இசை என்னும் அரசியல் (கானா இசை அரசியல்!) -12 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

இசை பற்றிய சொற்களும், இசையும், விமர்சனம் என்னும் உரைகளால் பாதிக்கப்பட்ட கலாச்சார பணி என்பது பல்வேறு நூல்களால், இதழ்களால், செய்தித்தாள் பதிப்பவர்கள், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் கச்சேரி, இடையில் நடைபெறும் உரையாடல்கள், வார்த்தைகள் சொற்கள் பற்றிய பணியை  முன் வைத்து செய்கின்றனர் காரணம் அவை வெறுமனே பேசு பொருட்களாக   இருக்கின்றன என்பதை பிரதிபலிப்பதில்லை கொஞ்சம் விரிவாக  சொன்னால் மொழி வெறுமனே எதார்த்தத்தை பிரதிபலிப்பதை விட அது  இனத்தை கட்டமைக்கிறது.

 நாம் இசை பற்றி பயன்படுத்தும் மொழிகள், அதைப்பற்றி சொல்லும் கதைகள் ஆகியவை இசை என்றால் என்ன? நாம் அதற்கு என்னவாக இருக்கிறோம்,அது நமக்கு என்னவாக இருக்கிறது என்பதை நிர்ணயிப்பதில் துணைபுரிகின்றன என்பதை இதற்கு அர்த்தம்.  உதாரணமாக உண்மை என்று நாம் சொல்லும் சிந்தனையில் பொதிந்துள்ள கருத்துக்கள் இசையிலேயே அமைந்தவை அல்ல. நாம் அவற்றை அங்கேயே விட்டதால் அங்கு இருக்கின்றன.  இசையை பற்றி நாம் சிந்திக்கும் விதமும், இசையை நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பாதிக்கிறது. எனவே இது ஒரு வட்டப்பாதை, பொருள்களைப் பற்றி இப்படி நாம் சிந்திப்பதில்லை. தொடர்ச்சியாக  இசை ஆயினும் வேறு எந்தத் துறையை ஆயினும் நாம் மரபுகள்  கொண்டு உண்டாக்குகிறது. 

இன்றைய உலகில் இசை என்னும் சிறிய வார்த்தை குறிக்கின்ற வெவ்வேறுபட்ட நடைமுறைகளையும், அனுபவங்களையும் எடுத்துரைப்பதற்கு நாம் கடந்த காலத்திலிருந்து இசை பற்றிய மரபுவழியாக பெற்றிருந்த மற்றும் சிந்திக்கும் முறை போதாது என்பது தான் இந்த  கட்டுரையின் முக்கியமான செய்தி.

மின்னம்பலம்:சென்னையில் தமிழ் இசை ...

 நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் இசை பற்றி ஒரு நூலை வெளியிட்டது  அப்போது இசை என்ற சொல்லில் இருந்து குறிப்பிட்ட நிலைத்தன்மை இப்போது இல்லை.  இசை என்பது அப்போது ஐரோப்பிய கலை மரபு கவனம் குவித்து வல்லுநர்களாக பீத்தோவன் ஆகியோரின் படைப்புகளை குறித்தது என்ற எழுத்து இசை வரலாற்றில் கொண்ட முக்கியத்துவம் பற்றி இதுவரை திருப்திகரமாக ஆராயப்படவில்லை என்று கூறுகிறார் கூக் . 

இந்த மரபுக்கும், வரலாற்றுக்கும்,  முன்னோடிகள் இருந்தனர் இதற்கு மாறான விந்தை கவர்ச்சி உள்ள சில சமயங்களில் எதிர்பாராத விதமான சேர்க்கை நடைமுறைகள் உலகில் வேறு இடங்களில் இருந்து வந்தன. ஆனால் இசை என்ற கருத்து குறிப்பிட்ட இசை படைப்புகளில் தொகுதியில் உறுதியாக நிலை கொண்டுள்ளது அதனால் குறிப்பிட்ட இடத்திலும், காலத்திலும் வேரூன்றி உள்ளது. 

இந்த விசித்திரமான படைப்புகள் என்ற வார்த்தை  முதல் உலகப் போருக்கு முந்தைய நூற்றாண்டில் மேற்கத்திய நாகரீகத்தில் ஐரோப்பிய மைய தன்மையை மட்டும் குறிக்காமல் அதை விட ஆழமாக வேற எதையோ குறிக்கவும் செய்தது. இந்த கலாச்சாரத்தின் அடியில் புதைந்து இருப்பதையும் அது பிரதிபலித்தது பொருட்கள் உற்பத்தியின் அடிப்படையில் அமைந்த செவ்வியில் தொழில்சார் பொருளாதாரம் பிறகு விநியோகம் செய்யப்பட்ட முறை இறுதியாக அவற்றை வாங்கிய பொதுமக்கள் அவற்றை நுகர்வது.

 இதே மாதிரி முறையில்தான் இசையும், இசை அமைப்புகளையும் உற்பத்தி செய்வது பற்றியதாக கருதப்பட்டது இந்த அமைப்புகள் பிறகு நிகழ்த்தப்பட்டன அவை பிறகு கேட்கும் பொது மக்களால் அனுபவிக்க க்கப்பட்டன. அனுபவித்தல் என்பது கேட்டு சந்தோஷப்பட்டு ரசித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. சுருங்கச்சொன்னால் இசை கலாச்சாரம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இசைப் படைப்புகள் என்று கருதப்பட்ட அவற்றை உற்பத்தி செய்த பிறகு அவற்றை நிகழ்வுகள் வாயிலாக வினியோகம் செய்தவர்களும் சேர்ந்த நடைமுறையை முன் நிறுத்தியதாக கருதப்பட்டது.

பெப்பர்ஸ் டிவியில் தூள் கிளப்பும் ...

இந்திய இசை மரபில் குறிப்பாக கானா என்ற தத்துவ பாடல்கள். இது குறிப்பிட்ட ஒரு வட்டார வழக்கு இசையாகும் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக தமிழகத்தை அவர்கள் பிரித்தது என்று இருவேறு நகரங்களாக பிரித்ததை நம்மால் பார்க்க முடியும். இன்று கருப்பர் நகரமாக அல்லது வட சென்னை ஆக அல்லது குடிசை பகுதிகளில் இன்றும் காணப்படுகிறது. 

இசை எப்படி பார்க்கப்பட வேண்டும் என்ற முடிவை எடுப்பது என்பது  அந்த இசை எங்கிருந்து வருகிறது என்ற சூழலை அறிந்து, அந்த இசையின் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி, பின்னுக்கு தள்ளிவிடுவது அல்லது சமூகத்தால் புறக்கணித்து விடுவது. இந்நிலை இன்றும் தொடர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடியும். 

அந்த சொல்லாடல் தமிழர்கள் மத்தியில் “காணம்” என்கிற வார்த்தையிலிருந்து பிறந்ததாக சொல்லப்படுகிறது.  அதைத்தான் வட மாநிலத்திலும் கானா என்றாள் பாடல் என்று குறிக்கின்ற அர்த்தத்தைத் தருகிறது. கேரளத்திலும் காண மேளம் என்றால் அவர்களுடைய அழகியலை முன்வைத்து பாடுபடுகிறார் பாடல்களை காண  என்று அழைக்கப்படுகிறது.  

இன்றைய கானா: தரையிலிருந்து ...

இப்படித்தான் தன்னை சுற்றி உள்ள நிகழ்வுகளை,தொழில்களை, பிரம்மாண்டங்களை அவர்களை சுற்றி நிகழ்கிற பல்வேறு சம்பவங்களை குறித்து ஒரு இசை வெளிப்படுத்துகிறது என்றால்  அது மக்களுக்கான இசை.  ஒரு இசையில் கலப்பு இல்லாத, எதார்த்த இசையை முன்வைக்கிற  சூழலாக கானா அமைகிறது. 

குறிப்பாக கானா பாடல்களில் ஒரு அழகியல் இருக்கும், அதைப்போல் செய்தி இருக்கும் ஏதோ ஒரு கருத்தை மையப்படுத்தி அவருடைய பாடல்கள் தொடர்ந்து முன் வைத்துக்கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடியும்.  இது ஏதோ ஒரு இலக்கியத்தின் தொடர்ச்சி என்பதை நாம் நினைவு கூற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குஜிலி இலக்கியம் சென்னை மாநகருக்கு தொழிலுக்கு வந்த பல்வேறு நபர்கள் ஏதோ ஒரு ராகத்தின் அடிப்படையில் எழுதி விட்டுச் சென்ற ஒரு இலக்கியமாகக் கருதப்படுகிறது. அதனுடைய தொடர்ச்சியாக கூட கானாவை நாம் பார்க்க முடியும்.  இந்த கானா பாடல் கலைஞர்கள், எழுதுகிற கலைஞர்கள்,  இசைக்கலைஞர்கள் உருவான சூழல் என்பது எதார்த்தத்தை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது. 

 கானா பாடல் வட சென்னையிலிருந்து   வட தமிழகம் வரை பரவிக் கிடப்பதை நம்மால் பார்க்க முடியும்.இன்றைக்கு தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு  தனித்துவமான  இசை வடிவம் கானா பாடல்கள். கலைஞரின் உடல்மொழியை  பார்த்தோமானால் அவர்களின்  தொழில் என்பது வேறு,  கலை என்பது வேறு, என்பதில் தெளிவாக இருக்கக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள்.

பெப்பர்ஸ் டிவியில் தூள் கிளப்பும் ...

 தான் ஒரு மூன்று சக்கர ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்தாலும் கூட அவரினுடைய  மரபு கானா பாடல் என்பதை மறந்து விடுவதில்லை. அப்படி பல்வேறு சம்பவங்களை முன்னிறுத்துகிற ஒரு இசை வடிவம் தான் கானா.  அவர்கள் பயன்படுத்துகிற சொற்கள் என்பது அவர்களின்  வட்டார வழக்கை மையப்படுத்தி கொண்டதாக அமைகின்றது. அர்த்தமே இல்லாத வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதால் இன்றைக்கு சமூகத்தால் அவர்கள் மீது குற்றசாட்டு வைத்து, புறந்தள்ளப்பட்டு, ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடிய மனோபாவத்தில் சமூகம் செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. 

அதில் அவர்கள் பயன்படுத்துகிற சொற்களும், அதற்கான அந்த இசை வடிவமும், இந்த குரலும் இவை மூன்றும்தான் ஒரு பாடலை கானா என்கிற ஒரு அங்கீகாரத்தை பெற்றுத் தருகிறது. மேலும் சமூகம் கானா பாடல்கள், கானா இசையை “ரவுடி இசை” “குத்து இசை ” “பொறுக்கிகள் இசை” என்றெல்லாம் தங்களுடைய மேலாதிக்க வெறுப்பை வார்த்தைகளால் முவைக்கின்றனர்.

  அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள், அர்த்தமற்றது, கொச்சையானது ,  கேலிக்கு உள்ளாக்க கூடியது, என்று ஒரு எதிர் வாதத்தை வைக்கின்றனர்.  சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியில் நன்றாக கீர்த்தனையை பாடக்கூடிய ஒருவரை அழைத்து. அந்த மேடையில் ஒரு கானா பாடலை பாட சொல்லி கூறுகிறார்கள்.  அந்த நபர் அந்த வார்த்தைகளை  உச்சரிப்பது என்பதே அவமானமாக கருதப்படுகிறார். 

இரவு கானா பாடல் - YouTube

காரணம் அவருக்கு ஏற்கனவே ராகங்களை, வார்த்தைகளை பாடத் தெரிந்த ஒரு நபர் ஆனால் இந்த வார்த்தைகளை இந்த ராகத்தை அவர் வாயில் உச்சரிப்பது என்பதே ஒரு பெரிய அவமானமாகக் கருதப்படுகிறது. அந்த வார்த்தைகள் அவர்களின் வீட்டிலும் பயன்படுத்துவார்கள் ஆனால் அவர்  இறுதிவரையில்  தன்னுடைய வாயால் அந்த பாடலை பாடவே இல்லை இது தற்போது உள்ள சூழலை எடுத்துக்காட்டாக பார்க்கிறோம்.

 மக்கள் மத்தியில், அவன் வட்டாரத்தில் என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களோ   அந்த  வார்த்தையை வைத்துத்தான் ஒரு இசை முறையை கட்டமைக்க முடியும்.  அதுதான் மண்ணுக்கு ஏற்ற இசை  என்று தத்துவ அறிஞர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். அப்படி  இல்லை என்றால் அது யாருக்கான இசை  என்று கேட்கிறார் மா சே துங். 

ஒரு கானா பாடகர் தான் அனுபவித்த பல்வேறு நிகழ்வுகளை, தங்களுடைய பாடலில் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கிய ஒரு பாடலை முன்வைக்கிறார்.  அப்படி முன்வைத்த பாடல்கள் இன்றைக்கு நிறைய காணப்படுகிறது.  சிறையை பற்றி ஒரு பாடல் இருக்கிறது என்று சொன்னால் காண வடிவத்தில் மட்டுமே இருக்கிறது . ஒரு சிறை எப்படி இருக்கும், அந்த சிறையில் என்ன மாதிரியான அனுபவங்கள் இருக்கும், அது சிறை எப்படி இயங்குகிறது என்பதெல்லாம் ஒரு ஒரு பாடலில் வழியே அவர்களால் பதிவு செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார்.

Gana singer Stephen shares his view about pullingo song

 அதற்காக சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை சிறைக்கு செல்பவர்கள் குற்றவாளிகள் என்பதை தாண்டி ஒரு சூழல்  தீர்மானிக்கிறது ஒரு மனிதன் குற்றவாளியாக வேண்டுமா, வேண்டாமா? என்கிற ஒரு சூழலில்தான் அவன் குற்றவாளி என்கிற முடிவுக்கு வருகிறது.  ஒரு ஆட்டோ ஓட்டுனர் தங்களுடைய வெளிநாட்டு பயணிக்கு சென்னையைப்பற்றி எடுத்து கூறுவதை போல காட்ட வேண்டும் என்று சொன்னாள் அவர்களோடு பேசிய அந்த வார்த்தைகளோடு அந்த பாடலை பதிவு செய்கிறார்.  பல்வேறு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற அழகான நாடுகள் உலகத்தில் இருக்கிறது. ஆனால்  தான் பிறந்து வளர்ந்து சிறுவயதிலிருந்து பார்த்து பழகிய ஒரு நகரத்தை அழகு என்று பாடுவதற்கு திராணி உடைய ஒரே ஒரு இசை வடிவம் கானா இசை வடிவம் மட்டுமே!

 ஒரு பாடலை “அழகு அழகு அழகு நம்ப சென்னையோ அழகு” என்று ஒரு பாடலை முதலில் இவர்கள்தான் சென்னையை பற்றி ஒரு பாடல் எழுதி, பாடியிருக்கிறார்கள். காவல்துறையின் அராஜகம் தொடர்ந்து செய்து வருகிறார் கையூட்டு ,பொறுப்பு இல்லாத தன்மை போன்றவற்றை வெளிப்படையாக பாடப்படுகின்றன பாடல்களை குறிப்பிட்டு பேச முடியும். 

இன்றைய சூழலில் கானாவின்  தாக்கம் என்பது ஒரு சுதந்திர பாடலாக, யாரும் இதற்கு கட்டுப்பாடு போட முடியாது. அவர்கள் எண்ணுவதே இந்த பாடலில் சொல்வார்கள். இன்றைக்கு சுதந்திர பாடல்கள் என்று வருகிறபோது அது வேறு ஒரு பரிமாண நிலையை பெறுகிறது, மேடையில் பாடுகிறார்கள். மத்திய அரசு உணவு கட்டுப்பாட்டை அறிவித்த பொழுது எந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும் எந்த உணவை நாம் சமைத்து உண்ண வேண்டும் என்கிற ஒரு தனி நபர் தாக்குதலை தொடங்குகிறது. இந்த கலைஞர்கள் தான் அதற்கு பதிலடி கொடுத்தார்கள் பல்வேறு மாவட்ட பல்வேறு மாநிலங்களில் இதற்கான தாக்குதல் தொடங்கியது மக்கள் ஓடி ஒளிந்தார்கள், ஆனால் இவர்கள் கானா பாடகர்கள் மட்டும்தான் “மாட்டுக்கறி” தின்பது அவமானம் என்று சொல்லப்படுகிற இந்த சமூகத்தில் அதை அவமானமாக கருத வேண்டிய அவசியம் இல்லை, அதுவும் ஒரு உணவு என்கிற ஒரு தளத்திலிருந்து மாட்டுக்கறியை மையப்படுத்தி ஒரு பாடலை முன்வைத்தார்கள். அப்பாடல் எழுதிய கானா லோகன் அவர்களின் பிரபலமான  ஒரு பாடலாக இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.

விகடன் on Twitter: ""பணத்தால் ஒருபோதும் ...

 இப்படித்தான் அவர்கள் எந்த இசைக் கலைஞர்கள் எல்லாம் தங்களின்  இனத்திற்காக செயல்பட்டு இருக்கிறார்களோ,  அவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஏற்றுக் கொண்ட ஒரு கலைஞர் பாப் மார்லி. கானா இசை  கலைஞர்கள் பெரும்பாலும் பாப் மர்லே எங்களுடைய முன்மாதிரி என்று சொல்லுகிற பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள்.  காரணம் அவன் மண்ணில் பிறந்து அவனுக்கான பண்பை, கலாச்சாரத்தை, பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்து வந்த பாப் மார்லியின் பின்தொடர்வதற்கான காரணம்,  எங்கள் மண்ணில் நாங்கள் பிறந்து இருக்கிறோம், நாங்கள் வளர்க்கிறோம். எங்களுக்கான தொழில், எங்களுக்கான பண்பாடு, கலாசாரம் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற ஒரு தெளிவான கருத்துகளை முன்வைக்கிறார். தெளிவான கலைஞர்களாக இவர்களை பார்க்க முடிகிறது. 

நல்லவர்களாக கருதப்படுகிறார்கள், இடுகுறிப் பெயர்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  திமிரும், தன்மானமும், உடல் வலிமையும் கூடுதலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.  சேர்ந்தவர்களை விட அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு திமிரும், தன்மானமும், உடல் உழைப்பும் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.  சிறு வயது முதல் முதியவர் வரை இந்தப் பாடல்களில் பல்வேறு தளங்களில் இவர்கள் கொண்டு செல்கிறார்கள்.

 கானா பாடல் இடம்பெறாமல் ஒரு திரைப்படம் கூட வெளிவருவதில்லை காரணம் அந்த இசை இந்த பொழுதுபோக்கிற்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த சமூகம் திரையரங்கில் அந்த பாடல்களை ரசிக்கும் தனிப்பட்ட முறையில் அந்த கலைஞர்கள் தனியாக ஒரு பாடலை பதிவு செய்தால் அவர்களை புறக்கணிக்கும். இதுதான் இந்த சமூகத்தினுடைய நிலைமை மீண்டும் மீண்டும் அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவருடைய மொழியை வைத்து, அவர்கள் பயன்படுத்தும் சொற்களை வைத்து அவர்களுடைய, உருவங்களை வைத்து, அவருடைய தொழிலை வைத்து, தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. 

 

தாக்குதல் என்பது ஏவுகணைகளை வைத்து தாக்குவது அல்ல.  ஒருவரை மாயபிம்பம்  ஆன கருத்தியல்  கட்டுப்பாட்டோடு ஒரு தப்பான ஒரு பிம்பத்தை அவர்கள் மீது கட்டமைக்கும்  பணியை இந்த சமூகம் செய்து வருகிறது.  பல்வேறு விடுதலைக்கான, பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். அரசுக்கு எதிரான பாடல்களின் முன்வைக்கிறார்கள், கருத்துக்களை முன்வைக்கிறார்கள், மதசார்பற்ற கருத்தை முன்வைக்கிறார்கள், உணர்வு எழுச்சி மிக்க பாடல்களையும் முன்வைக்கிறார்கள். 

 இருந்தாலும் கூட அவருடைய மிக முக்கிய பங்கு வகிப்பது என்பது “மரணகானா” அவருடைய வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைகிறது. அது பணக்காரராக இருந்தாலும், வசதி வாய்ப்பு பெற்று இருந்தாலும் கூட மரணம் என்கிற பொழுது அவர்கள் பயன்படுத்துகிற இசை என்பதே தங்களுடைய மண்ணுக்கான இசையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பாடல்களைப் பாடி அவருடைய துக்கங்களை, அவர்களுடைய ஆதங்கத்தை, நிலைப்பாட்டை அவர்கள் பாடி பாடி  ஒரு சோகத்தை போக்குகிற பணியை இந்த மரணகானா தொடர்ந்து செய்து கொண்டு வருவதை சென்னை நகரத்துக்குள் நாம் பார்க்க முடியும்.  என்னுடைய அனுபவத்தில்  நான் பெற்ற சில ஆய்வுத் தரவுகள் இதுபோன்று பல்வேறு தகவல்களை நமக்கு தருகிறது. 

 இசையில் கலப்பு என்பது ஒரு மிகப்பெரிய பணியாக நடந்து கொண்டிருக்கிறது, புறக்கணிப்பு என்பது நடந்துகொண்டிருக்கிறது. நாங்கள் புறக்கணிப்பையும், கலப்பையும் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் அவருடைய வார்த்தை பிரயோகத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அர்த்தமற்ற சில வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று அவர்கள் மீது  குற்றச்சாட்டுகளை வைக்கின்றது இந்த சமூகம்.

ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை ...

 இந்த மண்ணுக்கான வார்த்தை எது என்பதை அவர்கள்  முடிவு செய்ய வேண்டுமே தவிர வெளியில் இருந்து ஒருவர் வந்து இங்கே இருப்பவர்,  இந்த வார்த்தை தவறு என்பதை சுட்டிக் காட்ட முடியாது. அதைச் சொல்வதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. அது மட்டுமல்ல அது ஒரு இசையை தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுவது, என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

 ஆய்வுகளும் பல்வேறு நிலைகளில் வளர்ந்து கொண்டு வருகிறார் சமூகத்தில் இன்னும்கூட இந்த ஏற்றத்தாழ்வு முறையை,இசையில் தீண்டாமையை,  இசையில் ஒரு புறக்கணிப்பை நான் தொடர்ந்து பார்க்கிறோம். அவர்களின் இருப்பிடங்களை மாற்றி வருகிறது அரசு இது  ஒரு மிகப்பெரிய பண்பாட்டு உடைய ஒரு மண்ணை சிதைக்கும் பணி என்பதற்கான துவக்கமாக இந்த புறக்கணிப்புகள் இருந்து வருகிறது. இவர்களின் இசை  அரசியலை நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் தொடர்ந்து பேசுவோம்.

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-11/