உடைத்தெறியும் போது உணர்ந்தேன்.
உன்னிடம் மண்டியிடுவதைத் தவிர
வேறு வழியில்லை என்று.

என்ன செய்வது,

முன்பொரு காலம்,
என்னை ஒப்படைக்க மறுத்தேன்.
இப்போது நீ என்னை மறுக்கிறாய் .
எப்படிப் பார்த்தாலும் கணக்கு சரிதான்.

 

இப்படிக்கு காலம் …..

எழுதியவர் :

 

த. நாகராணி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. தங்க ஜெயபால் ஜோதி

    சிறப்பான கவிதை.அவன் சத்தமில்லாமல் உடைத்ததைப் போல நாமும் உடைந்து போகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *