இந்த மாதிரி இசை போதனையின் குறித்து பேசுகிற பகுதிகளைவிட ஒரு வேளை மிக முக்கியமானது என்னவென்றால். இசை கேட்கும் முறை பற்றிய பொதுவான மனப்பான்மை. மரியாதையுடனும் புரிந்துக்கொண்டு  அதைப் பற்றிய சரியான அறிவுடனும் கேட்க வேண்டும். 

இசையில் உணர்ச்சிப்பெருக்கில் மிகவும் ஈடுபட்ட கலந்து விடக்கூடாது. இசைக்கருவி வசிப்பவர் அல்லது போதிப்பவர் அதிகாரத்திற்கு உட்பட்டு பலர் இசையைக் கேட்பவர்கள் உண்டு.  சாதாரண ரசிகர்கள் இசை ஒரு படிநிலையின் கடைசி படியில் நிறுத்தப்படுகிறார்.  இசை பற்றி இப்படியான சிந்தனை அதிகாரத்தின் அமைப்புகளோடு நெருக்கமான பிணைப்பு கொண்டது.  

இதில் உள்ள முக்கியமான நோக்கம் இசையில் ரசிகன்னுடைய  பங்குபற்றிய வறுமையுற்ற நோக்கினை எதிர் நிலைப்படுத்த வேண்டும் என்பது தான். பெரும் இசையை செயலற்ற நிலையில் ரசிப்பதை விட மாணவர்கள் தங்கள் கையில் இசையை  எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப் படுத்தப் பட்டன அதனால் விமர்சனம் மீண்டும் தொடங்கியது.

பீத்தோவனின் கட்டுக்கதையை சேர்ந்ததாக அது முன்வைத்து உயர்த்திப்பிடிக்கும் இசையைப்பற்றி சிந்தனையுடன் சேர்ந்ததாக இருப்பது “இசை ஓர் அழகியல் மூலதனம்” என்ற கருத்து. நல்லதொரு மது ரசம்  போல  இசையை எதிர்கால மகிழ்ச்சிக்காக வைத்துக்கொள்ளலாம் என்ற கருத்து  முவைக்க படுகின்றது.  நமது மறைவுக்குப் பின்னால் நமது இசை வகிக்கக்கூடிய பங்கினை பற்றி குறிப்பாக நினைத்து இசை அமைப்பாளர்களின் என்ன ஓட்டம் முற்போக்கு சிந்தனையாக இருந்தது. அதில் மிகவும் முக்கியமானவர் பீத்தோவன் என்கிறார் கூக்.

இதய பாதிப்பில் இருந்து விடுபட உதவும் இசை! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www ...

உளநிலைப் பகுப்பாய்வு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிகளிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆஸ்திரியா நரம்பியலாளர் சிக்மண்ட் பிராய்ட் உருவாக்கிய உளவியல் மற்றும் உளவியற் சிகிச்சை முறையாகும். உளநிலைப் பகுப்பாய்வு பல பகுதிகளிலும் வளர்ச்சியுற்று, விமர்சனத்திற்கு உள்ளாகி, விரிவடைந்து காணப்படுகின்றது. பிராய்ட் சில மாணவர்கள் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு இயக்கவியல் மனோவியல்அல்லது இயக்க உளவியல்ஆகும்.

 இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை

சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,

உணர்வு மனம் 

உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் 

தொலை நோக்கு மனம்

இசை இந்த பணியை தொடர்ந்து செய்துவருகின்றது. 1885 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிக்மண்ட் பிராய்டு இப்னாசிஸ் விஞ்ஞான ஆராய்ச்சியை நடத்திய புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான ஜீன்-மார்டின் சார்கோட் உடன் படிப்பதற்காக பாரிசுக்கு சென்றார். அவர் பிறிதொரு சமயம் இந்த அனுபவத்தை, மருத்துவ உளவியல் சிகிச்சையை நடைமுறையில் பயன்படுத்தவும், நரம்பியல் ஆராய்ச்சியில் குறைவான நிதியில் தொழிலில் உறுதியான ஒரு எதிர்காலத்தைப் பெறுவதற்கும் விடாமுயற்சி மேற்கொள்ள என்னைத் துாண்டிய தருணம் என நினைவுகூர்கிறார்.இங்கே பக்தியிசையை இந்த கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் நம்மக்கு புலனாகின்றது.

ஒரு தனிமனிதரின் ஆளுமையிலும் அவரது உறவு முறைகளிலும் அவரது குழந்தைப் பருவ அனுபவங்கள் அவை கேட்ட இசை  முக்கியமானவை என்ற தற்கால ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பை, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே அழுத்திக் கூறியவர் ஃபிராய்ட். இதனால் மேம்பாட்டு அல்லது குழந்தை உளவியல் என்ற கிளைத் துறைக்கு வித்திட்டவர் அவரே. நினைவாற்றல் பற்றிய இன்றைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள், ஃபிராய்ட் கூறியபடி சில நினைவுகள் ஆழ்மனதில் பதிந்துள்ளதாக இப்போது ஏற்றுக்கொள்கின்றன.

சிறுவன் : உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட்

பத்து ஆண்டுகள் மிதிவண்டி ஓட்டுவதை நிறுத்தியிருந்த ஒருவர், எடுத்த மாத்திரத்தில் மீண்டும் அதை ஓட்டும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? இதுபோன்ற ஞாபகச் சக்தி இப்போது உட்கிடை நினைவாற்றல் என்று அழைக்கப்படுகிறது. 

அவரது சிந்தனைகளின் தாக்கங்கள் மனநலனையும் தாண்டி கலை, இலக்கியம், மானுடவியல் எனச் சமகாலக் கலாச்சாரத்தின் பல தளங்களில் நிலைத்து நிற்கின்றன. ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த அவர் மதத்தைப் பற்றி அளித்த உளவியல் விளக்கங்கள் பலருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஆனாலும் தனது இறுதி நாள்வரை அவர் கொள்கை வலிமையோடு ஓர் இறைமறுப்பாளராக, பகுத்தறிவுவாதியாக இருந்தார்.

தனிமனிதரையும் கடந்து மனிதர்கள் ஒரு குழுவாகச் செயல்படும் விதத்தை விளக்கி, இன்றைய சமூக உளவியலுக்கு அடித்தளம் அமைத்தவரும் அவரே.

சிக்மண்ட் பிராய்ட்,’மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்’ என்று கருதினார்.

மொழியே இல்லாத சூழலிலும் குழந்தையை தாலாட்டி தூங்கவைத்தும், மகுடிக்கு நாகத்தை மயங்கவைத்தும், காதலரை ஏங்க வைத்தும், வயல் வெளியில் பயிர் வளர உதவி செய்தும், நோய்க்கு மருந்தாக விளங்குவதையும் பார்க்கின்றோம். இசைக்கு வசப்பட்டதைப் போல வேறு எந்த கலைக்கும் உள்ளம் வசப்பட்டதாக வரலாறு இல்லை என்கின்றார் சீர்காழி கோவிந்தராஜன். 

தற்கால மருத்துவ முறைகளில் இசையின் பயன்பாடு ஏராளம். குறிப்பாக மனோதத்துவ மருத்துவத்திலும், மன வளர்ச்சி தேவைப்படுகிற சிறப்பு குழந்தைகளுக்கும் முக்கியமாக பயன்படுகிறது. பாடலைப் பாட முயற்சிப்பது அல்லது கேட்பது மட்டுமல்ல, தாளங்களை ஒருவர் வாத்தியத்தில் வாசிக்க, அதை நோயாளிகள் எதிரில் பின்பற்றி வாசிப்பது என்பது ஆழ்மனக் கட்டுப்பாட்டை ஒரு சாராருக்கும் கை மூட்டுகளில் வலியோடு இருப்பவர்களுக்கு நிவாரணமும் தருகிறது.

The Pros and Cons of Listening to Music | AIS Panther Paper

பாடல் வரிகளில் உள்ள நம்பிக்கை, இசை வடிவோடு வரும்போது நல்ல குணம் கிடைக்கிறது.  இப்படி வெகு காலத்திற்கு முன்பே இசையின் நோய் தீர்க்கும் தன்மைகளை நம் தமிழ் இசை கொண்டிருப்பது இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 

நமது உடல் இயக்கத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இசை ஊறி இருப்பதை நம்மால் உணரமுடியும். நமது நாடித் துடிப்பு ஆதியில் மனிதன் தாள லய பிடிப்பின் ஒழுங்குமுறையை முதலில் உணரக் கிடைத்த ஒன்றாகும். மூச்சு சுவாச முறை காற்றின் வெளிப்பாட்டையும், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவியை அவன் உணர கிடைத்ததாகும். மனிதனின் இருதய துடிப்பு மனிதனுக்கு பல வகையான தாள நடைகளை ஒழுங்குமுறையுடன் உணர்த்தியதை காணமுடியும். இதையெல்லாம் உணர்ந்த மனிதன், தன்னிடம் இருந்த குரலை உயர்த்தி இசை பாடினான், சொற்களை கூட்டி பாடலாக்கினான், குறிப்பாக, நம் தமிழர்கள் மொழி சார்ந்த அங்கமாகவே இசையை ஆக்கினான். எனவே தான் திறமையான இசையை ஒரு சிறப்பு அம்சமாகபார்க்க படுகின்றது.வரலாறுகள் மீளெழுச்சி செய்ய படவேண்டும் இசை அறிஞர்களை முன்னிறுத்தப் படவேண்டும். 

 

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-14/

தொடர் 15ஐ வாசிக்க

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-16/

தொடர் 17ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-17/

தொடர் 18ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-18/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *