ஹாம் வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பது ஒரு சுகம் எனில், அதனை ஆவணப்படுத்துவது அடுத்த சுகம். இதில் என்ன பெரிதாக இருக்கப் போகிறது என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல். சிற்றலை வானொலியைக் கேட்கும் நேயர்கள் தினமும் ஏராளமான சிற்றலை வானொலிகளை கேட்கின்றனர். அனைத்து வானொலிகளுக்கும் ‘நிகழ்ச்சி தர அட்டவணையை’ (Reception Report) அனுப்பி வண்ண அட்டைகளை (QSL cards) பெறுவார்கள். அதற்காக அந்த வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களைத் தனியாக ஒரு நோட்டுப் போட்டு எழுதி வைப்பார்கள். அப்படியான ஆவணம், அவர்கள் எந்த வானொலியை, எந்த நேரத்தில், எந்த அலைவரிசையில் கேட்டார்கள் போன்ற விபரங்கள் அதில் இருக்கும்.

இந்த நோட்டுப் புத்தகத்தினை வேறு எந்த வானொலி ஆர்வலரும் எடுத்துப் படித்தால், மிகுந்த ஆர்வம்  கொள்வார்கள். அதற்குக் காரணம், அதில் உள்ள தகவல்கள் அப்படி. இன்னும் ஒரு படி மேலே போய், அந்த வானொலியை, பார்க்கும் நண்பரும் கேட்க முயற்சி செய்வார். அது போன்று தான், ஹாம் வானொலியின் ஆவணப்படுத்தலும். ஆனால், இந்த ஆவணப்படுத்துதல் கொஞ்சம் வித்தியாசமானது. இதற்கு என்று தனியாக ஒரு வடிவம் உள்ளது. ஒரு சில ஹாம் வானொலி மன்றங்கள் தனியாகவே ஹாம் லாஃக் புத்தகத்தினை (Ham Log Book) வெளியிட்டுள்ளன.

தொடக்க நிலையில் உள்ள ஹாம்கள் இது போன்ற லாஃக் புத்தகத்தினை பயன்படுத்தத் தேவையில்லை. சாதாரண ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒரு எழுதுகோல் கொண்டு கேட்ட ஹாம் வானொலி நிலையத்தினை எழுதிக் கொண்டால் போதுமானது. சர்வதேச அளவில் போட்டியை நடத்தும் ஹாம் மன்றங்கள் தனியாகவே ஒரு லாஃக் சீட்டினையும் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வழிவகை செய்வர்.

போட்டியில் கலந்து கொள்ளும் நிலையங்கள், முதலில் தனியாக ஒரு தாளில் கேட்ட நிலையங்களை எழுதிக் கொண்டு, போட்டி நிறைவடைந்த பின் அந்த விபரங்களை அவர்கள் கொடுத்த வடிவில் கணிப்பொறியில் பதிவேற்ற வேண்டும். சமீப காலமாக அனைத்து விபரங்களையும், குறிப்பாக லாஃகளையும் இணையத்திலேயே பதிவேற்ற ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்படியான இணைய மென்பொருட்களில் ஹாம்கள் பலவற்றை பயன்படுத்தி வந்தாலும், பெரும்பாலான ஹாம்கள் http://b4h.net/cabforms எனும் இணையதளத்தில் உள்ள அட்டவணையைப் பயன்படுத்துகின்றனர்.

அனுபவம் மிக்க அமெச்சூர் வானொலி பயன்படுத்தாளர் என்றால், அவர்கள் பெரும்பாலும் அந்த போட்டியை நடத்தும் ஹாம் நிலையம் கொடுக்கும் இணையதளத்தினை பயன்படுத்தியே பதிவேற்றம் செய்ய விரும்புவர். ஒரு சில போட்டிகள் சிறப்புக் கவனத்துடன் நடத்தப்படுவதுண்டு. அது போன்ற போட்டிகளுக்கு இந்த மென்பொருட்கள் பெரிதும் பயன்படுகின்றன. குறிப்பாக, கேட்ட வானொலி நிலையத்தினையே திரும்பக் கேட்பது தவிர்க்கப்படுதல், போட்டிக்கான மதிப்பெண்களை உடனுக்குடன் கணக்கிடும் வசதி, ஏற்கனவே நீங்கள் கேட்ட வானொலி நிலையங்களின் பெயர் பட்டியல், போன்ற அனைத்து விபரங்களையும் இது போன்ற மென்பொருட்கள் கொண்டிருக்கும்.

Picture Courtesy: http://b4h.net/cabforms

 

புகழ்பெற்ற ஒரு சில லாஃகிங் இணையதளங்கள்

சீக்யூஎக்ஸ் (CQ/X) – https://www.no5w.com/index.php

N1MM லாஃக்கர் – https://n1mmwp.hamdocs.com

கேப் ஃபார்ம்ஸ் – http://b4h.net/cabforms

N3FJP கான்டஸ்ட் லாஃக்கர் – http://n3fjp.com

ரோவர் லாஃக் – http://roverlog.2ub.org

வின்டெஸ்ட் – http://www.win-test.com

விரைட்லாஃக் – https://writelog.com

ஹாம் போட்டியை வைக்கும் பெரும்பாலான அனைத்துலக நிலையங்கள் ‘கேப்ரில்லோ’ வடிவமைப்பினை (Cabrillo format) வரவேற்கின்றனர். அதற்குக் காரணம், இதில் எளிதாகப் போட்டியாளர்களில் வெற்றியாளரைக் கண்டுபிடித்துவிட முடியும். மேலும், இந்த மென்பொருள், எளிதாக அனைத்து விபரங்களையும் அட்டவணைப் படுத்திவிடுகிறது. கேப்பிரில்லோ பற்றி விரிவாக அறிந்து கொள்ள www.arrl.org/cabrillo-format-tutorial எனும் இணைய தளத்தினை பார்க்கலாம்.

பல போட்டியாளர்கள், தாங்கள் வைத்த போட்டியில் கலந்துகொண்ட நிலையங்களின் விபரங்களை அந்த அந்த இணைய தளங்களிலேயே வெளியிடுகின்றனர். எனவே, நீங்கள் போட்டியில் பங்கேற்று இருந்தால், அந்த இணையதளத்தினில் உங்களின் உள்ளீடு இருக்கிறதாக என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக அனைத்து போட்டிகளுக்கும் ஒரு முடிவுத் தேதி மற்றும் நேரம் இருக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து விபரங்களையும் பதிவேற்றுவது அவசியம். போட்டியில் வெற்றி பெறுவது நோக்கமாக இல்லாவிட்டாலும், உங்களின் லாஃக் மிக முக்கியம். அது பல்வேறு வகைகளில் போட்டி அனுசரணையாளர்களுக்கு பயன்படும். மேலும், அமெச்சூர் நிலையங்களும் தங்களுடைய நிலையத்தின் தரத்தினை உயர்த்திக் கொள்வதற்கு இந்த லாஃகிங் உதவுகிறது.

Picture Courtesy: https://sz1a.org

வெற்றியாளர்களின் அறிவுரை

எந்த ஒன்றிலும் அனுபவசாலிகளுக்கு ஒரு மதிப்பு உண்டு. ஹாம் வானொலிக்கும் அது பொருந்தும். ஒரு சில ஹாம்கள் உலகெங்கும் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுகின்றனர். இது எப்படி சாத்தியம் என்று பல புதிய ஹாம்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், எந்த ஒரு போட்டியாக இருந்தாலும், அதில் அவர்கள் செலுத்தும் கவனம், சிரத்தை ஆகியவை மிகவும் முக்கியம். போட்டியில் எளிதாக வெற்றி பெற ஒரு சில டிப்ஸ் மற்றும் டிரிக்குகளை பார்க்கலாம்.

Picture Courtesy: https://qrznow.com/cq-world-wide-wpx-contest-rules

சீக்யூ சீக்யூ என்பது போட்டிக்கான தாரக மந்திரம். எந்த ஒரு போட்டியாக இருந்தாலும், சீக்யூ (CQ) என்று தான் தொடங்க வேண்டும். சீக்யூ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை முந்தைய அத்தியாயங்களைப் புரட்டித் தெரிந்து கொள்ளுங்கள்.  ஒவ்வொரு போட்டியிலும் எப்படி அழைக்க வேண்டும் என்று ஒரு முறையுள்ளது. குறிப்பாகக் குரல் வழியாக ஹாம் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்க்கண்டவாறு கூறவேண்டும். இதில் contest என்னும் இடத்தில் அந்த போட்டியின் தலைப்பினை இணைத்துக் கொள்ளவேண்டும்.

Voice transmissions: CQ Contest CQ Contest from Victor Uniform Three Uniform Oscar Mic, Victor Uniform Three Uniform Oscar Mic, Contest.

பேச்சு மொழியில் ஹாம் வானொலி போட்டிகளில் கலந்து கொள்வது மிக எளிது, அதுவே மோர்ஸ் குறியீட்டில் போட்டியில் கலந்து கொள்வது என்பது சவால் நிறைந்ததாகும்.

Morse code or digital modes: CQ CQ TEST DE VU3UOM TEST.

என்று சுருக்கமாகக் கூற வேண்டும். இது அனைத்தும் மிக வேகத்தில் போட்டியின் போது நடக்க வேண்டும். அப்பொழுது தான், நிறைய நிலையங்களைப் பிடிக்க முடியும். அதே போன்று வி.ஹெச்.எஃப் ஒலிபரப்பில் எப்படி அழைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

VHF/UHF transmission: CQ Contest from VU3UOM grid FN31.

பொதுவாகவே போட்டியின் போது சுருக்கமாகப் பேசுவது அவசியம். அப்பொழுது தான் நிறைய வானொலிகளை ஒரு சேர பிடிக்க முடியும். ஒவ்வொரு முறை சீக்யூ சொல்லும் போதும் இரண்டு முதல் மூன்று நொடிகள் இடைவெளி விடவும். அதே சமயத்தில் நிறைய இடைவெளி விட்டாலும், உங்களின் நிலையத்தினை ஒரு சில நிலையங்கள் விட்டுவிட வாய்ப்புள்ளது.

வானொலி ஒலிபரப்புகளில் அறிவிப்பாளர் எப்படித் தெளிவாக இடைவெளியில்லாமல் போசுகிறாறோ, அதே போன்றே ஹாம் ஒலிபரப்பாளர்களும் பேச வேண்டும். இது, மறுமுனையில் கேட்பவர்களுக்கு ஒரு வித ஆர்வத்தினை கொடுக்கும். மேலும் தேவையற்ற ‘ம்ம்’, ‘ஆ’ போன்ற வார்த்தைகளை இடைவெளியில் பயன்படுத்தக் கூடாது. நன்றாக மூச்சினை, இழுத்து வெளியே விட்டு பதட்டமின்றி ஸ்மூத்தாக பேச வேண்டும். நிறைய நிலையங்களுடன் பேசியவுடன், உங்களின் தன்னம்பிக்கை வளரும். எனவே, இன்னும் இன்னும் நிறைய நிலையங்களுடன் பேச ஆர்வம் ஏற்படும்.

போட்டிகளின் போது பலரும் ஒரே அலைவரிசையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அது போன்ற சமயங்களில் யார் முதலில் அந்த அலைவரிசையைப் பயன்படுத்தினாரோ, அவருக்கு விட்டுக்கொடுப்பது மிக முக்கியம். ஒரு சில சமயங்களில் ஹாம் நெட்கள் அந்த அலைவரிசைகளில் ஒலிபரப்புவதுண்டு. அது போன்ற அலைவரிசைகளைத் தவிர்ப்பது நலம். போட்டியின் போது வேறு ஏதேனும் வானொலி உங்களின் அலைவரிசையில் வந்தால், அதனை “The frequency is in use, CQ contest….” Or “PSE QSY” (which means “Please change your frequency”) என்று கூற வேண்டும்.

உங்களின் வானொலி பெட்டி தரமானதாகவும் சக்தி மிக்கதாகவும் இருக்கும்பட்சத்தில், உயர் அதிர்வெண் கொண்ட அலைவரிசைகளைப் பயன்படுத்தி ஒலிபரப்பலாம். காரணம், அந்த அலைவரிசைகளில் அதிக ஹாம் நிலையங்கள் இருக்காது. மேலும், ஒலிபரப்பும் மிக தொலைவிற்குத் தெளிவாகச் செல்வதற்கு வாய்ப்பும் உண்டு.

 

(தொடரும்) ■

 

மேலதிக தகவல்களுக்கு:

Cabrillo

http://www.arrl.org/files/file/Contest%20-%20General/Tutorials/Submitting%20An%20Electronic%20Contest%20Log.pdf

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]

 



தொடர் 1ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 1 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 2ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 2 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 3ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 4ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 4 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 5ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 5 – தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 6ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 6 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 7ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 7 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 8ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 9ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 9 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 10ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 10 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 11ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 11 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 12ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 12 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 13ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 13 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 14ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 14 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 15ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 16ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 16 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 17ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 17 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 18ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 18 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 19ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 19 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 20ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 20 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 21ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 21 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 22ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 22 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 23ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 23 | தங்க.ஜெய்சக்திவேல்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *