நியூட்டனின் முதல் விதியும் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த தவறும் - இரா. இரமணன் | நியூட்டன் முதல் விதி (Newton's First Law : law of inertia)

நியூட்டனின் முதல் விதியும் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த தவறும் – இரா. இரமணன் 

நியூட்டனின் முதல் விதியும் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த தவறும்

– இரா. இரமணன்

1687இல் ஐசக் நியூட்டன் தனது பிரபலமான இயக்கவிதிகளை எழுதியபோது பல நூற்றாண்டுகள் கழித்தும் அது நம்மால் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்த்திருப்பாரா? லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அவ்விதிகள், நமது கோளத்தில் பொருட்களின் இயக்கம் எவ்வாறு நெறிப்படுத்தப்படுகிறது என்பதை விவரித்தன. அவை மொழிபெயர்க்கப்பட்டு, மொழியக்கம் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. நியூட்டனின் முதல்விதியில் ஒரு சொல்லை சற்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார் வர்ஜீனியா தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த மொழியறிஞரும் கணிதவியலாளருமான டேனியல் ஹோக் . 1729இல் லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டபோது முதல் விதியை

‘வெளி சக்தி குறுக்கிடாதவரை, ஒரு பொருள் நேர்கோட்டில் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும் அல்லது அசையாது இருக்கும்’ என்று எழுதப்பட்டது.

நியூட்டனின் முதல் விதியும் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த தவறும் - இரா. இரமணன் | நியூட்டன் முதல் விதி (Newton's First Law : law of inertia)

வெளிசக்தி தொடர்ந்து குறுக்கிட்டுக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையை கணக்கில் எடுத்துக் கொள்ளாதவரை இந்த விளக்கம் சரியாக இருக்கும். வார்த்தைகளை எழுதும்போது, நியூட்டன் நிச்சயம் அந்த உண்மையை கவனத்தில் கொண்டிருப்பார். 1999இல் மூலத்தில் உள்ள’ quatenus’ எனும் இலத்தீன் சொல்லிற்கு ‘ அளவிற்கு ஏற்ப’ (insofar) என்பதே சரியான பொருளாகும் என்று இரண்டு அறிஞர்கள் விளக்கினார்கள். ஆனால் அந்த சொல் ’ இல்லாதவரை’ (unless) என்று பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. இது ஏதோ மொழி குறித்த விவாதம் அல்ல. அறிவியலின் அடிப்படை குறித்ததாகும்.

புவி ஈர்ப்பும் உராய்வும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும்போது அதாவது புவியில் வெளிசக்தி இல்லாத நிலை என்று ஒன்று இல்லை எனும்போது ஏன் நியூட்டன் வெளிசக்திி குறுக்கிடாதவரை பொருட்கள் நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் என்று எழுதப் போகிறார்?

‘முதல் விதியின் சாரம்சமே வெளிசக்தி இருப்பதை ஊகிப்பதுதான்’ என்கிறார் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும் நியூட்டன் ஆய்வுகளின் நிபுணருமான ஜார்ஜ் சஸ்மித்.

உண்மையில் தனது முதல் விதிக்கு நியூட்டன் மூன்று எடுத்துக்காட்டுகளை காட்டுகிறார். அவற்றில் ‘ சுற்றிக்கொண்டிருக்கும் பம்பரம்’ மிகவும் ஆழமான ஒன்று என்கிறார் ஹூக். காற்றின் உராய்வினால் பம்பரத்தின் சுழற்சி மெதுவாகிறது. இந்த எடுத்துக்காட்டின் மூலம் வேகம் அதிகரிக்கும் பொருட்கள் ஆற்றலுக்கு ஆட்படுகின்றன என்பதை நியூட்டன் வெளிப்படையாக காட்டுகிறார். அதாவது எதார்த்த உலகில் பொருட்களுக்கு பொருந்தும் விதி.

நியூட்டனின் முதல் விதியும் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த தவறும் - இரா. இரமணன் | நியூட்டன் முதல் விதி (Newton's First Law : law of inertia)

அவரது காலத்தில் இந்த விதி எவ்வளவு புரட்சிகரமாக இருந்தது என்பதை இந்த புதிய விளக்கம் தெளிவாக காட்டுகிறது என்கிறார் ஹூக். பூமியிலுள்ள பொருட்களை நெறிப்படுத்தும் அதே இயற்பியல் விதிகளே கோள்கள்,நட்சத்திரங்கள், மற்ற விண்வெளி பொருட்களையும் கட்டுப்படுத்துகிறது என்பதே அது. ‘அணுக்களின் கூட்டத்திலிருந்து சுழலும் விண்கோள்வரை அவற்றின் வேக மாறுபாடுகளும் திசை மாற்றங்களும் நியூட்டனின் முதல்விதிப்படியே நடக்கின்றன என்கிறார் ஹூக்.

இந்த ஆய்வு ‘Philosophy of Science.’ எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.

(https://www.sciencealert.com/weve-been-misreading-a-major-law-of-physics-for-almost-300-years?utm_source=ScienceAlert+-+Daily+Email+Updates&utm)

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *