இசை என்னும் அரசியல் (இசையில் ஆகா சிறந்த மாற்றம் எது ? ) -17 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

சமூகத்தின் நிலைப்பாடுகள் “சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு இங்கே ஒரு இசை வடிவம் தேவைப்படுகிறது”. இரண்டு செய்திகளை இச்சமூகம் தொடர்ந்து செய்து வருகிறது. 

1.சமூகப் புறக்கணிப்பு, 

2.சமூக கட்டுப்பாடு. 

இவை இரண்டும் இன்றி எந்த ஒரு செயலையும் புதிதாக சமூகத்தின் ஊடாக நாம் செய்து விட முடியாது. காரணம் மொழி,கலை, கலாச்சாரம், பண்பாடு இவை அனைத்தையும் தாங்கிக் பேசக்கூடிய இடங்களில் இசையும் சேர்ந்து இருக்கிறது என்பதற்காக இச்சமூகம் தங்களின் பார்வையை கொண்டு பிரதிபலிக்கிறது. 

 இந்தியாவில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் இது போன்ற அடக்குமுறைகளும், சமூக ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு நாம் காணமுடியும். கறுப்பின, பூர்வகுடிகளில்  இருந்து பல்வேறு பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். ஒரு இசைக்கருவி பல்வேறு காலகட்டங்களை கடந்து வருகிற பொழுது பல்வேறு இனக் குழுக்களை  சந்திக்க வேண்டிய வாய்ப்புகளைத் தருகிறது. 

இசை என்பது மிகப்பெரிய அரசியல் சொல்லாக  பார்க்கிறேன்.  இசை என்ற தத்துவம் இல்லாது ஒரு உலகத்தை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. தமிழர்கள் தொல்குடி சமூகத்தில் இசைக்கு மயங்காதோர் இல்லை என்கிற வரலாற்றை முன்வைக்கின்றனர். தமிழ் சமூகங்களில் இசை வல்லுநர்கள், பாணர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பானன் குடி ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட சமூகங்கள் தனக்கு சொந்தமான வேலைகளை தெரிவு செய்துகொள்வது. கட்டமைப்பு என்னுடைய உழவுத் தொழில், கால் நடை வளர்ப்பு, வேளாண்மை, இசை என்றெல்லாம் பிரித்துக் கொள்கிறார்கள்.செவ்வியல் இசையோடு இருந்த பேச்சு வேறு ஒரு திசை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.

 புரியாத பாஷையில் சில பாடல்களைப் பாடிக்கொண்டு, அரிதாரங்கள் பூசிக்கொண்டு  பாடுபவரை கொண்டாடி  கொண்டிருக்கிறது, பாராட்டி பேசுகிற  நீங்கள் எல்லாம் ஒரு அடித்தட்டு மக்களின் உடையை, இசையை அந்த இசை மரபில் இருந்து வருகிற பொழுது அதற்கு பல்வேறு அரசியல் சாயங்களை பூசப்பட்டு இருப்பதை இன்றைக்கு நாம் பார்க்கிறோம். கருத்தியலை தங்களின் மனதிற்குள் வைத்துக்கொண்டு  இசையோடு பயணம் செய்வது என்பதை பெரும்பாலான அரசியல் முன்னிறுத்தலாக  கருதப்படுகிறது.

ஆதிக்க சக்திகளால் அழிக்கப்பட்டு வரும் பறை இசை -வைகை அனிஷ் - கட்டுரை

இன்றைக்கு இருக்கக்கூடிய நவீனத்துவ சமூகத்தில் பாரம்பரிய  பறை இசை வடிவத்தினுடைய  மாற்றத்தை முன்வைத்து பேசுவதாக சிலர் கருதிக் கொள்கின்றனர். சில குழுக்கள் தங்களுடைய கருத்துகளை பரப்புவதற்கு ஒரு இசைக்குழுவை கொண்டு அதனூடாக பல்வேறு  சிந்தனைகளை, மாற்று அரசியலை, இசை மேன்மையை முன் வைக்கிறோம் என்று சொல்லி முன்வைத்து வருகின்றனர். இன்றைக்கு கட்டப்பட்ட சமூகங்களில் இருக்கக்கூடிய இசை வரலாறு என்பது நெடிய புறக்கணிப்புகளாக,  இசை வரலாறாக காணப்படுகின்றது. 

பட்டியல் இன சாதிகளுக்கு உள்ளே இருக்கக்கூடிய சாதிகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒரு இசையோடு பயணம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மட்டும் அதில்  மறுப்பை தெரிவித்து வருகிறது. பட்டியல் சாதியில்  உயர் குடி என்று சொல்லிக்கொண்டு. எங்களுக்கு வேளாண்மைத் தொழிலை மட்டுமே மையமாக வைத்து எங்களுடைய சமூக மேம்பாடு நாங்கள் பேசி வருகிறோம் என்ற ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். அவர்களும் கூட அரிப் பறை என்கிற ஒரு இசையோடு  பயணப்பட்டதாக வரலாறுகள் நமக்கு ஆய்வுகளை தருகிறது.

குறிப்பாக நாட்டுப்புற இசையில் ஏன் மாற்றம் வேண்டும் என்று ஒரு கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு வருகிறது. பல்கலை  கழகங்களிலும், ஆய்வு தளங்களிலும் இந்த ஆய்வாளர்கள் தங்களில் அமைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு ஒரு இசைக் கலைஞர் 40 இசைக்கருவிகளை தன்னுடைய வீட்டில் வைத்து அத்தனை இசைக்கருவிகளும் அவர் ஆடக்கூடிய, வாசிக்கக் கூடிய, வல்லமை பெற்றவராக இருக்கிறார் பாராட்டுகிறோம்.  இதனால் சமூகத்தின் ஊடாக பார்வையை நாம் மாற்றிவிட முடியும் என்கிற ஒரு தத்துவத்தை முன்வைத்து பேசுகின்றனர் இதை நாம் மறுக்கின்றோம். 

அந்த இசைக்கருவிகள்,  பறை உள்ளிட்ட அனைத்து இசைக்கருவிகளும் வைத்து பேசுகிறபோது அனைத்தும் தோல் இசை கருவியாக  அவர்கள் பயன்படுத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.  மாட்டுத்தோல் மற்றொன்று ஆட்டு தோல்  வைத்து இசைக்கருவிகளை தயார் செய்வது தான் இன்றைக்கு பாரம்பரியமாக இருக்கிறது. கைகளில் வாசிக்கக்கூடிய இசைக் கருவிகளை ஆட்டு  தோள்களிலும், மாட்டு தோலால் தயார்செய்யப்பட்டு வாத்தியங்கள் பிரம்பு  அல்லது குச்சியினால் வாசிக்கப்படுகிறது. இசை கருவிகள் அனைத்தும் மாட்டு தோல்களில்  செய்யப்படுவதாக நாம் அறிகிறோம். இத்தனை இசைக் கருவிகளை வீட்டில் வைத்தால் ஒரு சமூக மாற்றம் நமக்கு கிடைத்துவிடும் என்று ஒரு மேன்மை சமூகத்தைச் சார்ந்த இசை வல்லுநர் இந்த கருத்தை முன்வைகினறனர். இதை   சமூகம் ஏற்றுக் கொள்கிறதா என்றால் இசைக்கருவிகளை வேறு ஒருவர் செய்து அதை வாங்கிக் கொண்டு வந்து  அருங்காட்சியகத்தில் வைப்பதைப் போன்று பராமரிப்பு  செய்கிற பொழுது உளவியல்ரீதியான பார்வையை நம்மால் மாற்றிக் கொள்ள முடியாது.

 அவ்வளவு எளிதில் சமூகத்தினுடைய பார்வையை நாம் கட்டமைத்து உடைத்து விட முடியாது என்கிற எதிர் கருத்தை முன்வைக்கின்றனர்.  தோலிசைக் கருவிகளின் வீட்டினுள் வைக்கிற அந்த கலைஞர் தன்னுடைய வீட்டு வாசலிலோ அல்லது முற்றத்திலோ ஏதோ ஒரு வெட்ட வெளியிலோ ஒரு பழைய தோலை அல்லது மாட்டு தோலை  காயவைத்து பத படுத்தும்  பணியை செய்து. அதை  வீட்டுக்குள் கொண்டு வந்து பதப்படுத்தி வைக்கின்ற செய்கிற ஒரு பணியை அந்த நபர் செய்தாள். இந்த சமூகம் அவரை என்னவாக பார்க்கும் என்கிற கேள்வி எழுகிறது.

  இது மாற்று பார்வையாக  தெரியவில்லை, தோல்கள் சார்ந்ததாக தெரியவில்லை ஆனால் இது பறை இசை வெறுப்பு என்பது  ஒரு உளவியல் சார்ந்த தத்துவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றம் என்பது இன்றைக்கு இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் அடங்கிய குறுவட்டு அனைத்து மக்கள்  மத்தியிலும் பரவி இருப்பது போல, அவர்கள் அந்த இசையைக் கேட்டு லயத்து ,சிலாகித்து போகிறார்களோ ஒரு பொது அடையாளமாக இருக்கின்றதோ அது போன்று இந்த மேளம், பறை என்கிற அந்த இசைக்கருவியை அணைத்து வீடுகளில் அனுமதித்தால் சமூகத்தினுடைய உளவியல் கட்டமைப்பை உடைக்கிற பணியை செய்கிறது என்கிறது ஆய்வுகள்.

தாண்டவக்கோனே... பறை இசைத்து தமிழ் வளர்க்கும் அமெரிக்கத் தமிழர்கள்! | Thandavakone, a special Tamil Parai Music concert today at Dallas - Tamil Oneindia

உடை அரசியல் என்பது   அவசியமாக பார்க்கப்படுகின்றது. ஒரு இசைக்கு நீங்கள் அங்கீகாரம்  வாங்கித் தந்துவிட முடியும் நம்பிக் கொண்டிருக்கிற இசைவாணர் களுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு கருத்தியலை முன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இசைக்கலைஞர்கள் இன்றைக்கு மேற்கத்திய இசை வடிவத்தில் இருந்து பாடப்படுவது  அந்த இசைக்கான மரியாதை கூடுகிறது, மதிப்பு கூடுகிறது என்கிற ஒரு கருத்தை முன்வைக்கிறது. இந்தப் பார்வை என்பது உடையில் இருக்கிறதா அல்லது பறையிசை  என்ற இசையில் இருக்கின்றதா, தோல் மீது இருக்கின்றதா அல்லது இசைக் கருவியின் மீது இருக்கிறதா என்கிற ஒரு கேள்வி எழுகிறது.  

இன்றைக்கு மாற்று  சமூகங்களில் இருக்கக்கூடிய,  செயல்படக்கூடிய கலைஞர்கள், பொது மேடைகளில், அரசியல் தளங்களில் உடை அரசியலோடு இந்த இசையை கொண்டு போகிற வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.  இன்னும் பல கிராமங்களில் செருப்பு அணிந்தால் கூட அவர்கள் மீது வன்கொடுமையை தொடர்கிற வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பாரம்பரிய கலைஞனுக்கு நாம் ஒரு உடை மாற்று அரசியலை நம் முன்வைக்கிற பொழுது  இசை சமூகத்தினுடைய வாழ்வாதார உறுதித் தன்மை என்னவாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

உடை அரசியலை தீர்க்கமாக பேசி வருகிற இசைக் கலைஞர்கள்  சமகாலத்தில் இருக்கக்கூடிய ஒரு பரத நாட்டிய இசைக் கலைஞர்களை மேடையில் ஆட வைக்கப்படுகிறது. காலணிகளை அல்லது மேற்கத்திய இசை வடிவ உடைகளை  உடுத்திக்கொண்டு பறையிசையை  வாசிக்கிற பொழுது நன்றாக இருக்கிறது ஆனால் பரதநாட்டிய கலைஞர் உடன் ஆடுகிற பொழுது எந்த ஒரு செருப்பும் அணியாமல் ஆடப்படுகிறது. இங்கே  சமத்துவத்தை தன்னோடு பயணிக்கிற ஒரு கலைஞருடைய நாக்கை திருத்த முடியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நண்பர்களுடைய  கால்களை   திருத்த முற்பட வேண்டும். பரதநாட்டியம் ஆடுகிற பொழுது அது மேற்கத்திய இசையோடு காலணிகளை அணிந்து கொண்டு. இசையை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி கொள்ள முடியும் என்கிற தத்துவத்தில் இருக்கிற வல்லுனர்களுக்கு புரிய வேண்டியது. தீண்டாமை என்பது   உளவியல் சார்ந்த பார்வை.

 ஒரு சமூகத்தினுடைய ஏற்றத்தாழ்வு, அவர்களுடைய கட்டமைப்பு மேடையில் இருந்து புரட்சிகரமான வார்த்தைகளையும், உரைவீச்சு களையும் நிகழ்த்தி செல்லுகிற ஒரு தலைவர் மேட்டுக்குடி சமூகமாக இருந்தாள், அந்த மேடையில் இசைக்கப்பட்ட கலைஞர்கள் ஒரு கீழ்குடி சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தால், அந்தப் பேச்சைக் கேட்ட பார்வையாளர்கள் ஒரு நடுநிலை அல்லது இடைநிலை சமூகமாக இருந்தாள், அவரவர் அந்த கூட்டம் முடிந்த பிறகு கலைந்து போய் சேரியாக, ஊராக மேலத்தெருவாக பொய் சேருகின்றனர்.   இன்னும் இதுபோன்ற விடுதலை சொற்பொழிவுகள்  நடந்து கொண்டிருக்கிறது. 

 ஒரு சமூகத்தினுடைய தொலைநோக்கு பார்வை இல்லாமல் எந்த ஒரு இசை வடிவத்தையும் நாம் கையாண்டு விட முடியாது. ஒருவரிடத்தில் கற்றுக்கொண்டு அதிலிருந்து எழுச்சியை,மாற்றத்தை நாம் மாற்றிவிட முடியும் என்கிற அந்த எண்ணம் அடிப்படை உலகிலிருந்து, அடிப்படை சுய மாற்றம், கலைவடிவதில் இருந்து,  சமூக மாற்றங்கள் வரை இருந்தால் மட்டுமே இது  முறையான ஒரு மாற்று சிந்தனை என்ற ஒரு கருத்து முடிவாக முவைக்கின்றது.

தொண்டு நிறுவனங்கள், 1980-1990களில்  குறிப்பாக வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்களின் பணி என்பது தாங்கள் எடுத்துக் கொண்ட ஒரு பணியை இச்சமூகத்தின் மேம்பாட்டிற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். நாங்கள் உங்கள் உரிமைகளை முன்வைத்து பேசுகிறோம், என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து  மக்களுக்கு மத்தியில் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அவர்கள் இதன்  ஊடாக நெருங்கிச் செல்வதற்கு அந்த மக்களுக்கு மத்தியில் தங்களுடைய கருத்தை அல்லது தங்களுடைய கோரிக்கையை  முன்வைப்பதற்கு ஒரு இசைவடிவம் தேவைப்பட்டது. 

 அந்த இசை வடிவம், ஒரு அடித்தட்டு மக்களுடைய இசை வடிவமாக இருக்கக் வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். உதிரிகளாக இருந்த பறையிசை கலைஞ்சர்களை  ஓன்று திரட்டி ” தலித் கலை விழா” மதுரையில் 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெறுகின்றது அதர்க்கு மிக முக்கிய காரணம் தலித் முன்னோடிகள், அவர்களின் செயல்பாடுகள் தான்.  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உதாரணமாக இருந்தது. சென்னை சங்கமம், மதுரை சங்கமம், குமரி சங்கமம் என தொடர்ந்தது சமீபமாக “மகுடம்” நிகழ்வு என பட்டியல் தொடர்கின்றது .

keetru.com

  குறிப்பாக வட,தென் மாவட்டங்களிலும் கலைகள் சார்ந்து செயல்படக்கூடிய இரண்டு  பெரும் சமூகங்களை நாம் பார்க்க முடியும். வடதமிழகத்தில்  பறையர் என்கிற ஒரு இன சமூகமும்,தெற்கே நாடார் சமூகமும்   கலைகளில் வல்லுனர்களாக பிரசித்திபெற்றவர்களாக  உள்ளார்கள்.  மனு தர்மத்தின் படி இவர்கள் இருவரும் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று சொன்ன இந்த இரு சமூகங்கள் இசையோடு நெருங்கி  இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இங்கே நிறுவனங்களின்  பணி  இந்த இசை வடிவத்தை தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தி  ஒரு ஆய்வாக எடுத்துக்கொண்டால் அதற்கான மேம்பாடு என்பது அந்த சமூகத்தினுடைய ஒரு பங்கு என்பதை உணர்ந்த பிறகு அவர்களுக்கு  தன் எழுச்சியை தருவது போல, இசைக்கருவிகளை, இசை கட்டமைப்பை அவர்களை படிக்க வைப்பது என்றெல்லாம் பல்வேறு பணிகளை செய்து வந்தனர். அதேபோல பெண்களை மட்டுமே மையப்படுத்தி ஒரு தொண்டு நிறுவனம் ஒரு கலை குழுவை கட்டமைத்து பல்வேறு சாதிகளில்  இருந்து வந்தாலும் கூட அந்த மாணவர்களை ஆட வைத்து,இசைக்க வைத்து இயக்கி வந்ததும் தமிழக வரலாற்றில் உண்டு.

 அதைத்தொடர்ந்து பல தொண்டு நிறுவனங்கள் இசைக்கான குறிப்புகளை சொல்ல முன்வந்தது.  சொற்  கட்டுகளை முன்வைத்து பேசியது, இதையும் இந்த சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. ஒரு கேட்பார் அற்று இருக்கிற ஒரு இசை வடிவத்தில் பல்வேறு புனைவுகளும், சிறுகதைகளும், பகையும், இடைச்செருகல் களையும், கட்டமைப்பையும் தொடர்ந்து நடைபெறுவதை ஆக சிறந்த மாற்றமாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-14/

தொடர் 15ஐ வாசிக்க

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-16/