பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2023
புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2023– கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: பாலின சமத்துவமும் பெண் கல்வியும் தேவை இக்கணம்! – ஆசிரியர் குழு
♻️ நூலகாலஜி – 5: சிலந்தி மனிதன் சிவப்பானது ஏன்? – ஆயிஷா இரா. நடராசன்
♻️ புத்தகக் காதல்: 1000000 புத்தகங்களைக் காப்பாற்றியவர் – ச.சுப்பாராவ்
♻️ நூல் அறிமுகம்: ஆணாதிக்கத்திற்கும் சாதியத்திற்கும் எதிரான 14 கதைகள் – மயிலம் இளமுருகு
♻️ நூல் அறிமுகம்: கட்டபொம்மு கதைப்பாடல் : வாய்பாடும் அடிக்கருத்தும் – ஜெயபால் இரத்தினம்
♻️ நூல் அறிமுகம்: கண்ணீரும் கானல் போல – து.பா.பரமேஸ்வரி
♻️ நேர்காணல்: சாதி எவ்வளவு இறுக்கமாய் இருக்கிறதோ… அவ்வளவு இறுக்கமாய் ஆணாதிக்கமும் இருக்கிறது – அருள்மொழி. கேள்விகள் : ச. தமிழ்ச்செல்வன்
♻️ நூல் அறிமுகம்: காலாபாணி – கானல் நீர் – ஜே.பி.ஜோஸ் ஃபின் பாபா
♻️ நூல் அறிமுகம்: புராணக்கதை மீட்டுருவாக்கத்தில் மானசா – முனைவர் இரா. மோகனா
♻️ நூல் அறிமுகம்: முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: பறக்கும் வெண்குதிரை – இரா. விஜயன்
♻️ மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் – புதிய தொடர் 1: வடசென்னை குறித்த பொதுப்புத்தி கருத்துகளை மாற்றியவர் என் அப்பா – வ. சி. வளவன்
♻️ நூல் அறிமுகம்: வாலுவின் ஜாலி புதிர்கள் – எஸ்.குமரேஸ்வரி
♻️ பிப்ரவரி 21 சிவப்பு புத்தக தினம் – கோபி
நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் ’கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ – பிரபாகர் பாண்டியன்
நூல் : கேட்டதால் சொல்ல நேர்ந்தது
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹200/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
கேட்டதால் சொல்ல நேர்ந்தது என்ற நூலில் கேள்விகள் கேட்ட அனைத்து நெறியாளருக்கும் மிகுந்த நன்றியை நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் இந்த நேர்காணல் தொகுப்பு என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்து பாரம்பரிய மிக்க குடும்பத்தின் மிக முக்கிய எழுத்தாளராக இருந்துவரும் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் பல்வேறு காலகட்டத்தில் நடத்தப்பட்ட நேர்காணல்களாகும்.
இந்த நேர்காணலில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்க்கையின் பரிணாமங்கள் குறித்த கேள்விகளுக்கு நேர்மையான முறையில் அவர் பதிலளித்துள்ளார். 13 நேர்காணல்களில் அவரது முழுமையான ஆளுமையைப் புரிந்துகொள்ளும் விதத்தில் பதில்களாகப் பகிர்ந்துள்ளார்.
இந்த நேர்காணல்களில் பெரும்பாலான கேள்விகள் அவரது சிறுகதை குறித்தே இருந்துள்ளன. ஏனெனில் அவரது சிறுகதைகளின் தாக்கம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதுதான் சொல்லாமல் விளங்கும் செய்தி ஆகும். கிட்டத்தட்ட எல்லா நேர்காணல்களிலும் தவறாது ஏன் சிறுகதை எழுதவில்லை என்பதும் அதற்கு அவர் இன்னமும் எழுதாமல் 150,200 கதைகளும் உள்ளன என்றால் அரவது மேதமையை புலமையை வியக்காமல் இருக்க முடியாது.
மேலும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் பார்வை மற்றும் சிந்தனைக்கு ஒரு சான்றாக பண்பாடு குறித்த கேள்வியில் அவர் சொன்ன பதில் இன்னமும் பண்பாடு என்பது ஒற்றை பொருளில் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன் பரிணாம வளர்ச்சியில் அவன் சமூகமயமாதலின் போது தேவைப்பட்ட பண்பாடு என்பது வேறு. தற்போது முதலாளிகளின் லாப உற்பத்திக்கேற்ற அடிமைகளினை உருவாக்கும் விதிமுறைகளையும் அதனால ஏற்படுத்தப்படும் ஒழுங்குகளையும் தான் பண்பாடு என்றால் அது இப்போது தேவை இல்லை என்பது சமூகம் மற்றும் கலாசாரத்தின் மீது அவர் கொண்டுள்ள மக்கள் நலன் சார்ந்த எழுத்தாளர் என்பதை காட்டுகிறது.
ஒரு பொதுவுடைமை இயக்கத்தின் பிரதிநிதி என்றால் அவர் கடவுள் மறுப்பாளர் என்றும் அதன் மீது தீவிர எதிர்ப்பு வெறுப்பு கொண்டவர் என்கிற கருத்தை அவர் மாற்றி அமைகிறார். எவ்வாறெனில் கடவுள் என்பதில் அவர் மக்களின் கடவுள் நம்பிக்கையை பற்றி பேசுகிறார். “இங்கு கருணை இருந்திருந்தால் மனிதன் புதிதாக ஒரு கருணை வடிவத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை” என மார்க்சின் கருத்தினை எளிமையான முறையில் விளக்கம் கொடுக்கின்றார். கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் ஆகிய இரண்டின் எல்லைகளையும் இதில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு அரசியல்படுத்தப்படுகிறது என்பதையும் எளிமையாக சொல்கிறார். இது போன்றே சாதி குறித்தும் அவர் சாதியையும் அரசியல் படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். ஒட்டு அரசியல் இருக்கும் வரை மதம் மற்றும் சாதி என்பது அரசியல் செய்வோரின் பாதுகாப்பு கவசமாகவும், ஒட்டு பெறும் அட்சய பாத்திரமாகவும் உள்ளது என்கிறார்.
கல்வி குறித்த கேள்விகளுக்கு கல்வி எவ்வாறு இன்று மக்களுக்கு புகட்டப்படுகிறது என்பதையும் அது எவ்வாறு மக்களின் சிந்தனையை மழுங்கடித்து கடிவாளம் போட்ட குதிரை போல இளைஞர்களையும் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி கற்பிக்கும் முறைகளையும் அவைகளை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த உள்ள சாத்தியக்கூறுகளையும் விவரிக்கின்றார்.
இளம் படைப்பாளர்களுக்கு தனது வாசிப்பு மற்றும் தனது எழுத்து அனுபவங்கள் தன்னை எழுதத் தூண்டிய அனுபவங்கள். தனது அஞ்சல்துறை அனுபவம் அறிவொளி திட்டப்பணிப் பயணம் குறித்தவை தனது இளமைக்கால அனுபவங்கள் யாவும் பயனுள்ள விதத்தில் பகிர்ந்துள்ளார். தனது அபிமான எழுத்தாளரான கு.அழகிரிசாமி அவர்களின் எழுத்தும் அவரது எழுத்து தன்னைப் பாதித்த அம்சங்கள் குறித்தும் அவரைப் போல வெறும் நாய் மற்றும் அன்பளிப்பு போன்ற ஒரு நூறு கதைகளாவது எழுதிவிடமாட்டமா என்கிற ஏக்கத்தையும் அவர் வெளியிடாமல் இல்லை.
தனது இலக்கிய பயணத்தில் தனது இணையரது பங்கு பற்றி கூறும்போது அவர் தனது இணையர் பொருளாதார தேவைகளையும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டதாலேயே தன்னால் இந்த இலக்கிய பணியை சிறப்பாக செய்ய இயலும் என்றவர், தாமும் பெண் விடுதலை குறித்தும் பெண் சுதந்திரம் எவ்வாறு குடும்ப அமைப்பிற்குள்ளிருந்து துவங்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும் ஆண்கள் தமது ஆண் என்கிற எண்ணத்தை வீட்டின் சமையலறையில் இருந்து பெண்களுக்கு முழு விடுதலை வழங்கவேண்டும் என்பதை சொல்லியதோடு மட்டுமல்லாது தமது வீட்டிலும் செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த நூலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வானது சிறுவயதில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஏற்பட்டதை போலவே இருந்தது. அவர் தமது அம்மாவின் தந்தை (தாத்தா) வீட்டிற்க்கு சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை சொல்லும் போது என்னுடைய சிறுவயது நினைவுகள் நிழலாடியது, என்னை அந்த பால்ய வயதிற்கே கூட்டிச்சென்றது இந்த நூலின் மறக்க இயலாத பக்கங்களாகும்.
இலக்கியம் குறித்து சொல்லும் பொது “வாழ்வைப் புரிந்து கொள்வதற்கான, மனித மனங்களைப் புரிந்து கொள்வதற்கான, மனிதன் கண்டுபிடித்த ஒரே சாதனம், இலக்கியம்தான்” என கூறுகிறார் இலக்கியம் குறித்து இதற்கு மேல் எதுவும் கூறிவிட இயலாது என எண்ணுகிறேன்.
எழுத்தாளர்கள் குறித்து: “குழந்தைகளுக்கு தனது துயரம் மற்றவர்களின் துயரம் என்று தெரியாது, அனைவரது துயரத்தையும் தனதாகவே நினைப்பார்கள். அதனால் தான் எழுத்தாளர்களுக்கு குழந்தை மனநிலை வேண்டும் என்று சொல்வார்கள்” என எழுத்தாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என தனது மனதினையும் கன்னாடியைப் போல பிரதிபலித்துள்ளார் எனக் கொள்ளலாம்.
மேலும் இந்த நூலில் நமக்கு அரசியல் குறித்த கருத்தாகட்டும், காதல், மதம், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமை இயக்கம், சிறுகதை, கட்டுரை தொகுப்பு, போன்ற எது குறித்த கருத்துகளுக்கும் இங்கு நமக்கு பரிந்துரைகளும் புரிதல்களும் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக கூறுவேன்.
நன்றி:
பிரபாகர் பாண்டியன் முகநூல் பதிவிலிருந்து…..
புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2023
புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2023– கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: சென்னை புத்தகக் காட்சி வரலாறு படைப்பாம்! – ஆசிரியர் குழு
♻️ நூலகாலஜி – 3: நூலகர் என்பது ஆண்பால் அல்ல – ஆயிஷா இரா. நடராசன்
♻️ நூல் அறிமுகம்: தமிழ்ச் சிறார் இலக்கிய மறுமலர்ச்சியில் ஆயிஷா! – ஜி.ராமகிருஷ்ணன்
♻️ நூல் அறிமுகம்: மாநரகமான மாநகரம் – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம்: இந்திய விடுதலைப் போராட்டமும் காங்கிரஸ் வானொலியும் – அருண்குமார் நரசிம்மன்
♻️ நூல் அறிமுகம்: மண் வாசனை வீசும் பேட்டை – முனைவர் இரா. மோகனா
♻️ நூல் அறிமுகம்: ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியினர் மக்களின் வாழ்வும் மொழியும் – மயிலம் இளமுருக
♻️ நேர்காணல்: கைப்பிடித்து என்னை எழுத வைத்த காலம் – ‘சாகித்திய அகாதெமி’ விருது பெற்ற எழுத்தாளர் –
மு. ராஜேந்திரன். சந்திப்பு : சின்னமுருகு
♻️ நூல் அறிமுகம்: வங்காளி மொழியில் ஆயிஷா: ஓர் அனுபவச் சித்திரம் – வீ. பா. கணேசன்
♻️ நூல் அறிமுகம்: ஆரண்யத் தாண்டவம் – ஜெயபால் இரத்தினம்
♻️ நூல் அறிமுகம்: அன்பு மகளுக்கு எழுதிய அம்மாவின் கடிதங்கள் இப்படித்தானிருக்கிறது – வெ.ரேவதி
♻️ நூல் அறிமுகம்: தன்னெழுத்தின் புது வகைமை – கவிஞர் யாழன் ஆதி
♻️ நூல் அறிமுகம்: போருக்கும் அப்பால் – நிகழ் அய்க்கண்
நூல் அறிமுகம்: உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது – து.பா.பரமேஸ்வரி
நூல் : உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது
நேர்காணல் : தேனி சீருடையான்
சந்திப்பு : பா. பேகன்
விலை : ரூ.₹65
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
தமிழ்ச் செம்மல்
எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களின் சரிதை.
உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது –
குறுநூல்
தமுஎகச அறம் கிளை தோழர் பா.பேகன் அவர்களின் நேர்காணல் சந்திப்பிலிருந்து தொகுக்கப்பட்டது….
வாழ்க்கையின் அனுபவங்களே இலக்கியத்தை வடிவமைக்கும். அதைவிட வாழ்வின் சில ஆக்கபூர்வ ஆதாரங்கள் பல அர்த்தங்களைக் கற்றுத் தரும். ஆளுமைகள் ஆர்வலர்கள் பிரபலங்கள் என உச்சம் பெற்ற உயர்ந்தோரின் வாழ்க்கைப் பயணங்கள் வாழ்வின் பல நிஜங்களை சாட்சிப்படுத்தும். ஆனால் இலக்கியவாதிகள், படைப்பாளிகள் போராளிகள் என வாழ்க்கைச் சக்கரத்தில் உழன்றுக் கரைபுரண்ட களவான்கள், உடன் வாழ்க்கையின் போக்கைப் போதனைக்காட்படுத்தாது வாழ்பாடுகள் வீழ்த்தி எழுப்பிய பாடங்களைப் படைப்புகளின் வழியே செதுக்கும் முன்னோடிகளின் நடைமுறை வாழ்க்கை, நமக்கு இதுகாறும் வாரி இரைத்த சமூகத்திற்கான வாழ் கடனை கட்டி முடிக்கும் அனைத்து வழிகளையும் திறந்து விடும் நடைபாதை சுரங்கம்.
கூடுதலாக உழைப்பாளிகளின் பாட்டாளி பெருமக்களின் சரிதைகளும் சரித்திரங்களும் காலத்தைக் கடந்த நிஜங்கள். மனித நெரிசல்களில் இறுகித் தவிக்கும் நமக்கான ஆறுதல்கள். இது வெறும் மேடை சிறக்கும் வாக்குறுதிகள் போல தோன்றுவதையெல்லாம் பேசி முடிப்பது அல்ல வாழ்ந்துக் காட்டிய விளிம்பு நிலை சாதனையாளர்களின் அப்பட்டங்கள். பகட்டுதாரிகளைக் கண்டும் கனவான்களை நினைத்தும் உக்கிப் போவதை விட சமூகத்திற்காகவும் சக உயிர்களுக்காகவும் தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளின் வழியே எடுத்துக்காட்டாய் உயர்ந்தும் சிறந்தும் பணம் பதவி வசதி போன்ற அநித்திய போதைகளுக்கு வளைந்துக் கொடுக்காமல் சத்தியத்தின் சிறு வட்டத்திற்குள் நட்டமாய் நின்று தன்னடக்கமே தலைவணக்கமாய் பிறர் வளரவும் உயரவும் வழிகாட்டியாய் வழி விட்டு பின்புலத்தில் ஒருசாய நிற்கும் தூணாக துலங்கலை உண்டாக்கும் தூண்டலாக மெருகேற ஒரு தூரிகையாக இன்றும் சமூக மறைப்பின் பின்னால் வாழ்த்துக் கொண்டிருக்கும் மனித மாண்புகளின் வாழ்க்கைச் சரித்திரங்களும் சறுக்கல்களும் நமக்கான ஒன்றன் பின் ஒன்றான படித்தளங்கள், மெல்ல மெல்ல நுனி பற்றி சிரம் தொட உதவும் ஊனுகம்பு…
பொருளாதாரம் என்பது அவரவர் பாடு வாழ்வின் அமைவே ஒழிய பணமோ பகட்டோ ஒரு மனிதனை தராசின் அளவுகோலைக் கொண்டு அளந்திட முடியாது. பண்பான கொள்கையில் பகுத்தறிவுடன் பாங்காக நிற்கும் எழுத்தாளர் தேனி சீருடையான் போன்ற உழைப்பிலும் உள்ளத்திலும் உண்மையிலும் உறுதியிலும் அடாத நின்று மனித வாழ்க்கைக்கும் மணிதமிழுக்கும் மகிமைச் சேர்த்த ஆளுமைகளின் சரிதையை அனுபவ ரகசியங்களைச் சமூகவெளிக்கு விரியப்படுத்தும் நோக்கில் நேர்காணல் செய்துத் தொகுத்துக் குறுநூலாக வடிவம் தந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை தோழர்களின் மெனக்கிடல் அளப்பரியது..
பல வழுக்கங்களை சறுக்கல்களைக் கொண்ட ஏற்ற இறங்கங்களோடான அன்றாடங்கள் வாய்க்கப் பெற்ற நமது தோழர் சீருடையான் வெயிலையும் மழையையும் பனியையும் புயலையும் மாறி மாறி ஏற்று வேரூன்றி விரவி நின்ற பெருவிருட்சம். அடுத்தடுத்தக் கட்டங்களுக்குத் தமது பொருளாதார படிமங்களை இலக்கிய வரப்பின் கொள்முதலில் அறுவடை செய்து நித்தம் மகிழ்கூடிய கணங்களைக் கொண்டாடித் தழைக்கும் இலக்கியக்கனிதாரி.
அசலில் ஒவ்வொரு எழுத்தாளுமைகளின் இலக்கிய முகங்கள் தாங்கிய லட்சணங்களைக் கண்டு மெய்சிலிர்க்கும் நமக்கு பல எழுத்துதாரிகளின் மறைக்கப்பட்ட இருண்ட அந்தப்புரங்கள் என்பவை ஏழ்மையும் சமூக எகத்தாளமும், வறுமையும் மாறாத வலிகளும் கண்ட முகமூடிகள் என்பதற்கான நிகழ்கண சான்றாகச் சீருடையான் அவர்களின் வாழ்வனுப்பவங்களே போதுமானது. இவ்வாறான இலக்கியகர்தாக்களின் வறண்ட காலங்களின் அறிமுகமில்லாத நிலப்பரப்புகளை அறியவும் கற்கவும் இம்மாதிரியான விரிந்த பக்கங்களே வாசகர்களுக்கான பரந்த தடங்கள்..
உழைப்புதான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என்கிற தாரக மந்திரத்தைத் தடையின்றிக் கடைப்பிடித்து இளமைக் காலம் துவங்கி தற்போதைய முதிர்ந்த பருவத்திலும் ஓய்வு ஒழிவுயின்றி உழைத்து மனிதகுலத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தோழர் தேனி சீருடையான் அவர்களின் இயற்பெயர்
எஸ்.கருப்பையா. பெற்றோர் சுப்பையா மற்றும் குருவம்மாள். வறுமையிலும் வளமையிலும் உடன் பயணிக்கும் இணையராக ஜெயலக்ஷ்மி. இருமகன்கள், பேரக்குழந்தைகள் என பல்கனிக் கலவையின் ரசம் நிரம்பப் பெற்ற குடும்பக்குவளைக்குள் பழக்குவியல்களின் மத்தியிலேயே வாழ்க்கையை கனித்துய்க்க லயிக்கும் பழுத்த அனுபவசாலி..
ஏழ்மையின் கோரப் பிடியில் சிக்கி உழன்ற பிராயகால பருவ நினைவுகளே இன்றைய முதிர்காலங்களின் பல கணங்களைக் கனத்து அமிழ்த்துகிறது என்பது அவரது படைப்புகளின் சில ஓரங்கள் நமக்குச் சன்னமாக உரசிச் செல்லும்.
இன்றளவும் தனது பொருளாதாரத் தொலைநோக்குக் கோட்டில் மேலும் கீழும், இழுத்தும் பறித்தும், அழித்தும் திருத்தியும், அல்லாடியும் தள்ளாடியும் சீரான நேர்கோட்டை சீர்மையாக நகர்த்தி வரும் கடும் உழைப்பாளி.
தோழரின் சுய வாழ்க்கையையும் சுந்தர இலக்கிய சிந்தனையையும் சமூக சீர்திருத்தவாதியத்தையும் ஒருமித்தச் சரிதமாக்கிச் சாட்சிப்படுத்திய தமுஎகச அறம் கிளை தோழர் பேகன் அவர்களின் நேர்காணல் கேள்விகளும் கலந்துரையாடலும் பல விடை தெரியாத வினைமுற்றுகளை இலக்கிய வெளியில் படரச்செய்தது. இருண்டுக் கிடந்தப் பக்கங்களை மீள் வாசிப்பிற்குப் புரட்டச் செய்தது.
வறுமையும் புலமையும் ஒட்டிப் பிணைந்தது;
ஏழ்மையும் ஏட்டிலக்கியமும் இணைப்பிரியாதது…
என்கின்ற வாய்ச்சொல் வழக்குக்கு அதி பொருத்தமான மனிதமாக இலக்கிய வள புலவராகப் பூத்து நிற்கிறார் தோழர் சீருடையான். விவசாயக் கூலி குடும்பத்தின் பின்புலத்தைக் கொண்ட சீருடையான் அவர்களின் தாத்தா அதாவது அம்மாவின் அப்பா அன்றைய காலத்தில் களவு செய்வதில் வல்லவர் எனவும் பாட்டையா அதாவது அப்பாவின் அப்பா ஜல்லிக்கட்டுக்குப் பேர் போன அய்யம்பட்டியில் பிறந்தவர் எனவும் ஏட்டுக் கல்வியறிவு முற்றிலும் இல்லாத போதும் வாக்கணக்கில் வித்தகராகத் திகழ்ந்த பெருமைமிகுப் பூர்வீகப் பின்புலன்கள் கொண்டவராகத் தோழர் சீருடையான்.
அப்பா வறுகடலை வறுக்கும் கூலித் தொழிலாளி என்றும் அம்மா ஆரம்பக் காலத்தில் காட்டு வேலையில் உழைத்துப் பிழைத்தும் பிற்பாடு புளிதட்டுதல் பஞ்சு பிரித்தல் போன்ற தேனி மாவட்ட பெண்களுக்கான பிரத்யேக சிறு தொழில்களில் ஈடுபட்டு வந்தவர். பெற்றோர் இருவரும் கடும் உழைப்பில் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்தும் குடும்பம் எப்போதும் உணவுக்கும் உவகைக்கும் அன்றாடத்திற்கும் ஆசாபாசங்களுக்கும் தட்டுப்பாடுடனேயே கட்டிப்போட்டு இருந்ததைத் தோழர் சீருடையான் துக்கம் தொண்டை நனைக்க நினைப்படுத்தியுள்ளார் தமது வாழ்கைப் பகிர்மையில்.
இத்தனை ஆண்டுகால இலக்கிய உச்சத்தின் உயிர்ப்பான எழுத்தாலும் தித்திக்கும் மொழிப் புலமையாலும் எழுத்துலகின் பிரசித்திப் பெற்ற நாயகர். அவரின் படைப்புகளில் கவரப் பெற்றவர் நூறாயிரம், கற்றுத் தேர்ந்தவர் பல்லாயிரம், அவர் நடை கண்டு கலை பழகிய படைப்புகள் ஓராயிரம். இவை அத்தனையும் தமது வாழ்வாதாரத்திற்கான உழைப்புடன் இலக்கிய ஆதாரத்திற்கான திளைப்புடன் ஒய்ந்துக் களைத்தவர் நமது தோழர் அவர்கள். அசலில் தேனி சீருடை யான் என்பதற்கு முழு தகுதிப் பெற்ற ஒரே ஆளுமை என்றே வியந்தோதலாம்…..
தேனீக்கள் போன்ற அயராத உழைப்பும், தீந்தமிழை தேனினிய தெள்ளமுதாக்கப் பருக வழங்குவதில் தேன் கூடாகவும் ஒருமித்தமாய் கொண்ட சீர்மை உடையான் நம் தேனீ சீருடைான்.
நேர்காணல் போல வெறுமனே கலந்துரையாடிக் கடத்திராமல் சுய சோதனையாய் தமிழுக்கும் தமிழனுக்கும் இடையே உறவாடி ஊடாடியுள்ளார் தோழர். தமது சத்தியத்தின் சித்த சுத்தியில் சிவ வடிவான அமைதி ஸ்வரூபத்தில் சுந்தரமொழிப் புலனில் தமிழிலக்கியத்தைச் செழிக்கச்செய்துள்ளார் நமது தமிழ் செம்மல் அவர்கள்.
கொடிது கொடியது இளமையில் வறுமை என்கின்ற அவ்வை மொழிக்குக் கரு உருவாக உதித்தவர் தோழர். அதனினும் கொடிது பிள்ளைமையின் ஏழ்மை என்கின்ற வாசகத்துக்கும் மிகப் பொருத்தமாய் அவரது பிராயகால ஏக்கங்களைக் கண்ணீர் மாலையில் கோர்த்துப் பகிர்ந்துள்ளார்….
பால்ய காலங்கள் என்பவை மகிழ்ந்திருக்க வேண்டிய கனாக் காலங்கள்…. பசித்த வயிறு பொரும ருசிக்க பக்குவமின்றி பரிதவித்தவர். அந்த குழந்தைமை ஈர விசும்பலை அவரது பாத்துமா அத்தை பணியாரம் உண்ண வழங்கிக் கொஞ்சமாக ஆற்றுப்படுத்திய நினைவுகள் ஏராளம்… ஆயினும் கூலி வேலைக்குப் போகும் அம்மாவும் இதுபோல பணியாரம் சுட்டால் வயிறு புடைக்க உண்டு மகிழ்ந்திருக்கலாம் என்கின்ற பிள்ளைக்கே உரித்தான பேரவாவைப் பகிர்ந்த தோழரின் நனவு மொழிகள் குண்டு குழியான விழிகளை குளமாக்கி நிரப்பின. பசியின் பேரேக்கத்தைச் சுற்றத்துப் பிராயகால பிள்ளைகளுடனான விளையாட்டுக்களிப்பில் மறந்திருந்தார் மறைத்தும் இருந்தார் தோழர். குடும்பச் சூழல் காரணமாக ஒட்டிக் கொள்ள உடுப்பின்றி அம்மணைக்கட்டையாகத் திரிந்தக் காட்சிகளைப் பருவ ஞாபகங்களாகப் பகிர்ந்ததுத் திரைப்பிம்பங்களாகக் கண்முன் ஊசலாடின..
தோழரின் ஒவ்வொரு பால்ய கால நினைவுகளிலும் உடன் வாழ்ந்த பாரத்தை மனதிற்கு வழங்கின தோழரின் பகிர்மை…
வாசிப்புத் தளத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஆசிரியர் பணியில் இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளே இளமைக்கால வாசிப்பை அசூயையின்றி அனுபவித்து ருசிப்பர். சூழலும் சுற்றமும் அதற்குத் தக்கன உண்டாக்கித் தரும். ஒரு தந்தையை விட தாய் ஆசிரியராக இருக்கும் பட்சம் நிச்சயமாகப் பிள்ளைகள் நூல் வாசிப்பில் பரவலாக ஆர்வம் செலுத்தியிருப்பதை அறிய முடியும்.
இளம் வயது குழந்தைகள் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதை பார்த்தால் குடும்பம் சார்ந்த எதிர்கால புத்தக வாசிப்பின் முன்னெடுப்பிற்கான அடித்தளத்தை உணர முடியும். ஏழை குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு இப்படியான வாய்ப்புக் கிடைப்பதில்லை என்று கீழ்த்தட்டு மக்களின் பிள்ளைகள் சிறுவயதில் கல்விசூழலின் வாய்ப்புப் போதாமையால் புத்தகம் வாசிக்க ஆர்வமிருந்தும் குடும்பத்தின் வசதி தோதற்று இருப்பதைத் தமது சொந்த அனுபவத்தின் வலியுடன் பேசியுள்ளார் தோழர்.
ஏழு வயதில் தமது பார்வையை இழந்த தோழர் சீருடையான் அவர்கள் பார்வையற்ற பள்ளிப்பருவக் காலங்களில் அவரது வாசிப்பின் முதல் விருத்தம் செவிவழியின் வழியாகத் துவங்கியது.
விடுதி மேற்பார்வையாளரான கிருஷ்ணன் சார் பல செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் பத்திரிகைகளின் துணுக்குகள் என ஒரு ஆசிரியாக பார்வையற்ற மாணவர்களுக்கு உலக நடவடிக்கைகளை வாசித்துக் காட்டிய பண்பை தோழர் சீரூடையான் குறிப்பிட்டுச் சொல்கிறார். தோழரின் வாழ்வில் வாசிப்பிற்கான அகவிழியை கிருஷ்ணன் சார் திறந்து வைத்தது போல அவரின் எழுத்திற்கான புறவழியை நிறுவியது அவரது ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆசிரியை… அதுபோக டாக்டர் மு வரதராசனார் எழுதிய “கல்லோ காவியமோ” நூலே அவரது முதல் புத்தக வாசிப்பாக அமைந்ததையும் அதன் தாக்கம் பின்னாளில் சமூக மீறல் நிகழ்த்தும் அவரது படைப்புகளின் பெண்பாத்திரங்கள் ஜீவித்தது இந்த சுவட்டிலிருந்து தான் துவங்கி இருக்கலாம் என்றும் கருதுகிறார்.
பத்திரிகைத் தலைப்புச் செய்திகளின் செவிவழிக் கடத்தல்களே வாசிப்பின் திறவுகோலாக மிளிர்ந்ததைச் சுட்டிக்காட்டும் சீருடையான் அவர்களின் எழுத்துக்களத்தின் முதல் அக்ஷரத்தைத் தோழரின் ஆறாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் கோவிந்தன் ஐயா சுழியிட்டார். இலக்கியத்தைப் பல தளங்களில் செகிழ்ச்சி அடையச் செய்தாலும் தோழரின் மைக்கோலுக்கு மகிமைச் சமைத்த முதல் தளமாகக் கவிதைக்களமே பள்ளிக்காலம் தொட்டுப் பயணித்து வந்ததற்கான வகுப்பறையின் மாணவகால படைப்பு தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. அதுவும் தமிழிலக்கணத்தைக் கற்பித்து வழிநடத்திய தமிழய்யாவின் வகுப்பில் அவரின் கற்றல் நிமித்தத்தின் தூண்டலாக எழுந்த மாணவ பருவத்தின் முதல் கவிதை தோழரின் சிந்தையிலிருந்து சிந்தியதைக் காணலாம்..
மாசின்றிப் பிறக்கிறாய்
மாசேற்று வாழ்கிறாய், தேன்கூட்டைச் சிதைத்து விட்டுத் தேனை நீ திருடுகிறாய்..
இந்தக் கவிதையில் கருத்துப் பிழையாக மனித இனத்தைக் குற்றக்கண் கொண்டுப் பார்ப்பதைப் போன்றதாக உள்ளது என தமது தமிழய்யா சுட்டிக்காட்டியதை உந்துதலாகக் கொண்டு தமிழய்யாவை மகிழ்விக்கும் வண்ணம் அவர் ஏற்கும் படியான கவிதையொன்றைப் படைப்பதையே வைராக்கியமாகக் கொண்டிருந்தததைக் கூறும் தருவாயில் பிள்ளை மனத்தைக் கொண்ட தோழரின் விட்டலேத்தியான மனம் வெளிப்படுகிறது.
தோழரின் கவிதை எழுதும் முனைப்பைக் கண்டு ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆசிரியை தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொற்கிழி கவிதைப் போட்டியில் கலந்துக் கொள்ளவும் பார்வையற்ற தோழரின் பிரெயில் எழுத்து வடிவத்தைப் பேனாவில் எழுதித் தமது சொந்த அஞ்சல் செலவில் கவிதையை அனுப்பி வைத்து ஊக்கப்படுத்திய தமது ஆசிரியரின் மாண்பைச் சுட்டிக்காட்டவும் மறக்கவில்லை போட்டிக்கான கவிதை உரைநடை வடிவைத்தைத் தழுவியும் கவித்துவ வழக்கில் ஏற்ற இறக்கமாக இருந்ததையும் கூட குறிப்பிடத் தவறவில்லை தோழர்.
அடுத்தடுத்தக் கவிதை முயற்சிகளை ஒழுங்குப்படுத்த இலக்கிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளை வாசித்து அதன் வழியாக உருவம் உத்தி போன்றக் கவித்துவ நுணுக்கங்களைக் கற்று அதன் பின்பாக, கற்பனைக் காதலியின் பிரிவு நிமித்தத்தில் புலம்பும் காதலனாக “விரக்தி” கவிதை, ஹவானாவில் தற்கொலை செய்துக் கொண்ட 936 பாதிரிமார்களைப் பற்றிய “ஆயிரம் பேர் பாய் விரிப்பு” என துவங்கும் கவிதை, காந்தியத்தைக் கிண்டல் செய்வதைப் போன்றக் கவிதை என வரிசையாக எழுதிக் கவியுலகில் தமது செந்நிற ரேகைகளை அழுந்தப் பதித்து வந்த தோழரின் இலக்கியவுலகின் கவிதைவிரிப்பில் பெரிதும் பேசப்பட்டப் படைப்பாக செம்மலரில் வெளிவந்த “வெயில்” கவிதை.
இதன் இறுதி வரிகள் இலக்கிய மேடைகளில் பலமுறை கவியாடின என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையோரத்து சிறு கடை முதலாளி
வீட்டில் அடுப்பறிய
வெயிலடுப்பு விறகானேன்.
என்கிற நிறைவு வரிகள் மனதை கனத்தன. தோழரின் வாழ்க்கை அப்பட்டத்தை உச்சரித்து உறவாடிய கவிமொழி..
தமது இருபதாவது வயதில் கண் அறுவை சிகிச்சை வழியாகப் பார்வை மீண்டபின் கவியரசு கண்ணதாசன்,கவிஞர் தணிகைச் செல்வன் கவிஞர் மீரா ஆகியோரின் கவிதைகளில் ஈர்க்கப்பட்டும், கவிஞர் நாகா கவிஞர் வெண்மணி ஆகியோரின் கவிதைகள் உணர்ச்சிவசப்படச் செய்ததையும், முற்போக்கு கனலைத் தூண்டச் செய்யும் விதமாக அமைந்ததை அடிகோலிய தோழர், அதன் பிறகு கவிஞர் இளவேனில் அவர்களின், கவிதைகள் என்ற பெயரில் புரியாமல் எழுதி ஏமாற்றும் வித்தவர்களை அம்பலப்படுத்தும் துணிவுமிக்க வீச்சான கவிதைகளை வரித்து வியக்கச் செய்த கவியுலக வாசிப்பனுபவங்களைப் புடைத்தெடுத்து பகிர்கிறார். இவ்வனைத்து கவியாளுமைகளின் கைவண்ணங்கள் தனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
1970 முதல் 80 வரையிலான காலங்களை கவிதைக்கான பொற்காலம் என்று சிலாகிக்கிறார் தோழர். கவியோடத்தில் ரசவாதத்துடனும் யதார்த்தவாதத்துடனும் கவிந்துக் கிடந்த தோழரை பத்திரிக்கையாளர் பொன் விஜயன் சிறுகதைகளின் புறம் திருப்பி விட்டதாகப் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைத் தளத்தில் முத்திரைப் பதித்த எழுத்தாளர்கள் கந்தர்வன், ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளின் படைப்புகளில் ஈர்க்கப்பட்டு சிறுகதை எழுதும் ஆர்வத்தை ஆழ்மன புதைக் குழியிலிருந்து வெளிக்கொணர கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த தோழருக்கு எழுத்தாளர்கள் கோணங்கி, தமிழ்ச்செல்வன், செம்பருத்தி,
விழி பா.இதயவேந்தன், புன்னை வனராசன் ஆகிய சிறுகதைதாரிகளின் படைப்புகள் கூடுதலாய் தோழரின் கதைகளுக்கு மெருகேற்றி சிறுகதை தளத்தில் பதிந்தத் தமது பாதம் பதமாக அடிவைத்த பின்புலத்தைச் சிலாகித்தும், சமகால எழுத்தாளர்களான காமத்துரை, அல்லி உதயன் போன்ற படைப்பாளிகளுடன் போட்டிப் போட்டு எழுதியதையும் துள்ளிக் குதித்துப் பகிர்கிறார்.
தமிழிலக்கியக்களம் அத்துடன் நழுவ விட்டுவிடுமா…..
தமது குலத்தின் குளத்தில் மூழ்கடித்து முத்து குளிக்க விடாமல் ஓரங்கட்ட நினைத்திடுமா என்ன..
அதற்கான உயிர்ப்பான சாட்சியாகத் தோழரின் கவிதை, சிறுகதைகள் என இலக்கிய தளங்கள் பரந்துபட்ட வெளியில் திக்குகள் ஒன்றாக சுழன்றிய வண்ணம் நகர்ந்து வர நாவல் புறமும் இழுத்துச் சென்றது தோழரின் விரல்கோல்களை… தேர்ந்த நாவலாசிரியர் பலரின் படைப்புகள் வாசித்து உண்டான ஆர்வத்தின் பிரதிபலனாக 1991ல் தமுஎகச நாவல் போட்டியில் தமது நாவல் ஒன்றிற்கான மூன்றாம் பரிசு பெற்றதையும் பூரித்துப் பகிர்கிறார். இன்றும் பல நாவல்கள் இலக்கியவனப்பை மிளிரச் செய்ய எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின்
“வீரயுக நாயகன் வேள்பாரி,” எழுத்தாளர் முத்துநாகு எழுதிய “சுளுந்தீ,” எழுத்தாளர் பிரியா விஜயராகவன் எழுதிய “அற்றவைகளால் நிரம்பியவள்” ஆகிய நாவல்களை தமக்கு உவப்பானவைகளாக அடிக்கோலிடுகிறார் தோழர் சீருடையான்.
21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுகள் நாவல்களின் காலம் என்று விதந்துக் கூறும் தோழரின் இளமைக்கால எழுத்தாளுமைகளைத் தொடர்ந்து முந்தைய பிந்தைய என நீளும் மனதைக் கவர்ந்த எழுத்துதாரிகளின் பட்டியல் சமகாலத்தில் அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களையும் தொட்டுச் செல்கிறது. ஒரு முதிர்ந்தப் படைப்பாளி சக படைப்பாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து அவ்வப்போது மதிப்புறும் வகையில் பாராட்டும் மாண்பைக் கொண்டிருத்தலின் அவசியத்தைப் புலப்படுத்திய உதாரணபுருஷராக தோழர் சீருடையான் அவர்கள் இயல்பிலேயே பாராட்டும் தன்னகத்துடன் திகழ்வது சிறப்பு. காலங்களைக் கடந்த படைப்புகள் சமகாலப் படைப்புகள் என பேதம் பாராட்டாது பாரபட்சமின்றி பெருவாரியான எழுத்துக் குவியலுக்குள் ஊடாடித் தீர்த்துள்ளதை நேர்காணல் கலந்துரையாடலின் பக்கங்களில் கொஞ்சமும் சலிக்காது அடைப்புக்குறிக்குள் எழுத்தாளர்களின் பெயர் கொண்டு நூல்களை அணிவகுத்து போற்றியதில் தெளிவாகிறது.
கல்வி சமத்துவம், அறிவு சமத்துவம், காதல் சமுத்துவம் இருந்த போதிலும் பாலியல் சமத்துவமற்ற சமூகமாக வர்ணாசிரமப் புழக்கங்கள் சமூகப் பேதங்கள் போன்றவற்றை நம் தமிழ்க்குடி அறமாகப் போற்றியதைச் சங்க இலக்கியங்கள் பிரகடனப்படுத்தியதைப் புறநானூறு குறுந்தொகை பாடல்கள் கொண்டு அறிவுறுத்தியுள்ளார் தோழர்.
கற்பு நெறியில் குடும்ப மாதர்களின் ஸ்திரத்தன்மை, பெண்கள் கணவன்மார்களில் தவறான ஒழுக்க புழக்கங்களைக் கூட பெரிது படுத்தாது இவ்வாறான சீலமற்ற ஒழுங்கீன நடத்தையைக் கூட மனைவிமார்கள் கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருந்து வந்ததையும் கணவனை எல்லாவிதத்திலும் உயர்த்திப் பேசியும் மனங்கோணாது வாழ்ந்த அடிமை நியாயத்தை சங்க இலக்கியங்கள் கொண்டாடியதைப் பற்றிய செய்யுட்பாடல்கள் சிலவற்றை மேற்கோலிட்டும், பாட்டாளி மக்களின் ஆட்சியை நாடெங்கிலும் நிறுவ வேண்டும் என்று அன்றே புலவர்கள் தங்களின் பாக்கள் வழியாக சமத்துவ அரசியலை அறிவுறுத்தி
வந்தது அனைத்துகாலத்திற்கான தேவையாக இருந்ததைத் தீர்க்கதரிசிகளாக வலியுறுத்தியதைப் பதியமிட்ட தோழரின் சங்க இலக்கிய வாசிப்பார்வமும் இலக்கியம் சார்ந்த பல்வேறு அவதானிப்புகளும் நமக்கான கருவூலம். தேடிப்பிடித்தாலும் தேர்வு செயவிலாத பொக்கிஷங்களாகத் தமது சுயவிமர்சனத்தில் பதிவிட்டுள்ளது சங்க கால இலக்கியத்தையும் சமகால இலக்கியத்தையும் கலந்தாலோசிக்கும் சுற்றறிக்கையாக வாசருக்கு காலம்கடந்த களநிலவரங்களைப் பறைசாற்றுகிறது.
தோழர் சீருடையான் அவர்களின் “கடை” நாவலையும் முதல் சிறுகதை படைப்பான “மௌனத்தின் விழிப்பு” கதையையும் பல வகைமைகளுக்குள் நிரம்பிய தமது படைப்புகளில் மாறுபட்டவைகளாக அடையாளப்படுத்தியும் மிகவும் பிடித்தமான படைப்பாகச் விரல்நீட்டியும் எடுத்தியம்பியுள்ளார் தோழர்.
பாலின சமத்துவத்தை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கொள்ளாமல் தமது வாழ்வின் அன்றாடமாகவும் கடைப்பிடிக்கும் தோழர் தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர் அல்லி உதயன் போன்றோர்கள் தமது இணையர்களுடன் வீட்டு பணிகளைப் பகிர்ந்துப் பணிபுரியும் பாங்கைப் பெரிதும் சிலாகித்துக் கூறுகிறார். தம்மால் இவ்வாறான இல்லத் தரப்பின் பணிநிமித்தப் பகிர்வுகளில் ஈடுபடவியலாத மனோநிலையை நினைத்து வருத்தம் கொள்வதாகவும் சொல்லி முடிக்கிறார்..
தாம்பத்திய உறவு பொருளாதாரத்தைக் கையாளுதல் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றிலும் கூட பாலியல் சமத்துவம் நிலவுவதில்லை. இன்றைய கார்ப்பரேட் சமூகம் மாறும்போது தான் வாழ்க்கை சமத்துவத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்பதையும் ஊன்றி உரைக்கிறார் தோழர்.
சமூக உயர்வுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றைய ஆட்சியாளர்களிடம் இல்லை போராடிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது மனித சமூகம். ஆகவே போர்க் குணம் கொண்டு அனைவரும் குறிப்பாக பெண் போராளிகள் களமிறங்க வேண்டும் என்று முழங்குகிறார்.
தாய்மார்களின் வாசிப்பு சாசனத்தின் வழியே தான் எதிர்கால தலைமுறைகளைக் கல்வி ஞானமிக்கவர்களாக வார்த்தெடுக்க முடியும் என்பதையும் வலுவாக வலியுறுத்துகிறார். சாதிய மதவாத ஆண் பெண் ஏற்றத்தாழ்வு மற்றும் உளவியல் வேறுபாடுகள் நிச்சயம் ஒருநாள் இல்லாமல் போகும் வலுவான போராட்டக் களத்தை உருவாக்க வேண்டும் என்றும் உரத்து உரைக்கிறார் தோழர்.
சாதிகளின் வீச்சு அல்லாது அதிகாரம் குறைந்திருக்கிறதா என்கின்ற கேள்வியையும் இங்கு முன்வைக்கிறார்.
சாதியில் ஆதிக்க வீச்சு மேலும் மேலும் அதிகரித்து வருவதை நகர்ப்புற தேனி பகுதியில் சுடுகாட்டுக்கு வழி கேட்டுப் போராடும் தலித் மக்களின் போராட்டம் உறுதிபாடற்ற அரசியலைக் கொண்ட அரசின் மெத்தன போக்கால் பிரச்சனைக்கான தீர்வு இன்றளவும் வழங்கப்படாததை எடுத்துரைக்கும் பல களநிலவரங்களை சாட்சிப் படுத்துகிறார் சீருடையான் அவர்கள்.
ஒற்றை தெய்வ வழிபாடு ஆட்சியாளர்களுக்கு உகந்ததாய் இருப்பதில்லை. ஆகவே ஒரே மதத்திற்குள் இரு கடவுள்களைப் பிரதிஷ்டை செய்து உள்மதப் புரட்சியை உண்டாக்குகின்றனர் என்றும் மதம் என்னும் தத்துவம் செயலிழந்துப் போகும்போது கடவுள் என்பவர் தானாகவே காணாமல் போவார். அன்பும் சமத்துவமும் தான் கடவுள் .அந்த கடவுள் நிலை பெறும் போது மனித விரோத கடவுள்கள் இல்லாமல் போய்விடுவர் என்கின்ற கடவுள் பற்றிய தோழரின் சமயோகிதப் பார்வை பல மூடமதவாத சக்திகளின் நீட்சியாக உருப் பெற்ற கடவுள்களின் வெவ்வேறு தோற்றம் பற்றிய பல புரிதல்களைப் புலப்படுத்தும் பக்கங்களாக விரிகிறது தோழரின் கடவுள் பற்றிய சமயோசித்தப்பார்வை.
கூடுதலாக மதம் பற்றிய தோழரின் இரு பக்க அளவிலான விளக்கங்கள் ஆழ்ந்த புரிதல்கள். மதம் ஆட்சியாளர்களின் ஆதிக்க வாத கருவிகளில் ஒன்று என்பது பக்க உரையில் அடிக்கோடிய வரிகள்.
உழைப்பை மேம்படுத்தும் இயற்கைச் சார்ந்த நம்பிக்கை, பிற மனிதருக்குத் தீங்கு செய்யாத ஆன்மீக நம்பிக்கை, மூலதனத்தை வளர்த்துப் பிரபஞ்ச வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கும் அதீத நம்பிக்கை என மனித நம்பிக்கைகளை மூன்று வகையாகப் பகுத்துப் பிரித்துள்ளார் தோழர். நம்பிக்கை மீதான அவரின் மாறுபட்ட பார்வை இன்றைய தலைமுறையினருக்குப் பல நித்தியங்களை உணர்த்தி அசாத்தியங்களை சாத்தியமாக்கும் ஒளியில் பயணப்படுத்துகின்றன.
இன்றைய தலைமுறையினரின் வாசிப்பு சுருங்கியுள்ளதால் எதிர்கால வாசிப்புக் கேள்விக்குறியாகி வருவதையும் நூலகங்களும் பதிப்பகங்களும் பேய் வீடு போல பாழடைந்துப் போக உள்ளதையும் பெருத்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் தோழர்.
இன்றைய நவீன காலம் மதவாதமும் வாழ்க்கையை தேடும் விரக்தி மனோபாவமும் ததும்பும் படைப்புகள் குறிப்பாக கவிதைகள் ஏராளமாகப புரள்கின்றன என்பதையும் சில பல கவிதை வரிகளைக் கொண்டு எடுத்துக்காட்டியுள்ளார்.
அரசியலற்ற படைப்பு சாத்தியமா என்கின்ற கேள்வியொன்றிக்கான விளக்கமாகச் சமுதாய இயக்கத்தையும் வளர்ச்சியையும் தனி மனித ஒழுக்கத்தையும் நெறிப்படுத்தும் அறக்கோட்பாடே அரசியல். மனித வாழ்விற்கு உத்தரவாதம் தரவேண்டியது அரசின் பொறுப்பு. ஆதிக்க வாதமும் அடிமை சிந்தனையும் இருக்கும் வரை எதிர் அரசியல் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கும். ஆக, அரசியலற்ற படைப்பிற்குச் சாத்தியமில்லை என்றும் அதுபோக இயந்திரங்களே உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன. அவை மனிதனின் இயற்கை உணர்வை நுகர்வு உணர்வாக மாற்றியமைக்கின்றன. நுகர்பவன் தேய்கிறான் உற்பத்தியாளன் வளர்கிறான். இவ்விரு புறங்களில் ஏதாவதொரு புறம் இருக்க வேண்டிய அவசியத்தில் உருவானதே அமைப்பு. ஆக, இந்த சமத்துவமற்றப் பின்னடைவைச் சமன்படுத்த அமைப்பு ஒன்றில் இணைந்திருப்பது அவசியம். அமைப்பு தான் இலக்கு நோக்கிய பயணத்தை எளிமையாக்குகிறது. எழுத்தாளனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அமைப்பு அத்தியாவசியமான ஒன்று என்று ஆணித்தனமாக அழுந்த கூறுகிறார் சீருடைான் அவர்கள்.
தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்ததை வரலாற்றுச் சம்பவமாக நினைவு கூரும் தோழர்,நண்பர் தேனி பாலன்அவர்களின் வழியாக தோழர் அல்லி உதயனின் நட்பு கிடைத்ததையும் அவர் மூலமாக அல்லி நகரத்தில் அப்போதே தொடங்கிய தமுஎகசவின் அல்லிநகரக் கிளையில் உறுப்பினராக இணையும் வாய்ப்புக் கிடைத்ததையும் தொடர்ந்து இயக்கத்துடன் ஒன்றிணைந்துச் செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டுப் பேசிய தோழர் தமுஎகச வின் கிளை மற்றும் மாநில அளவுகளில் நடைப்பெற்ற நிகழ்வுகளில் ஏற்பட்ட பல்வேறு மறக்கவியலா சம்பவங்களை நினைவுஅடுக்குகளிலிருந்து மீட்டெடுத்து வழங்கினார்.. ஒவ்வொரு அனுபவங்களையும் வரிசைப்படுத்தித் துல்லியமாகத் தேதி முதல் கொண்டுப் பகிர்ந்துள்ளது தோழரின் இயக்கத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
போக, வயோதிகம் என்பது உடலுக்கு மட்டுமே மனம் எப்போதும் இளமையின் காலங்களை மீட்டெடுக்கும் நினைவாற்றலின் விசேஷ பெட்டகம் என்பது தோழரின் ஞாபகத் திறன் புலப்படுத்துகிறது .
சாதாரண மனிதர்களுக்கு இலக்கியத்தின் அவசியத்தை சில பக்கங்களில் எடுத்துரைக்கும் தோழர் மனித இனத்தை அணி திரட்டுவதற்கான முதல் முயற்சி கலையும் இலக்கியமும்.மனிதன் மரணம் அடைவான். இலக்கியம் அதன் தேவை நிறைவேறும் வரை ஜீவித்துக் கொண்டே இருக்கும். புரட்சியை உருவாக்குவதில் முதல் நிலைக் காரணங்களில் ஒன்று இலக்கியமும் மேடைப்பேச்சுமே. புரட்சி வெற்றியடையும் போது சாமானிய மனிதன் தனக்கான உரிமையை பெறுகிறான். சமத்துவ வாழ்க்கையைத் தனதாக்கிக் கொள்கிறான். இதுதான் இலக்கியம் சாமானிய மனிதனுக்குச் செய்யும் வேலை என்ற வரிகள் கொண்ட பக்கங்கள் வெறும் வெற்றுப் பேச்சிற்காக மொழிந்தவை அல்ல சொந்த வாழ்க்கையில் இலக்கியத்துடனான இணக்கம் தந்த அனுபவங்களின் ரசம்.
இவ்வாறான அனுபவச் செறிவுகள் பல உள்ளொடுக்கிய பொக்கிஷசாலையாக தோழர் தேனி சீருடையான் திகழ்வதே தமிழ் செம்மலாக இன்று தமிழிலக்கியவுலகில் வெளிச்சப்படுத்தியுள்ளது.
தனிமை துயரத்தைப் போக்கும் அற்புத மருந்து வாசிப்பு. ஆகவே நிறைய புத்தகங்கள் வாசியுங்கள் வாசிக்க வாசிக்க மனம் விசாலப்படும்.நேர்த்தியாக எழுதுவதற்கான பாதையை விரிவுபடுத்தும். வாசிப்பவர்களால் மட்டுமே நேர்த்தியாகவும் நிறைவாகவும் எழுத முடியும் என்கிற வாசிப்பின் அவசியத்தை மேன்மையை மகத்துவத்தை வளரும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இன்றைய வாசிப்பில் ஆர்வம் கொண்ட தலைமுறையினருக்கும் எடுத்துரைக்கிறார்.
போக,இலக்கியப் பிரவாகத்தில் அலை மோதிக் கிடக்கும் பல ஆகச் சிறந்த படைப்பாளிகளின் ஒப்பற்ற படைப்புகளை தமது கலந்துரையாடலில் அடிக்கோலிட்டு வரிசைப்படுத்தியுள்ளார். தொய்வின்றிய ஆர்வத்தில் வாசிப்பு அக்கறைக் கொண்ட முனைப்புடன் ஏராளமான நூல்களை வாசகப் பரப்பிற்கு வாசிப்பின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல அரிய பெரிய நூல்களை நூலாசிரியர் பெயர் சுட்டி அறிமுகப்படுத்தியுள்ளது தோழரின் இலக்கியத் தன்னார்வத்திற்கான சார்பு கருவூலம்.
அயல்மொழி இலக்கியங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைப் பற்றிப் பகிர்ந்துள்ள பகுதிகளில் ரஷ்ய இலக்கியங்கள் சென்ற நூற்றாண்டில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலக்கியம் செழுமை அடைந்ததை இங்கு பாராட்டும் தோழர், மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்க்கும் மொழியிலும் பெயர்ர்க்கப்படும் மொழியிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும் என்று மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களின் மொழிப்புலமையை விதந்தோத்துகிறார். கூடுதலாக, நகைச்சுவை இலக்கியம் படைப்பதும் அசாத்தியமானது என்று அறிவுறுத்தும் சீருடையான் அவர்கள் சிறுகதை எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன், எழில்வரதன், சுரேந்திரநாத், ஜான் சுந்தர் போன்ற ஆளுமைகள் நகைச்சுவைத் ததும்ப எழுதி வருவதைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
சமகாலப் படைப்பாக எழுத்தாளர் அ.உமர்பாரூக் அவர்கள் எழுதிய “சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்” நாவல் நகைச்சுவை உணர்வை ஆங்காங்கே மேலோங்கச் செய்யும் புதினமாகப் பேசப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
உழைப்பது,உழைப்பின் வழியே அன்பு செய்வது. சுதந்திர உணர்வுகளை உள்வாங்கி மனிதகுலம் வகுத்துத் தந்த அறக்கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து நிற்பது என்பதே உழைப்பு சார்ந்த தனது வாழ்க்கை கற்றுத்தந்த அனுபவப் பாடமாக இங்கு நேர்காணலில் பகிர்ந்துள்ள தோழர் தேனி சீருடையான் அவர்கள் உழைப்பு தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது என்பதை வாழ்வியல் அனுபவச்செய்தியாகச் சமூகத்திற்குப் பிரகடனப்படுத்துகிறார்.
ஏழு சிறுகதை தொகுப்புகள் ஐந்து நாவல்கள் ஒரு கட்டுரை நூல் என் இலக்கியவுலகிற்கு தமது விரல் நுனியில் பெயர்ந்த பளிங்குக்கற்களைத் தொய்வின்றி வழங்கிக் கொண்டிருக்கும் தோழரின் ஆகச்சிறந்த எழுத்து வரப்பின் முத்தாய்ப்பான படையல்களாக “கடை” நாவலும், பல விருதுகளால் கௌரவிக்கப்பட்ட “நிறங்களின் உலகம்” நாவலும் வாசக மனதை வசப்படுத்திய புதினங்கள்.
வாழ்க்கையில் இருந்து பிறந்து வாழ்க்கையைக் கண்டுணர்ந்து வாழ்க்கையை ஒரு படி முன்னேற்ற உதவும் யதார்த்தவாத கோட்பாடே தமது இலக்கியக் கொள்கையாகக் கடைப்பிடித்து வரும் தோழர் தேனி சீருடையான் அவர்கள் விருதுகள் பலவற்றிற்குச் சொந்தக்காரர்.
சக மனிதர்களின் வலிகளையும் உணர்வுகளைக் கண்டாய்ந்துப் படைக்கும் படைப்பாளிகளின் எழுத்துக்கள் வெறும் உணர்வுப் பகிர்வு. ஆனால் தோழரின் படைப்புகள் ஒவ்வொன்றும் சொந்த அனுபவங்களின் சாரல். வாழ்க்கை படுத்திய வலிகளின் ஆற்றாமையை அதிகமாகப் பேசும் தத்ரூபங்கள்.. அநேக புனைவுகள் தன்னிலிருந்தே ஜீவித்தெழுந்தவை. சமபாலினர் நுண்ணுணர்வுகளைச் சரமாரியாகப் பேசியவை… அவற்றில் தமிழையும் தன்னையும் தனித்த பாணியையும் கலந்து உருவான உயர்கலசங்கள்…. தோழரின் சரிதையை அறியும் காலக்கண்ணாடியாகத் திகழ்ந்த அறம் கிளைத் தோழர் பேகன் அவர்களின் பட்டவர்த்தனமான கேள்விகள் சீருடையான் அவர்களின் பொருள் ஆதாரப் புலனை மட்டுமல்ல இலக்கிய ஆதார புலமையையும் அறிய உதவுகிறது.
எழுத்தாளருக்கே உரித்தான சொத்தாக ஏழ்மையும் வறுமையும்…. இனியேனும் விலகி விடியட்டும்.. எழுத்து விலைமதிப்பற்றவை என்பது எத்தனை நித்தியமோ..
அதே போல எழுத்தாளனும் விலைமதிப்பற்றவன்…. என்பதும் நிதர்சனம்.
இலக்கிய விண்வெளியின் விடிவெள்ளிகளான எண்ணற்ற எழுத்தாளுமைகளின் இருண்ட பாலைவனப் பள்ளங்கள் பசுமை நிறைந்த சோலைகளாகத் துலங்கப்படும் இனி….
என்கிற பேரெதிர்பார்பார்ப்பும் பெரு அவாவும் உருத்தெழ ஒரு வாசகியாக எனது ஆதர்ச ஆளுமைகளில் ஒருவரான தோழர் தேனி சீருடை யான் அவர்களின் சரித்திர சித்திரத்தில் சிலவற்றையாவது வாசித்துத் தொகுக்க வார்த்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமுஎகச அறம் கிளைக்கு நன்றியுரைத்து பெருமிதத்துடன் பங்கிடுகிறேன்..
நன்றி..
நூல் அறிமுகம்: தொ.பரமசிவனின் சாதிகள் உண்மையுமல்ல… பொய்மையுமல்ல… (நேர்காணல்கள்) – சு.பொ.அகத்தியலிங்கம்
தொ.ப வை வாசிக்க ஓர் திறவுகோல்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் எழுபதாவது அகவையில் நம்மை விட்டுப் பிரிந்தார் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் . அவரின் சிந்தனைப் போக்கையும் எழுத்துகளையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் எளிய நூல் “சாதிகள் : உண்மையுமல்ல …பொய்மையுமல்ல…,” [ நேர்காணல்கள் ].
13 நேர்காணல்களின் தொகுப்பு . தொ. பரமசிவன் என்கிற பேராளுமையை நேர்காணல் செய்த ஒவ்வொருவருமே முத்திரை பதித்த ஆளுமைகளே . ஆகவே இந்நூல் பல கோணங்களில் தொ. பரமசிவத்தின் பண்பாட்டு நோக்கு , திராவிட இயக்கம் , தமிழ் தேசியம் ,
பெரியார் , கோவில் , சாதி , தமிழ் பண்பாட்டு வரலாறு இவற்றை மக்கள் வாய்மொழித் தரவுகளோடு ஆழமாகவும் அகலமாகவும் விவாதிக்கும் நூலாகிவிட்டது .
இந்நூலை திறக்கும் போது சிந்தனைக்கான பல புதிய வாசல்கள் திறக்கும் ; நூலாசிரியரோடு உடன்பட்டும் முரண்பட்டும் நிறைய கேள்விகள் எழும் . அதுவே இந்நூலின் வெற்றி .
தொ. பரமசிவன் வழக்காமான எழுத்துமொழி சார்ந்த ஆய்வினின்று விலகி வாய்மொழி வழக்காறுகள் என மக்கள் வாழ்வோடு ஊடாடி புதுதடத்தில் பயணித்தவர் . ”எழுத்து என்பதே அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.” என திரும்பத் திரும்பச் சொன்னவர். அழகர்கோயில் சார்ந்து இவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு பெரிதும் பேசப்பட்டது .
இவர் பெரியாரை பெரிதும் முன்னிறுத்துகிறார் . அதே சமயம் கோயில் சமயம் நாட்டார் வழிபாடு குறித்து பெரிதும் ஆர்வம் காட்டுகிறார் . அதேபோல் , “ நான் தமிழ் தேசியர்தான்” என்று சொல்லும் போதே, “ நான் இந்து அல்ல” என பகீரங்கமாக அறிவிக்கிறார் . திராவிட சித்தாந்தம் குறித்து ஓர் வித்தியாசமான பார்வையை முன் வைக்கிறார் . அதே நேரம் கம்யூனிஸ்டுகளின் மீது சில நியாயமான விமர்சனங்களையும் சில மேலோட்டமான நியாயமற்ற விமர்சனங்களையும் வைக்கிறார் . அவை பெரும்பாலும் பேட்டி கண்டவர்கள் இவர் வாயிலிருந்து பிடுங்கியதாகவும் உள்ளன.
பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்களாக இருப்பதால் பலவற்றில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கேள்விகளும் பதிலும் இடம் பெறுவதால் ஆரம்பத்தில் இந்நூல் சிறிது சோர்வு தட்டுகிறது . ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கேள்விகளும் இருப்பது புரிதலை மேம்படுத்துகிறது . “ மொழிக்கல்வியும் மதிப்பீடுகளும்” என வ. கீதா , கோ. பழநி செய்த நேர்காணலும் , “ கோட்பாட்டுரீதியான பிரச்சனைகள்” எனும் தலைப்பில் சுந்தர் காளி மேற்கொண்ட நேர்காணலும் புதிய கோணத்தில் பார்வையை ஆழமாக விரிக்கிறது . கால்டுவெல் குறித்த நேர்காணலும் ,
ச. தமிழ்ச்ச்செல்வன், அ. முத்துலிங்கம் ஆகியோரின் நேர்காணல்களும் இன்னொரு கோணத்தை வெளிக்கொணர்கிறது . விரிவஞ்சி ஒவ்வொரு நேர்காணலையும் இங்கு நான் சுட்டவில்லை.
பெரியாரைப் பற்றி பல மதிப்பீடுகளைச் சொல்லிச் செல்கிறார் ,” பார்பனியம் கோலோச்சி நின்றபோது , ‘பார்ப்பான்’ என்ற சொல்லையே இழிசொல்லாக மாற்றிக் காட்டியதுதான் பெரியாரின் சாதனை . அவருடைய வெற்றி, அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொண்டிருந்தது.” என்பது அதில் ஒன்று .
நீங்கள் பெரியாரை போற்றுகிறீர்கள் ஆனால் கோயில்களை ஆராய்ச்சி செய்கிறீர்கள் ஏன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் போது ,” எனக்கு தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவற்றை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது ; நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். கோவிலுக்கு போகும் அனைவரும் தினசரி சிவபூஜையோ விஷ்னுபூஜையோ செய்கிற மக்கள் அல்ல. கோவில் என்பதும் திருவிழா என்பதும் நிறுவனங்கள். திருவிழாக்களின்றி ஓர் சமூகம் இயங்க முடியாது .” என்கிறார்.
நாட்டார் சடங்குகள் விழாக்களில் காணப்படும் ஒரு வித ஜனநாயத்தன்மை ; நிறுவன மதங்களில் விழாக்களில் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார் . பல்வேறு அவைதீக மதங்களின் செல்வாக்கு ஓங்கியதையும் தேய்ந்ததையும் வெறுமே மூடநம்பிக்கை , ஆதிக்கம் என கடந்து போகாமல் , மக்களின் வாழ்வியல் தேவையோடு இணைந்து பார்த்துள்ளார் .
மதம் , கோவில் , சடங்கு , நாட்டார் வழிபாடு என பலவற்றை பண்பாட்டு அசைவாகக் காணும் இவரின் பார்வையில் உடன்படவும் முரண்படவும் இடம் உண்டு .
திராவிடப் பண்பாடென்பதை , நான்கு மாநில பொது பண்பாடென சொல்லிச் செல்லும் போது ; 1] தாய் மாமனின் முக்கியத்துவம் ,
2] இறந்தவரை தொட்டு சடங்கு செய்தல் 3] பெண்களை பொதுவெளியில் அடிப்பதை சகிக்காமை என சுருக்கிவிடுகிறாரோ ? சில இடங்களில் தாய் தெய்வ வழிப்பாட்டை இம்முன்றில் ஒன்றாக வைக்கிறார் .
சாதியை பொதுவாக எதிர்த்த போதிலும் அகமண முறையே சாதி நீடிப்பின் மையம் என்பதை போகிற போக்கில் ஒப்புக் கொண்டாலும் தாய்மாமன் உறவு சார்ந்த பெருமிதம் சாதிக்கூட்டுக்குள் திருமண பந்தத்தை திணிப்பதல்லவா என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது .
சாதியைப் பற்றி நிறைய பேசுகிறார் . உண்மையுமில்லை… பொய்மையும் இல்லை என ஒரு நிலை எடுக்கிறார் .” சாதி ஒழிப்புப் பற்றிய நம் பார்வை எல்லாம் அடிப்படையில்லாத ஆர்வக்கோளாறுகளே” என்கிறார். மேலும்,” சாதி ஒழிப்பு என்பதை , ஏதோ கொசு ஒழிப்பு போல சுலபமாகப் பேசமுடியாது . சாதி என்கிற அமைப்பு அவ்வளவு எளிமையானது கிடையாது . சாதியை ஒழிக்க முடியாது ஆனால் சாதியைக் கரைக்க முடியும்.” என்கிறார் . கொசுவையும் ஒழிக்க முடியவில்லையே , எல்லாவிதமான கொசு அழிப்பு மருந்துக்கும் தன்னை தகவமைத்து மீண்டும் மீண்டும் புதிதுபுதிதாக உற்பத்தியாகிறதே. கிட்டத்தட்ட சாதியும் அப்படித்தானோ ? இவை ஆழமான விவாதத்துக்கு உரியவையே !
“ஒன்றே குலம், ஒருவனே தேவன் “ என்பதும் பன்மைக்கு எதிரான பாசிசக் குரலே என போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் தொ.ப . “ ஒரு நாடு , ஒரு மொழி , ஒரு கலாச்சாரம்” என்கிற குரல் பலமொழி பல பண்பாட்டை எதிர்ப்பதால் அதை பாசிச முழக்கம் என்பது மிகச்சரி ; ஆயின் சாதி வேற்றுமை , மத மோதல் இவற்றைத் தவிர்க்க “ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்பது எப்படி பாசிசமாகும் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது .
“மொழித் தூய்மைவாதம் ஓர் எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான் போய்முடியும்,”எனவும் , “ மொழி மாறும் தன்மையுடையது; மாறுவதனால்தான் அது உயிரோடு இருக்கிறது,”எனவும் சரியாகவே மதிப்பிடுகிறார் . திராவிட இயக்கம் தமிழுக்கு கொடுத்த சொற்கொடை குறித்து பெருமிதம் கொள்ளும் தொ.ப, பொதுவுடைமை இயக்கம் தமிழுக்கு அளித்த சொற்கொடை குறித்து பேசவில்லை . தமிழில் அறிவியல் நூல்களை கொண்டுவந்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய என்சிபிஹெச் பற்றி தொ.ப நன்கு அறிவாரே ! ஏனோ தெரியவில்லை அது குறித்தெல்லாம் பேசவில்லை. “ பொதுவுடைமை வளர்த்த தமிழ்” எனும் என் [சு.பொ.அ] நூல் இது பற்றி நிறைய பேசுகிறது . தோழர்கள் தேடி வாசிக்கவும்.
பெரியாரை “எதிர் பண்பாட்டாளராக” தொ.ப காண்கிறார் . ”எதிர் பண்பாட்டின்” தேவையை வற்புறுத்துகிறார் . அனைத்து விதமான ”ஆதிக்க பண்பாடுகளுக்கும்” எதிராக ஓர் ”மாற்றுப் பண்பாட்டை” கட்டி எழுப்ப வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது . அதற்கான சிந்தனை வாசலை அகலத்திறக்கவும் ; எதிரும் புதிருமான கேள்விகளை எழுப்பி விடைதேடவுமான காலகட்டத்தில் இந்நூல் வந்திருப்பது பாராட்டுக்குரியது .
இன்னும் பேசப் பேச நீளும் . இந்த நேர்காணல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொ.ப குறித்து எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது . வந்துவிடக்கூடாது . நேர்காணல் என்பதால் கேள்வி கேட்பவரின் பார்வைக் கோணம் ; கேள்விகளிலும் பதில்களிலும் நிச்சயம் இருக்கும் . எனவே தொ.ப வின் எழுத்துகளையும் ஆக்கங்களையும் தேடிப் படிப்பதே சரியான விவாத களம் அமைக்க உந்தும். இந்நூல் அவற்றை தேடி வாசிக்க ஓர் திறவுகோல் .
நூல் : சாதிகள் : உண்மையுமல்ல… பொய்மையுமல்ல…, [ நேர்காணல்கள் ]
ஆசிரியர் : தொ.பரமசிவன்
விலை : ரூ. 270 /-
பக்கங்கள் : 232
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி]லிட்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
சு.பொ.அகத்தியலிங்கம்.
4/9/2022.
முகநூல் பதிவிலிருந்து
புதிய புத்தகம் பேசுது – செப்டம்பர் மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022
புதிய புத்தகம் பேசுது – ஆகஸ்ட் மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: தமுஎகச மாநாடு வெல்லட்டும- ஆசிரியர் குழு
♻️ புத்தகக் காதல் 8: என் புத்தகங்கள் நீரைப் போன்றவை – ச.சுப்பாரவ்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் நானும்… – இயக்குநர் ஞான ராஜசேகரன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: தமுஎகச வின் கோட்பாடும் எனது கலையின் வெளிப்பாடும்! – இயக்குநர் சீனு ராமசாமி
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: கலை இரவும் நானும் – சைதை சா.துரைசாமி
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 20: வாசிப்பும் சேமிப்பும் – எஸ். வி. வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: ஆனந்தவல்லி – ஸ்ரீதர் மணியன்
♻️ அஞ்சலி: தோழர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி – இரா. தெ.முத்து
♻️ நேர்காணல்: நாங்கள் காண்பது கூட்டுக் கனவு… மதுக்கூர் ராமலிங்கம் சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்
♻️ தமுஎகச மாநில மாநாடு 15: 2018 – 22ஆம் ஆண்டுகளில் வெளிவந்த தமுஎகச படைப்பாளிகளின் படைப்புகள்
♻️ நூல் அறிமுகம்: மதஎந்திரங்களை உருவாக்கும் RSS எனும் உளகளாவிய அச்சுறுத்துல் – ஜமாலன்