டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 8: கழுகும், கோழியும் | தமிழில்: ச.சுப்பா ராவ்ஒரு விவசாயி ஒரு கழுகையும், ஒரு கோழியையும் வளர்த்து வந்தான். விவசாயி கூப்பிடும் போதெல்லாம் கழுகு அவன் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவனோடு கொஞ்சி விளையாடும். கோழியோ அவன் அழைத்தால் அலறி அடித்துக் கொண்டு ஓடும்.

ஒரு நாள் கழுகு கோழியிடம், “ நீ நன்றி இல்லாதவன். நீ வளர்ப்புப் பிராணி என்பது சரியாகத்தான் இருக்கிறது. எஜமானர் போடும் தீனி மட்டும் வேண்டும். ஆனால், அவர் அழைத்தால் ஓடுகிறாய். நான் எல்லாம் காட்டுப் பறவை. இருந்தாலும், எஜமானர் அழைத்தால் அவரிடம் சென்று விளையாடுகிறேன் பார்த்தாயா? நீயும் அந்த மாதிரி இரேன்,“ என்றது.

” யாரும் கழுகுக் குழம்பு வைத்து நான் பார்த்ததில்லை. ஆனால் கோழிக் குழம்பு வைத்துப் பார்த்திருக்கிறேன்,“ என்று சொல்லி விட்டு ஓடியது கோழி. 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

  

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ் 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 6: காக்கையும், அதன் குஞ்சுகளும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 7: மூன்று பன்களும், ஒரு பிஸ்கெட்டும் – தமிழில் ச.சுப்பா ராவ்