முந்தைய கட்டுரையில் எழுதிய ஆபோகி போகி ஆகிப் பொங்கித் ததும்பி அன்பர்கள் பலரைக் கொண்டாடவும், பழைய சிந்தனைகளில் மீண்டும் பண் பாடவும் வைத்து விட்டிருக்கிறது. வகுப்புத் தோழன் ரவி, உடன் வேலை பார்த்த எஸ் ஆர் சுப்பிரமணியன் இருவரும் கவிதையாகவே வரைந்து தள்ளி இருக்கின்றனர். ‘இரண்டு வாரங்களாக டி ஆர் மகாலிங்கத்தின் பாடல்கள் அமர்க்களமாக ரசித்துக் கேட்டேன், இந்த வாரம் யாரோ?’ என்று பெங்களூரில் இருந்து அழைத்துக்   கேட்டார்  உடனுக்குடன் வாசிக்கும் கோமதி அம்மாள். டி ஆர் மகாலிங்கத்திற்கு முன்னும், அடுத்தடுத்தும் வெவ்வேறு வித ரசனையில் ஒலித்த எத்தனை எத்தனை மகத்தான இசைக் கலைஞர்கள்.

பள்ளிப்பருவத்தில், கல்லூரிக் காலத்தில், சிறப்பான ஆசிரியர்கள் வாய்க்கும்போது, கலை இலக்கிய ஆர்வமும், சமூக அக்கறையும் இன்ன பிற ஆரோக்கியமான அம்சங்களும் தேடல் மிகுந்த மாணவர்களுக்கு வரமாக வாய்க்கிறது. தொண்ணூறு வயதைக் கடந்திருக்கும் மூத்த கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன், இடையறாது வாசிப்பவர், நல்ல இசை நிகழ்ச்சிகள் பார்ப்பவர். ‘தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை குறித்த மிகப் பெரிய புத்தகம் உள்ளிட்டு மூன்று நூல்கள் தருவித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்என்று அண்மையில் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். டி ஆர் மகாலிங்கம் பற்றிய இசை வாழ்க்கை கட்டுரை, அவருக்குக் கிளர்த்திய அவரது இளமைக்கால நினைவுகள் எத்தனை ருசியானவை என்பதை அவரது எழுத்திலேயே நீங்களும் சுவைத்துப் பாருங்கள்:

“…..எனது கணித ஆசிரியர் திருச்சிக்காரர். சினிமா பைத்தியம். பள்ளியில் நிரந்தர நாடக இயக்குநர். ஜாவர் சீதாராமனின் மாமா, பின்னர் மாமனார்வகுப்புத் தொடக்கமே சினிமாவில் தான் இருக்கும். ‘டேய், ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணியைப் பார்த்தீர்களாஎன்று கேட்பார். பலரும் பார்த்திருப்பார்கள். இருந்தபோதிலும் இல்லை என்பார்கள். ஜடங்கள் உருப்படாதுகள் என்று சொல்லிவிட்டு கதையைச் சொல்வார். மூன்று நாட்களுக்குத் தொடரும். சி.எஸ் ஜெயராமனை சிதம்பரம் சிங்கக்குட்டி ஜெயராமன் என்பார். ‘அவனுக்கு வாரிசாக டி.ஆர்.மகாலிங்கம் வருவான்என்று ஆரூடம் கூறுவார். வெள்ளை உள்ளத்துக்காரர். பட்டுக்கரை வேஷ்டி தான். வாய்நிறைய புகையிலையும் வெற்றிலையும்.”

ஆஹா..என்ன மாதிரியான சுவாரசியமான இசை வாழ்க்கை. அதனால் தான், நுட்பமாக கவனிக்க, நுணுக்கமாக ரசிக்க முடிகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இசை நிகழ்ச்சிகளை அவர்களது சானலில் தொடர்ந்து ரசித்து பார்க்கும் எஸ் எஸ் ஆர்,  கடந்த மாதம் அனுப்பிய மின்னஞ்சல் இது: “,,,நேற்று நாத நீராஜனம் நிகழ்ச்சியில் மூன்று கலைஞர்கள் சேக்ஸஃபோன் வாத்தியத்தை அதி அற்புதமாக இசைத்தார்கள். அவர்கள் பெயர்கள் வெளியிடப்படவில்லை.  இத்தகவலைப் பெற்றுத் தந்தால் மகிழ்வேன்”  என்று அனுப்பி இருந்தார், அதற்கு அடுத்த வரியில் அடைப்புக்குறிக்குள் ஒரு கவிதை பாருங்கள், ( இல்லையென்றால் அழுவேன்!! ). 

தொலைக்காட்சி சானல்கள் சிலவற்றில் நிகழ்ச்சி தொடங்கும்போது பெயர்கள் சொல்வதோடு சரி, பின்னர் வந்து இணைபவர்கள் யார் கச்சேரி, யார் யார் பக்க வாத்தியம் என்று அறிய விரும்பினால் ஊகித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். நல்ல வேளையாக யூ டியூபில் ஒரு மாதிரி எழுதித் தேடியதும் முழு நிகழ்ச்சி கிடைத்தது, அறிவிப்பில் கேட்ட பெயர்களை அவருக்கு அனுப்பியதும் அத்தனை உற்சாகம் அடைந்தார்

ண்மையில், நாம் காலகாலமாக அறிந்த சத்யவான் சாவித்ரி கதையை, மேற்கத்திய சங்கீத வழியில் வடிவமைத்து, இசைப்பதிவும் செய்திருக்கும் புது யுக  இசைக் குழுவின் ஆல்பம் – 2002 (பாமெலா மற்றும் அவர் கணவர் ராண்டி கோபஸ், பின்னர் அவர்கள் மகள் சாரா கோபஸ் இணைய இந்தக் குழுவின் ஆல்பங்கள் மிகவும் பெயர் பெற்றவை!) மற்றும் 1916ல் குஸ்தாவ் ஹோல்ஸ்ட் (ஜெர்மானியர்) செய்திருந்த சாவித்திரி ஆக்கம் இரண்டையும் இந்த கொரோனா காலத்தில் பழைய பொக்கிஷத் தேடலில் இசை ஆர்வத்தோடு தேடிக் கண்டடைந்தேன் என்று பேசும் மீனாக்ஷி கணேஷ் அவர்களது அபாரமான கட்டுரை ஒன்றை சொல்வனம் இணைய இதழில் இருந்து எடுத்து அனுப்பி இருக்கிறார் எஸ் எஸ் ஆர்.

மீனாக்ஷி கணேஷ் கட்டுரையின் சுவாரசியம் இந்த அற்புத புதையலோடு நிற்கவில்லை, கட்டுரையாளரின் சொந்த படைப்பூக்க முயற்சியில் சத்யவான் சாவித்ரி கதையைத் தாமும் இசை வழி கடத்தித் தம்முள் ரசித்துக் கொண்டாடும் செய்தி அதில் இருக்கிறதுதென்னிந்திய சம்பிரதாய இசை முறையில் தாமே மறு உருவாக்கம் செய்கிறார் தேர்ச்சியான ரசனையோடு. இசை ஒரு புறம் இருக்கட்டும், அவர் கதையைச் சொல்லச் சொல்ல அந்த சொற்களிலேயே இசை உருகி வழிந்தோடத் தொடங்குகிறது

ஒரே ஒரு முக்கிய பகுதியை மீனாக்ஷி வரிகளில் பார்க்கலாம்சாவித்ரி அசுவபதியிடம் சத்யவானுடனான தனது சந்திப்பைப் பற்றிக் கூறுகிறாள். அங்கு விருந்தினராக வந்திருக்கும் நாரத முனிவர்  அரசனிடம்சத்யவான் இன்னும் ஓராண்டுக் காலமே உயிர் வாழ்வான்; அவனுக்கு ஆயுள் குறைவுஎனத் தெரிவிக்கிறார். ரேவதி ராக இழைகளின் ஒலியில் அரசனின் ஆதங்கமும் சோகமும் அதிர்ச்சியும் தெரிகின்றன. ஆனால் சாவித்ரி, “இவரே என் மணாளன்எனும் தனது உறுதியிலிருந்து தளரவில்லை…..



இந்த இணைப்பைத் தட்டிப் பார்த்தால், இசை ஆர்வலர்கள், சாவித்ரி கதையின் மூன்று வடிவங்களையும் சந்திக்க முழு கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்

சாவித்ரி- ஓர் இசை

டிகையர் திலகம் சாவித்திரியே சாவித்திரியாக நடிக்க, சத்யவான் வேடத்தில் சிவாஜி கணேசன் கலக்கிய  நவராத்திரி மறக்க முடியாதபடி நினைவுக்கு வந்தது. அந்தக் கதைக்குப் போகுமுன் ஒரு துணைக் கதை ஒன்று உண்டு. வேலூரில் வசித்து வந்த பள்ளிக்கூட விடுமுறை நாள் ஒன்றில், அண்ணன் எஸ் வி ரங்கராஜனோடு பேசிக்கொண்டே ஊரின் அடுத்த முனையில் இருந்த சினிமா தியேட்டரை அடைந்தால், அங்கே நவராத்திரி படம், கையில் இருந்ததோ யாரோ ஒருவர் மட்டுமே சீட்டு வாங்கும் அளவு சொற்ப காசு, யோசிக்காமல் என் அண்ணன், “நான் முன்பே இந்தப் படம் பார்த்த நினைவு, நீ மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வந்து எனக்கு கதை சொல், படம் முடிந்ததும் நானே திரும்பி வந்து உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்என்று அந்தக் காசுகளை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்ற தருணம்இப்போது நினைக்கும்போதும் கண்ணீர் மல்க வைப்பது. (அவரைப் பற்றிய எளிய கட்டுரையை இதில் வாசிக்கலாம்

https://www.thehindu.com/opinion/open-page/A-beloved-brotherhood/article14257220.ece )

பி நாகராஜன் அவர்களது அசாத்திய திரை மொழியின் இன்னொரு செயல்விளக்கமான நவராத்திரி படம் பற்றி மட்டுமே மணிக்கணக்கில் பேசலாம். அதில் இந்த சத்யவான், சாவித்திரி தெருக்கூத்து, மதுரை ஸ்ரீ பால கான சபா பதாகை மின்ன, திரை விலகவும், பளா பளா ..தான்அதாகப்பட்டது தான்…. இந்த சொந்த நந்த வனத்திலே தான்….()லாவி வரும் வேளையிலே தான்அந்த சிங்கம் விரட்டித் துரத்தி வகையிலே, வீர பிரதாபப் பட்டவர் வந்து நின்று அதைக் கொன்று பின் சென்று (ஓர் இடைவெளி விட்டுவிட்டாரே தான்ஆஹா….தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் புனைவில், அந்தப் பாடல்களும், வசனங்களும் சிவாஜியும், சாவித்திரியும் தெருக்கூத்துக் கலைஞர்கள் போலவே உடல் மொழியும், பேச்சு மொழியாக அசத்தி இருக்கும் காட்சியில் டி எம் எஸ், பி சுசீலா அந்தக் காட்சி எப்படி அமையவிருக்கிறது என்கிற கற்பனையோடு முன்னதாக பாடல் பதிவில் என்னமாகப் பாடி இருந்தனர்



https://www.youtube.com/watch?v=lOLpdXd_DwE&t=69s



சிவாஜியின் குரல் ஒரு தினுசாகவே மாறி இருப்பதைக் கேட்க முடியும். சாவித்திரியின் நொடிப்பும், துடிப்பும் கேட்கவே வேண்டாம். இன்னும் மணமானதோ என்ற கேள்விக்கு ஹோஹோ என்ற பின்பாட்டுக் கலைஞர் குரல், சொல்ல வெட்கமாகுதே என்ற சாவித்ரியின் பதிலுக்கு, ஓஹோ என்ற ரசிப்புக் குரல் டி எம் எஸ்.! அதிலும், ‘நாரீமணியேஎன்று சிவாஜி விளிக்கும்போதுசுவாமிஎன்று சாவித்திரி கொஞ்சலாக மறுமொழி எடுப்பதும், பின்னர் சாவித்திரி, ‘பிரபோஎன்று விளிக்கும்போது, ‘பெண் பாவாய்என்று சிவாஜி அதை வாங்கிக் கொள்ளும் இடமும் எத்தனை ருசியானது! இயலிசை நாடகம் என்ற முத்தமிழும் கொஞ்சும்  காட்சிகள்…..

டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா குரலினிமையும், கற்பனையோடு இழைத்திருக்கும் சங்கதிகளும், ஆலாபனைகளும் அமர்க்களமானவை. பின்பாட்டு என்றால்எஸ் சி கிருஷ்ணன் அவர்களைத் தவிர வேறு யார், அவரே தான்….’நான் இருக்கேன்….ஹெ…..ஹே…..ஹேஎன்ற இழுப்பும், ‘மட மானேஎன்ற விளிப்பை, இன்னும் அழுத்தமாகமடமானேஎன்ற எடுப்பும், ‘அக்கம் பக்கத்தோர்கள் என்னை அழைக்கும் பேர் சாவித்ரிஎன்றதும், அதே சாவித்ரியை, ‘சாவித்ரிஎன்று பிரித்துப் பாடி வெளுத்துக் கட்டுவதும், நாடகத்தின் இசைக்குழுவில் நடித்தவர்களும் பின்னி எடுத்திருப்பார்கள். மிகக் குறைந்த கால அளவுக்குள், முழு கதையில்லாமல் இருவர் சந்திப்பு, காதல், கடிமணம் என்பதோடு நிறைவு செய்யப்படும் நாடகத்தின் ரசனை அபாரமாக வெளிப்பட்டிருக்கும். (மற்ற பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன்இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் பற்றி மட்டுமே தனியே எழுத அவ்வளவு இருக்கிறது. திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களது கற்பனைத் திறனும், ஆற்றலும் அப்படி!)

ம்பீரமான நாடகக் கலைஞர்கள் என்றாலும், கூத்து நடக்க இருக்கும் சிற்றூரில் மக்கள் எதிரே, சபைக்கு வந்தனம் செய்வதில் எத்தனை பணிவு, பவ்வியம் என்பது எத்தனையோ கூத்துக் கலைஞர்களை நினைக்கையில் கண்ணீர் பெருக்குவது! ஊர்ப் பெரிய மனுசர்கள், பெண் கலைஞருக்கு அசடு வழிந்து கொண்டு மேடையில் ஏறி மாலை போடத் துடிப்பதும், அதை நியாயப்படுத்த முன்னதாக ஆண் கலைஞருக்கும் ஒரு மாலையைப் போட்டுவிட்டுப் போய்க் காத்திருப்பதும் எத்தனை நுட்பமாகக் கொண்டு வந்திருந்தனர் திரையில்

தெற்கே ஸ்பெஷல் நாடகம் என்று அழைக்கப்படும் கூத்து குறித்தெல்லாம் நேரில் சென்று, கலைஞர்களோடு பேசி அவர்கள் வாழ்க்கையை உடனிருந்து பார்த்துகாயாத கானகத்தேஎன்ற தலைப்பில் நூலாக்கம் செய்துள்ள ஆய்வாளர் கி பார்த்திபராஜா, காமிக் என்று அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர்கள் சிரிப்பைத் தூண்ட இரட்டைப் பொருள் வசனங்களை எல்லாம் பேச நேரும் தங்கள் அபத்த வாழ்க்கை குறித்து ஒரு பெண் கலைஞரது கண்ணீரும் கலந்த நேர்காணலைப் பதிவு செய்திருப்பார்.

காஞ்சிபுரத்தில், சொந்தவூர் சொறையூரில், சித்தி வீட்டுக்குப் போகையில் வாங்கூரில் என வெவ்வேறு ஊர்களில் பார்த்த தெருக்கூத்து அனுபவங்கள் மறக்க முடியாதவை. அந்தப் பாடல் வரிகள் பற்றி வேறொரு சமயத்தில் பார்ப்போம்.

கூத்து என்று பேசுகையில், கூத்துப் பட்டறை முத்துசாமி அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. அருமையான கலைஞர்களை உருவாக்கியவர். தமிழ்த் திரையின் முக்கிய நடிகர்கள் பலரும்  அவரிடம் பயிற்சி பெற்றவர்கள். முற்பட்ட வகுப்பில் பிறந்த அவர், சென்னை திருவல்லிக்கேணி மீனவர் பகுதிக்கு அருகே தான் குடிபுகுந்தார், ஒடுக்கப்பட்ட மக்களோடு அவரது சிந்தனை, செயல்பாடு எல்லாம் கலந்திருந்தது என்பது மட்டுமின்றி அவரது இறுதி ஊர்வலத்தில் உரக்க ஒலித்த பறையொலி எதிரொலித்தது அவரது அர்ப்பணிப்பு மிக்க இசை வாழ்க்கையை,

முத்துசாமி அவர்களது பட்டறையில் இருந்து தமிழ்த் திரைக்கு வந்தவர்களுள் முக்கியமானவர் நாசர். தொண்ணூறுகளில் வந்த அவதாரம் திரைப்படம், அவரது சிறப்பான முயற்சி. மறைந்த பாலா சிங், காகா ராதாகிருஷ்ணன் இருவரது நடிப்பும் அபாரமாக இருக்கும். இவர்களும், படத்தின் அடுத்த முக்கிய பாத்திரம் டெல்லி கணேஷும்  நாடகக் கலைஞர்களாக இருந்து திரைக்கு வந்தவர்கள். கண் தெரியாத பாத்திரத்தில் ரேவதியின் பங்களிப்பு வேறொரு தளத்தில்.படத்தின் பாடல்கள் பலவும் இசையமைப்பாளர் ராஜாவே அமர்க்களமாக பாடி இருப்பார்





ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுல காதுல..’  என்ற ரசமான பாடலில் ஹார்மோனியத்தின் விளையாட்டும், தெருக்கூத்து பாணியில் ராக ஆலாபனையும் அற்புதமாக இருக்கும்நாசருக்கு அத்தனை பாந்தமாகப் பொருந்தும் இசை ஞானியின் குரல், அதுவும் காயாத கானகத்தே என்று இழைக்கும் இடம் இந்தப் பாடலின் சிறப்புத் தித்திப்பு.  ‘பகலுல ஸ்ரீ ராமரு ராத்திரியில் ராவணரு, வேஷம் போட்டா நம்பியாரு கலைச்சுப்புட்டா தம்பி யாரு……..குப்புன்னு நாறுது வேப்பெண்ண அதைக் குப்பண்ணா சொன்னா தப்பண்ணேபோன்ற வரிகளும் ஆஹாஆஹாஇடையே தன்னியல்பான சிரிப்புகள் தனி ருசி!தெருக்கூத்து கலைஞருக்கான பன்முக அடவுகளை இந்தப் பாடலில் அசாத்தியமாகக் கொண்டுவந்திருப்பார் நாசர்.





அரிதாரத்த பூசிக்கொள்ள ஆச….’ பாடல் ரசனை மிக்க சுவாரசியங்கள் நிறைந்தது. ‘பாட்டுன்னு நினைப்பதெல்லாம் இசைப்பாட்டாக இருப்பதில்லேஎன்று எஸ் ஜானகி சிறப்பாக இழைக்கும் இடத்தில், ‘அது என் பாட்டு இல்லஎன்று ஒலிக்கும் குரல் சுவையானது. ‘ராக்கூத்துல வரும் சாமியெல்லாம் நெச சாமின்னு பார்க்காது ஊர் சனமேஎன்ற வரியில் நிற்கிறார் வாலிபாட்டுக்காக நாசர், துணி துவைத்துக் கொண்டே அடவு கட்டி ஆடிக் காட்டுவது ஓர் அப்பாவியின் கலையார்வத்தை அம்சமாக வெளிப்படுத்தும்.

படத்தின் வண்ணமயமான பாடல், ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ‘!  இதிலும் எஸ் ஜானகியும் இளையராஜாவும் தான்! இந்தப் பாடல் பிறந்த கதையை, நாசர் ஒரு விழாவில் விவரித்தது எண்ணற்றோர் பார்த்த காணொளிப் பதிவாக இருப்பது. தமக்கான பாடல்களை எத்தனை அசாத்தியமான முறையில் இசையமைத்தார் ராஜா என்பதை , அந்தச் சூழலை, அழகாக விவரிப்பார் நாசர்





அது மட்டுமல்லமென்கதியில் தொடங்கும்படி மெட்டமைக்கப்பட்டிருப்பதில் நாசர் தமக்கு பட்பட்டென்று இதயம் அடித்துக் கொண்டதையும், தயங்கித் தயங்கி அதை ராஜாவிடம் போய்ச் சொல்ல, மிக இலகுவாகப் பாடல் திறப்பில் குழந்தைகளின் துள்ளல் ஹம்மிங் ஒலிக்கவைத்து அவர் விருப்பத்தை விரைந்து நிறைவேற்றி அதே மெட்டில் பாட்டை விரும்பிக் கேட்கும் பாடலாக வழங்கியதும் ராஜாவின் திறனை பிரதிபலிப்பதுஇந்தப் பாடலும் வாலி தான்!





வெவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுதுஎன்ற வரியில், சித்தாள் ஒருத்தி சும்மாட்டைக் கழற்றி இளைப்பாறியவாறு உதிர்க்கும் உலர்ந்த புன்னகை போலப் புறப்படும் பாடல் ஜானகியின் நாட்டுப்புறப் பாடலுக்கான உச்சரிப்பிலும், உணர்ச்சி வேகத்திலும் நிறைய சிந்திக்க வைக்கும்.  ‘எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குதுஎன்ற இடத்தை ராஜா அழகு ததும்பப் பாடுவார் ! இரண்டாம் சரணத்தில், ‘குயிலே குயிலினமே அதை இசையாய்க் கூவுதம்மாஎன்று இளையராஜா சொல்ல, ‘கிளியே கிளியினமேஎன்று கொஞ்சியபடி ஒலிக்கும் ஜானகி குரலில் கிளி பேசத்தொடங்கி விடும். பாடல் முழுவதும் குழந்தைகளின் ஹம்மிங், வயலின் உழைப்பு, இன்ன பிற இசைக்கருவிகளின் இசை நெஞ்சைத் தொடும்

கா எந்திரத்தில் எங்கோ அடியாழத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறோமோ, சம காலத்தின் இசையை நழுவ விட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை ஒரு பக்கம் வந்துபோய்க் கொண்டிருக்க, தோழர் சோபனா அவர்களும் இந்த விஷயத்தை இன்னும் துல்லியமாகச் சுட்டிக் காட்டினார், எல்லா வயது வாசகரும் வருகை புரியும்  இந்தத் தொடரின் எழுத்து கொஞ்சம் நிகழ்காலத்தின் இசையையும் ஒலிக்க வேண்டாமா என்றுஉண்மைதான்.

அதே நேரத்தில் பழைய நாவல்கள், தெருக்கூத்து, பிக்காஸோ ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் போன்றவை அடுத்தடுத்த தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, கால காலத்திற்குமான இசை என்று பழைய பாடல்களில் மனத்தைப் பறிகொடுக்கும் இளைஞர்கள் உண்டு

இளையதலைமுறை வங்கித் தோழர் மணிகண்டன்,  ‘பத்தாம் வகுப்பு வரை பொதிகை அலைவரிசையில் பாடல்கள் கேட்டதால் என்னவோ, பழைய பாடல்களும், படங்களும் மிகவும் பிடிக்கும்என்று சொல்வார்.

உயிர்ப்புடன் ஒலிக்கும் இசையும் பாடலும் குரலும் எல்லாக் காலங்களிலும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கும். ரசனையின் சிறகடிப்பில் துள்ளும் உள்ளம், பின்னோக்கி மட்டுமல்ல முன்னோக்கியும் பறக்கவே செய்யும். பறவைகளுக்கு வானம் பொது.

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com



தொடர் 1 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – வாசிக்க

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – வாசிக்க

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/



தொடர் 9 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

தொடர் 11 – வாசிக்க..

https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/

தொடர் 12 – வாசிக்க..

http://music-life-series-12-venugopalan-sv

தொடர் 13 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-13-venugopalan-sv/

தொடர் 14 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-14-venugopalan-sv/

தொடர் 15 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-15-venugopalan-sv/

தொடர் 16 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-16-venugopalan-sv/

தொடர் 17 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-17-venugopalan-sv/

தொடர் 18 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-18-venugopalan-sv/

தொடர் 19 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-19-venugopalan-sv/

தொடர் 20 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-20-venugopalan-sv/

தொடர் 21 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-21-venugopalan-sv/

தொடர் 22 – வாசிக்க..

https://bookday.in/music-life-series-22-venugopalan-sv/



3 thoughts on “இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்”
  1. நவராத்திரி படத்தின் சத்தியவான் சாவித்திரி காட்சியை எழுத்தின் மூலம், கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்.
    கூடுதலாக காட்சியும் இலவச இணைப்பாய்.
    ரசித்து மதிழ்ந்தேன்.
    நன்றி ஐயா

  2. An optimist sees opportunity even in calamity-என்பதற்கிணங்க சாவித்திரி அந்தக் காலத்திலேயே முடிவெடுத்ததைத் தாங்கள் அருமையாக எழுதியிருந்தீர்கள்.

    தங்கள் அண்ணா,தங்களுக்குத் தாயுமானவராகவும் திகழ்கிறார் அன்று முதல் இப்போதும்.
    நெகிழ்கிறது மனது.

  3. சிறப்பு…சிறப்பு. 360டிகிரியும் இசை வாழ்க்கை சுழல்கிறது ஏதேனும் எண்ணமப் பக்கங்களை புரட்டியபடியே. முடிவில்லாத அலைகள் போல
    எத்தனை எத்தனை நினைவுகள் தூண்டப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *