பிரயாணம், இதா இவிடே வரே, நட்த்திரங்களே காவல், ராப்பாடிகளுடே கதா, ரதி நிர்வேதம், சத்திரத்தில் ஒரு ராத்திரி, ஷாலினி என்டே கூட்டுகாரி, வாடகைக்கு ஒரு ஹிருதயம் போன்ற திரைக்கதைகளை எழுதிக் கொடுத்த பிறகு தான் அவருக்கு படத்தை இயக்குகிற வாய்ப்பு வருகிறது. ஓரிரு உதாரணங்களை எழுதி இருக்கிறேன். முறைப்படி எல்லாவற்றையும் எழுதியிருக்க வேண்டும். 

அதை விட்டு விடுவோம்.

அப்படி அவர் இயக்கிய முதல் படம் பெருவழியம்பலம். அது அவருடைய நாவலுமாகும். படத்தின் ஒளிப்பதிவாளர் கண்ணன் நாராயணன். எம் ஜி ராதாக்ருஷ்ணன் இசை அமைத்திருந்தார். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அதன் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. முதல் படத்திலேயே அவர் தனது திரைமொழியைக் கண்டுபிடித்து விட்டிருந்தார்.

கொச்சு கொச்சு தெட்டுகள், தகர போன்ற படங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார். 

ஓரிடத்தொரு பயில்வான் இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் விபின் தாஸ். ஜான்சன் இசை அமைக்கிறார். நெடுமுடி வேணுவின் சதி முகம் மிகவும் பிரபலம், அதை பத்மராஜன் தான் கண்டுபிடித்தார் என்று சொல்ல வேண்டும். பூட்டாத பூட்டுக்களில் நடித்த நாயகி இதில் ஏற்றிருந்த கதாபாத்திரம் அசலான ஒரு பெண்மையை எடுத்து வைத்தது. இன்று பார்க்கும்போதும் அது பிரமிப்பாக இருக்கிறது. சினிமாவை யாரும் எடுத்து விடலாம் என்றுமே சொல்லலாம், ஆனால் சிறியவைகளின் அழகை விவரித்து சொல்லி ஒதுங்கி, நமக்கு பிரம்மாண்டத்தைக் காட்டுகிற நுட்பம் கைவருவது சிரமம். எவ்வளவு போதாமையிலும் ஒரு இயக்குனராக பத்மராஜன் தன்னை நிருபித்த படம்.

Vineyards of passion and bloody beaches: 5 eternal Padmarajan films for movie buffs - The New Indian Express

மேலும் ஒரு நாவல். கள்ளன் பவித்ரன். இந்தப்படத்தில் நெடுமுடி இன்னும் தீவிரமானவர். படத்தின் பெண்கள் கில்லாடி வேலைகளை செய்தார்கள். சுபாஷினி கண்களால் விளையாடினார். இசை ஷ்யாம். முற்றிலும் வினோதமான, வாய் விட்டு சிரித்து விட முடியாத திரைக்கதையில் நடிக நடிகையர் தன்னை ஜொலிக்க செய்ததற்கு பத்மரஜனைத் தான் கொண்டாட முடியும். கோபி, ஒரு கதாபாத்திரம் போதும்.  இப்படத்திற்கும் விபின் தாஸ் தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

பரதனுக்கு லாரி எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அடுத்தது நவம்பரின்ட நஷ்டம். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்த படம். மாதவி ஏற்று இருந்த பாத்திரம் வெகு சிக்கலானது. உள்ளே உள்ளே என்று பல அடுக்குகள் இருந்தும் சுருக்கமாக சொல்லப்பட்ட திரைக்கதை. பத்மராஜனின் எண்ணத்தை மாதவி மிக சிறப்பாக முழுமை செய்திருந்தார். பாடல்களுக்கு மட்டுமே எம் ஜி ராதா கிருஷ்ணன் இசை அமைத்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதாப் போத்தன் யாருக்கும் தன்னைப் பிடிக்காத லெவலில் ஒரு பாத்திரத்தை செய்திருந்தார். அவரது கண்களில் எப்போதும் ஒரு கபடம் இருந்தது .

இயக்குனர் மோகனுக்கு இட வேளா எழுதிக் கொடுக்கிறார்.

மம்முட்டி, சுகாசினி, ரகுமான் நடிக்கிற கூடெவிடே படத்தை இயக்குகிறார். முன்பைக் காட்டிலும் நெறியாளுகை மிகவும் முதிர்ச்சி அடைந்து விட்டிருக்கிறது. கதை வாஸந்தி. மம்முட்டியும் சுகாசினியும் அற்புதமான விஷ்வல் நாடகங்களை நிகழ்த்திக் காட்டின படம். ரகுமானும் தான். இப்படத்திற்கு ஷாஜி என் கருண் ஒளிப்பதிவு செய்தார். இசை ஜான்சன்.

கைகேயி, ஈனம் போன்ற படங்களுக்கு எழுதுகிறார்.

பறந்து, பறந்து, பறந்து. இது படத்தின் பெயர். ரோகிணி முதன்மையான ஒரு ரோலில் ஒளிர்ந்தார். படத்தில் ரகுமான் உள்ளிட்ட அத்தனை  கேரக்டர்களுக்கும் இருக்கக் கூடிய உள்ளீடுகள் கவனிக்கத் தக்கவையாக இருந்தன. இதற்கு ஒளிப்பதிவை அசோக் குமாரும், இசையை ஜான்சனும், எடிட்டிங்கை பி லெனினும் செய்திருந்தனர். 

മഴയുടെ നഷ്ടം

காணாமறியாது எழுதி இருக்கிறார்.

திங்களாழ்ச்ச நல்ல திவசம் அடுத்து வருகிற படம். இம்மாதிரிப் படங்களுக்கு ஒரு விதமான டெம்ப்ளேட் உண்டு. ஆனால் இது அது அல்ல என்பதை உணரலாம். கவியூர் பொன்னம்மா செய்திருந்த கதாபாத்திரம் மிகவும் காத்திரமானது. மம்முட்டி, ஸ்ரீவித்யா, தீபா, அசோகன், கரமன ஜனார்த்தனன் போன்ற ஒரு கூட்டத்தை கிளம்சி பண்ணாமல் உத்திரவாதத்துடன் வைத்திருந்த திரைக்கதைக்கு நன்றி சொல்ல வேண்டும். இசை, ஷ்யாம். ஒளிப்பதிவு, வசந்த் குமார். எடிட்டிங் பி லெனின் மற்றும் வி டி விஜயன்.

பரதனுக்கு ஒழிவுகாலம் ம் சசிக்கு கரும்பின் பூவின் அக்கர யும் எழுதிக் கொடுக்கிறார்.

கே கே சுதாகரன் என்பவர் எழுதிய நாவலை திரைக்கதை செய்து நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள் படத்தை இயக்குகிறார். சப்ஜெக்ட் பத்மராஜனுக்கு அவ்வளவு பிடித்துப் போயிருக்க வேண்டும். நமக்கும் தான். வெறும் ஒரு காதல் கதை என்று சொல்லிவிட முடியாத படிக்கு காவியம் செய்யப்பட்டிருந்தது. லால் முக்குளித்து விளையாடினார் என்பதை தனியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். சாரி நாயகி. துயரத்தின் முகத்தில் விடுதலைக்கான ஏக்கம் ததும்புவதை செய்து காட்ட அவரால் முடிந்தது. அதைப் போலவே திலகன், அதைப் பற்றி சொல்லி முடிப்பது ஆகாத காரியம். பார்த்து அனுபவிக்க வேண்டும். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேணு. அட்டகாசம் தான். என்றால் ஒருபோதும் அத்துமீறல் இருக்காது. இசை ஜான்சன். எடிட்டிங் பி லெனின்.

கரியிலா காற்று போலே படத்தில் மம்முட்டியும் லாலும் இருந்தார்கள். இது ஒரு த்ரில்லரோ, துப்பறியும் கதையோ அல்ல. மனிதனின் அகங்காரம் அதன் வீழ்ச்சி போன்றவை சிறப்பாக அலசப்பட்டிருந்தன. மம்முட்டி அதன் இரண்டு தளங்களிலும் நின்று நம்மை அதிர செய்தார். ஸ்ரீபிரியாவும் அப்படியே. முற்றிலும் வேறு ஒரு தன்மை கொண்டிருந்த லால். கார்த்திகாவும், ரகுமானும் கூட முக்கிய பாத்திரங்களில் நிறைவு செய்திருந்தனர். கதை சுதாகர் மங்களோதயம். இசை ஜான்சன். இதற்கும் ஒளிப்பதிவாளர் வேணு தான்.

Mohanlal The Legend on Twitter: "Remembering the legendary #Padmarajan master.… "

தன்னுடைய சிறுகதை ஒன்றை அவர் படமாக்கியதே அரப்பட்ட கெட்டிய கிராமத்தில். இப்படத்தை பாராட்ட நான் எழுதியதெல்லாம் போதாது. மம்முட்டியும் நெடுமுடியும் அசோகனும் விளையாட்டு போல செய்த நடிப்பு மொத்தமாக அவர்கள் வேறு நபர்களை சுட்டிக்காட்டுவது போலிருக்கும். அதைப் போலவே ஒரு விபச்சார விடுதியின் பெண்களாக புழங்கின நடிகைகள் அனைவருமே அற்புதம். பொதுவாக பத்மராஜனின் படங்களில் சுகுமாரி ஏற்றிருந்த ஒரு கேரக்டரும் சோடை போகாது. இதிலும் அப்படித்தான். ஒரு காட்சியில் திலகன் வந்துவிட்டு போவார், அடேங்கப்பா. மற்றும் ஒரு அற்புதம் ஜெகதி. படத்திற்கு ஷாஜி என் கருணும், வேணுவும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு எவ்வளவோ போதாமைகளும், இடர்களும் நேர்ந்திருக்கின்றன என்பதை அறிய நேர்ந்தது. அதையும் தாண்டி படம் தனது முழுமையை தொடாமல் ஓயவில்லை என்பது முக்கியம்.

இரண்டு பள்ளி மாணவிகளைப் பற்றின கதை. அவர்கள் இருவரும் ஓடிப் போகிறார்கள். மிகுந்த துயருடன் முடியும். படம் லெஸ்பியன்களைப் பற்றியது தானா என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். படம் பற்றி எழுதின கட்டுரையில் அதை ஓரளவு கொண்டு வர முயன்று இருக்கிறேன். கார்த்திகாவும் சாரியும் நம்மை கலங்க செய்வார்கள் என்றால் அது வெறும் சம்பிரதாயம் அல்ல. நாமே அந்த வாழ்வுக்குள் நுழைந்து அவதிப்படுவது போன்ற கட்டங்கள் நேரிடும். ஊர்வசி, லால் போன்றோரும் படத்தில் உண்டு.இந்தப் படத்திற்கு ரவீந்திரன் இசை அமைத்திருந்தார். ஒளிப்பதிவு வேணு. எடிட்டிங் பி லெனின் செய்திருந்தார்.

படத்தில் பல மடிப்புகள் கொண்ட ஒரு திரைக்கதை நொம்பருத்தி பூவு. வழக்கமான அனாதைக் குழந்தை பற்றின படமில்லை என்பதை சொல்லியாக வேண்டும். ஒரு குழந்தையை சாவு நோக்கித் துரத்துகிற உலகைப் பற்றி அது பேசுகிறது. மாதவி, மம்முட்டி, லாலு அலெக்ஸ், முரளி என்று பலரும் இருந்தார்கள். குழந்தையாக சோனியா. எஸ் குமார் போட்டோகிராபி செய்திருந்தார். எம் ஜி ராதா கிருஷ்ணனும், ஜான்சனும் இசை அமைத்திருக்கிறார்கள்.

தூவானத் தும்பிகள் பலருக்கும் தெரிந்த படம். ஆனால் ஆளுக்கு ஆள் வெவேறு கதை சொல்லிக் கேட்டிருக்கிறேன். மோகன் லாலைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. தனிக்காட்டு ராஜா என்பதன் பொருள் விளங்கவே பார்க்க வேண்டும். சுமலதா இப்படத்தில் தன்னுடைய ஆழமான புன்னகையை விட்டுச் சென்றிருக்கிறார் காலா காலத்துக்கும். பார்வதி அது போலவே, மற்ற யாராவது செய்திருந்தால் அந்தப் பார்வை நம்மைத் தொட்டிருக்குமா? இது பத்மராஜன் எழுதிய நாவல். அஜயன் வின்சென்ட், ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இசை ரவீந்திர நாத், ஜான்சன். எடிட்டிங் பி லெனின் மற்றும் வி டி விஜயன்.

Advaid അദ്വൈത് ???? on Twitter: "Legendary Director Padmarajan bid adieu to the world on this day, 29 years ago, leaving behind a void and legacy the Malayalam industry can't replace. Remembering the

ஒரு மனிதன் தனது அடையாளத்தை இழப்பது பற்றின கதை. படத்தின் பெயர் அபரன். இந்த ஆதார் அட்டை காலத்தில் மிக முக்கியமான படமாக மாறுகிறது. ஜெயராம் அறிமுகம் செய்யப்பட்டார். ஷோபனா இருந்தார். முகேஷ், மது, பார்வதி, சோமன் எல்லோருமே தங்களை முழுமை செய்திருந்தார்கள். ஒளிப்பதிவு வேணு. எடிட்டிங் பி லெனின். இசை ஜான்சன்.

மூணாம் பக்கம், சந்தேகமில்லாமல் முழுமையாக இது ஒரு திரைக்கதையின் படம் என்றால், கூடவே ஒன்றை சொல்லியே தீர வேண்டும். இது இளைய ராஜாவின் படமும் கூட. எனக்கு படம் பார்க்கையில் ஒன்று தோன்றியவாறு இருந்தது, பத்மராஜனின் மனமறிந்தவாறு அவரைக் கூடவே தொடர்ந்தார் ராஜா. பின்னணி இசை உருக்கித் தள்ளியது. பாடல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். திலகன் தனது நிர்மலத்தை மட்டுமல்ல, கூடவே தன்னுடைய விஸ்வரூபத்தையும் காட்டியிருந்தார். ஜெயராம் உள்ளிட்ட அனைவரும் நிறைவு. எடிட்டிங் பி லெனின். போட்டோகிராபி வேணு. எப்போதும் முழுமை கொள்கிறவர் என்றாலும் இது மரணத்தின் நிழலைக் கொண்டு வந்த ஒளிப்பதிவு. காட்சிகள் மனதில் வந்து போகும்போது சில்லிடும்.

இதுவும் இளையராஜாவின் படம் தான். அடி பொளி என்பார்களே அது. தீம் சாங் மட்டுமே போதும். படத்தின் பெயர் சீசன். லால் புதிய முகம் தரித்து துணிச்சலான அந்தப் பாத்திரத்தை நிகழ்த்திக் காட்டியிருந்தார். பத்மராஜனின் மூன்று படங்களில் லால் இருந்ததை எடுத்துப் பார்த்தால் மூன்றுமே ஒன்றிற்கு ஒன்று ஒரு தினுசான தொடர்ச்சி  இருந்தது. ஒரு மனிதனின் மனத் திண்மையை உரைத்த படங்கள். அதற்கு வேண்டிய காரணங்களை அவர் சொல்லும் பாங்கு மிகவும் புதியது. ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டியது. லெனினும் விஜயனும் தங்களுடைய பங்கை மேலும் மேலும் சிறப்பாக செய்திருந்தார்கள். வழக்கம் போல இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர் வேணு தான். இதுவுமே அடி பொளி.

முழுமையாக ஷோபனா நின்று நிரவின படம். ஜெயராம், சுரேஷ் கோபி இருவருமே கொந்தளிக்க வேண்டியிருந்தது. ஸ்ரீவித்யா போன்றவர்கள் படத்தின் அடர்த்தி கூட்டினார்கள். கதை வாஸந்தி. படம், இந்நலே.  மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றார்கள். இசை ரவீந்திர நாத், மோகன் சித்தாரா. ஒளிப்பதிவாளர் வேணு. படத்தொகுப்பு பி லெனின் மற்றும் வி டி விஜயன்.

ஈ தணுத்த வெளுப்பான் காலத்து திரைக்கதை ஜோஷிக்கு எழுதிக் கொடுக்கிறார்.

பத்மராஜனின் கடைசி படம் ஞான் கந்தர்வன். ஒளிப்பதிவாளர் வேணு. படத்தின் ஒளிப்பதிவை அப்படியே கையெடுத்துக் கும்பிட்டு பாராட்டலாம். ஆனால் அவர் படம் துவங்கியதில் இருந்தே தவறான அலைகளை உணர்ந்ததாக சொல்லுகிறார். இந்தப் படத்தை எடுக்க வேண்டாம் என்று பல நண்பர்களும் சொன்னதாக சொல்லுகிறார்கள். எப்படியோ, எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் அருமையான காதல் கதை. எடிட்டர் லெனின். இசை ஜான்சன்.  

Image may contain: 20 people

இக்கட்டுரையுடன் இந்தத் தொடர் நிறைவு கொள்கிறது.

அதே சமயம் ஒன்றை சொல்ல வேண்டும். விக்கி பீடியா உதவியுடன் ஆர்டர் செய்த இந்த டேட்டாக்களில் விவரப் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். பத்மராஜன் ஒருவரைத் தவிர மற்ற எதுவும் முக்கியமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை.

நன்றி. 

****

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/

தொடர் 15ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-15/

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-16/

தொடர் 17ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-17/

தொடர் 18ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-18/

தொடர் 19ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-19/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *