அளவற்ற திடக்கழிவு அவதி, ஆன்மீக அரித்துவார் நியதி - Uttarakhand Hindu Pilgrimage Site Haridwar Excessive Solid Waste Suffering

அளவற்ற திடக்கழிவு அவதி..! ஆன்மீக அரித்துவார் நியதி…! – முனைவர் பா. ராம் மனோகர்

அளவற்ற திடக்கழிவு அவதி!
ஆன்மீக அரித்துவார் (Haridwar) நியதி!….

– முனைவர் பா. ராம் மனோகர்

கழிவுகள், குப்பைகள், என்றால் தேவையற்ற, மிகவும் விரும்பத்தகாத, நாற்றம் வெளியேறும் பொருட்கள் என்பது சாதாரண மனிதர்கள் எண்ணம்! நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவு, வீடுகளில் உருவாகும் கழிவு, சமூகத்தில், பல்வேறு செயல்பாடுகள் மூலம் (விழா, உணவு கடைகள், காய்கறி வணிகம், மளிகை, குடியிருப்பு பகுதி) ஏற்படும் கழிவுகள் பற்றியும் எல்லோரும் அறிவோம். ஆனால் நம் வீடுகளில் மட்டுமே குப்பை இல்லாமல் இருக்க கவனம் கொள்வோம்!

பொது இடங்களில் கழிவுகள் போட மட்டும் நாம் தயங்குவதில்லை. ஏனென்றால் அதனை துப்புரவு செய்ய அரசுத்துறை, பணியாளர்கள் மூலம் செய்துவிடுகின்ற கடமை அவர்களுக்கு இருப்பதாக நாம் எண்ணுவது தவறில்லை, எனினும் நாம் சுற்றுப்புறம் உணர்ந்து, வெளியில் நடமாடுகின்றோமா!!? என்பது அய்யம் தான்! குறிப்பாக, தூய்மை பேணக் கூடிய இடங்களில், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை பொது மருத்துவமனை, பொழுது போக்கிடங்கள், ஆன்மீக தலங்கள் ஆகிய பல்வேறு இடங்களில் கடுமையான கண்காணிப்பு இருந்தால் மட்டும் அவை தூய்மையாக உள்ளன.

அளவற்ற திடக்கழிவு அவதி, ஆன்மீக அரித்துவார் நியதி - Uttarakhand Hindu Pilgrimage Site Haridwar Excessive Solid Waste Suffering

பொதுவாக ஆன்மீக தலங்களில், தூய்மை கடைபிடிக்க நம் பண்பாடு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வழிபாடு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் போது, அரசுத்துறை, உள்ளூர் நிர்வாகம், சரியான தூய்மை பணிகளை எவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ள இயலும்!?

சற்று சிந்தித்து பார்ப்போம்! சமீபத்தில் கும்ப மேளா நடை பெற்று, கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடிய நதி எவ்வளவு மாசுபட்டிருக்கும்!?, எனினும் அறிவியல் பூர்வ சிந்தனை உடைய, சமூக அக்கறை உள்ளவர்கள் மட்டுமே இந்நிலை பற்றிய உணர்வு கொண்டு இருக்கின்றனர். இதே போல் வட இந்திய ஆன்மீக நகரம் அரித்துவார் (Haridwar) மிக பிரபலம் ஆன ஒன்றாகும். இங்கு பல கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் அமைந்துள்ளன. இந்த ஆன்மீக சுற்றுலா நகரில் தான், கங்கை ஆறு, சமவெளிப் பகுதியில் நுழைகின்ற இடம் ஆகும். அதிக செயல்பாடுகள் நிகழும், இந்த நகரின் முக்கிய சவால், குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை என்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய தகவல் ஆகும்.

ஓர் ஆண்டில் 40 மில்லியன் பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக நகரம் அரித்துவார் (Haridwar), 260-300 மெட்ரிக் டன்கள் நகர கழிவுகளை, ஒவ்வொரு நாளும் வெளியேற்றம் செய்கிறது. ஆனால் “கன்வார் யாத்ரா “போன்ற திருவிழா க்கள் நிகழ்வுகளின் போது, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 6000 டன் கழிவுகளை ஒரு சில வாரங்களில் சேகரிக்க வேண்டிய கடும், துன்ப நிலைக்கு உள்ளாகின்றனர். உத்ராகண்ட் மாநில நகர வளர்ச்சி இயக்குனரகம், கேட்டுக்கொண்டபடி, தேசிய நகர வளர்ச்சி நிறுவனம் (NATIONAL INSTITUTE OF URBAN AFFAIRS), அரித்துவார் (Haridwar) நகர கழிவறை, நீர் பயன்பாடு, கழிவு நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, மழை வெள்ள வடிகால் ஆகிய கருத்துக்களின் அடிப்படையில், கணக்கெடுப்பு, ஆய்வு பல்வேறு நிபுணர்களைக்கொண்ட குழுவின் மூலம் மேற்கொண்டது.நகர் அமைப்பு, திட்டம், புவியியல், சுகாதார பொறியியல் கற்ற நிபுணர்கள் நகரில் பல்வேறுஇடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். பல நபர்களை சந்தித்து விவாதித்தனர்.

ஆய்வு மூலம், நேரடி பார்வை மூலம் கழிவுகளில் கரிம, பொருள் நிறைந்த, 60% உணவு கழிவு, மற்றும் வழிபாட்டு பொருட்களின் கழிவு, தேங்காய், மலர் ஆகியவை இருந்தன. 27% குப்பைகள் தூக்கியெறியப்படும், பொருட்கள், உறை அட்டை குறிப்பாக குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள், இருந்தன. கண்ணாடி, உலோகம் 5.5%,வீண் துணிகள் 6.6% முறையே காணப்பட்டது. இத்தகைய ஆன்மீக கலாசார பாரம்பரிய முறைகள் மூலம், அதிக மக்க இயலா கழிவுகள் (Non-Bio degradable wastes) உருவாக்கப்பட்டு அரித்துவார் (Haridwar) நகர கழிவு மேலாண்மை ஒரு சவாலாக விளங்கி வருகிறது.

அளவற்ற திடக்கழிவு அவதி, ஆன்மீக அரித்துவார் நியதி - Uttarakhand Hindu Pilgrimage Site Haridwar Excessive Solid Waste Suffering

அரித்துவார் நகராட்சி நிர்வாகம், மிகக் கடுமையாக, அன்றாடம், பல்வேறு பணியாளர்கள் மூலம் திடக் கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்கின்றது என்பது மிகை அல்ல. ஏனெனில் 48 ஓட்டுநர்கள் இயக்கும் வாகனங்கள் மூலம் 51 உதவியாளர்கள் குழு, மிக அதிக மக்கள் கூட்டம், நெரிசல் மிகுந்த பகுதிகளிலிருந்து குப்பைகள், கழிவுகள் அகற்றப்படுகின்றன. பின்னர் அவற்றை ஜ்வாலாபூர், பைராகி சவுக் என்ற இரண்டாம் கட்ட பகுதியில் முழுவதும் கொட்டப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. அதற்கு பிறகு 680, நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உழைத்து குப்பை மேலாண்மை, பிரித்தல் ஆகிய பணிகள் அயராது
நடைபெற்று வருகிறது. இணைய தளம் மூலம் பெறப்படும் புகார்களுக்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பிரச்சனைகளளுக்கு தீர்வுகள் காணப்படுவதும் உண்மை.

ஆனால், அரித்துவார் (Haridwar) நகர கழிவு மேலாண்மை என்பது, நவீன மாநகர் வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் பாரம்பரிய ஆன்மீக கலாசார வாழ்க்கை முறைகளுக்குமிடையில், ஒரு தீர்வு காண இயலாத சவால் ஆகவே உள்ளது. 6.5 ஏக்கர் பரப்புள்ள குப்பை கொட்டும் கிடங்கில் அவ்வப்போது உடனடி மக்கும் குப்பை, பிரித்தல் போன்றவை ஒரு பக்கம் இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து குவிந்து கிடக்கும், பாரம்பரிய 2.5. மில்லியன் கழிவுகள் அதிக பிரச்சனை ஆகவே இருக்கிறது.

அரித்துவார் (Haridwar) நகராட்சி, திட க்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகளில், ரூபாய் 60 லட்சம் மின்சார கட்டணம், வாகன எரி பொருள் செலவு ரூபாய் 10 லட்சம், மற்றும் தனியார் குப்பை அள்ளும் ஒப்பந்த தாரர்களுக்கு, ஒரு டன் ரூபாய் 525/- என்ற வகையில் செலவுகள் செய்வது சற்று கடினமாக இருக்கிறது. சாதாரண நாட்களில் 300 டன் குப்பை அளவு இருந்தாலும், விழா நாட்களில் 80% சதவீதம் கூடுதலாக கழிவுகள் அதிகரிக்கின்றன. குப்பை கழிவுகள் சேகரிக்கவும், போக்குவரத்துக்கும் மட்டுமே நிர்வாகம் ரூபாய் 45 லட்சம் செலவு செய்யும் நிலை வேதனை தரும் தகவல் ஆகும்.

குப்பை கழிவு பிரித்தல், உருவாக்க நிலையில் மேற்கொள்ள உரிய விழிப்புணர்வு பொது மக்கள் அனைவரிடமும் ஏற்படுத்தி வந்தாலும், கழிவுகள் பிரித்து எடுக்க சரியான வழிமுறைகள் முறையாக பின்பற்றும் நிலை இங்கு இல்லை. குப்பை கொட்டுமிட நிலங்கள், அதிக கழிவுகள் காரணமாக, பசுங்குடில் வாயு வெளிப்பாடு, பிளாஸ்டிக் மாசு, குப்பை கழிவு உருகி மண்ணுக்குள் இறங்கி கசிவு மூலம் நிலத்தடி நீர் மாசுபடுதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.

அளவற்ற திடக்கழிவு அவதி, ஆன்மீக அரித்துவார் நியதி - Uttarakhand Hindu Pilgrimage Site Haridwar Excessive Solid Waste Suffering

சமீப காலமாக, புதிய மாதிரி வடிவமாக, குப்பை கரிம கழிவுகள் மக்கவைக்கும் சிறு கருவிகள், ஓரளவு செயல்பாடுகளை எளிதாக்குகின்றன. எவ்வாறாயினும் அரித்துவார் (Haridwar) நகர தெருக்களில் , ஆங்காங்கே குவிந்து வரும் குப்பை கழிவு வருத்தம் தரும் நிலை உண்டாக்கி வருகிறது. முறை சாரா குப்பை சேகரிப்பாளர் குழுக்கள் ஒரு புறம், கலப்பு கழிவுகளிலிருந்து, இரும்பு, மற்ற பயனுள்ள பொருட்கள் சேகரித்தாலும், அவர்கள் பாதுகாப்பு, சுகாதார நிலை பற்றியும் நிர்வாகம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எதிர் காலத்தில், கழிவு தணிக்கை, வட்ட பொருளாதார நிலை, ஆன்மீக சுற்றுலா பகுதியில் அர்ப்பணிப்புடன் கூடிய கண் காணிப்பு முறைகள், குப்பை உருவாக்க பகுதியில் பிரித் தெடுக்கும் முறை, தொடர்ந்து நிதி ஒதுக்கீடு, முறை சாரா குப்பை சேகரிப்பு முறைகளின் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கொள்கை செயலாக்கம் மற்றும் ஊக்க தொகை வழங்குதல் முறை, திடக்கழிவு மேலாண்மை பயிற்சி ஆகியவற்றில் கூடுதல் நிபுணத்துவம் கூடிய செயல்பாடுகள் அரித்துவார் (Haridwar) நகராட்சி மூலம் திட்டமிடுவது நன்று.

அரித்துவார் (Haridwar) ஆன்மீக நகரம் நவீன வளர்ச்சி கொண்டு, முன்னேறினாலும், கழிவுகளின் ஆதிக்கம் , பொருத்தமற்ற நிலையில் வளர்ச்சியினை சீர்குலைக்கிறது என்பது உண்மை. கங்கை நதி, புனித நிலையில் இங்கு பல்வேறு மக்களால் வழிபாடு செய்யும் நிலை இருக்கிறது. ஆனால் புனித வழிபாடு என்ற பெயரில் சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்ட நிலை, கழிவுகள் அகற்றுதல் பற்றிய பொறுப்புணர்வு விலகுகிறது. தூய்மை என்ற வார்த்தை சமுகத்தில் கேலி க்கு உள்ளாக்கப்படுவது வேதனை. இந்த புனித தலம் மட்டுமே அல்ல, இந்தியாவின் பல்வேறு பிரபல வழிபாட்டு தலங்களில், திட க் கழிவு மேலாண்மை பிரச்சினை வளர்ந்து கொண்டுள்ளது.

அரசு பல்வேறு திட்டங்களை, உரிய முறையில், தொடர்ந்து செயல்படுத்தினாலும், நாம் தனிப்பட்ட முறையில், சமுதாயத்தில் நடமாடும் பொழுது “ தூய்மை பேணுதல், குப்பை போடும் நடத்தை, மேலாண்மை ”பற்றிய சிந்தனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொது இடம் தூய்மை பற்றி அக்கறையுடன் கருத்தரங்கம், கூட்டம் ஆகியவற்றில் உரை நிகழ்த்து தல், சக நண்பர்கள், உறவுகள் உடன் உரையாடல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவு செய்தல் மட்டும் கடமை யல்ல! நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் நம் வீட்டு குப்பையினை சரியான முறையில் பிரித்து எடுத்து உரிய முறையில் துப்புரவு பணியாளர்கள் வசம் ஒப்படைப்போம். குப்பை கழிவு மேலாண்மை கடைபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.

=================================================

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. N.Selvaraj

    Very very pitiable condition,not only at Prayag,but also in all the tourist attraction centers too face the same condition throughout the year….pilgrims should be instructed at the entry point to keep the holy spot or tourist centers…if they ignore the goidelines, the authorities shold take severe actiin against such unruly devotees ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *