இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 – சுகந்தி நாடார்உலாவிகள் பற்றிய தெளிவு

இன்று நம் பயன்பாட்டில் இருக்கும் ஒரு மென்பொருளாக நாம் பயன்படுத்தும் உலாவிகள் செயல்பட்டு வருகின்றன என்றால் மிகையாகாது. இந்த உலாவிகள் c++ கணினி மொழியில் உருவாக்கப்படுகின்றன.

எந்த ஒரு கணினி மென்பொருளையும் நாம் நம் கணினியில் நிறுவும் பஓது நமக்குத் தேவையானவற்றை மட்டுமே நிறுவுகின்றோம். ஆனால் நாம் பயன் படுத்தும் உலாவியை மட்டும் நாம் கூர்ந்து கவனித்து கணினியில் நிறுவுவதில்லை. நம்மை இணையத்தில் இணைக்க உதவும் ஒரு முக்கிய செயலியாக இந்த உலாவிகள் செயல்படுகின்றன.மீயுரை பரிமாற்ற நெறிமுறை வழியாக ஒவ்வோரு உலாவியும் ஒரு கணினினியைஉம் திறன் பேசியையும் இன்னொரு கணினியுடனும் இணைக்கின்றது. கணினித் திரையில் காட்டப்பட்டும் எந்த ஒரு விவரத்தையும் சுட்டியும் சொடுக்கியும் அதனோடு ஒரு பயனர் அளவளாவ இணைய உலாவிகள் உதவுகின்றன. இதனால் அதனால் தகவல் பரிமாற்றம் விரைவாகவும் வேகமாகவும் நடைபெறுகின்றது.

எல்லா உலாவிகளும் ஒரே போல் செயல் பட்டாலும் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒரு உலாவியை வைத்து உள்ளனர்.கூகுள் க்ரோம் ஃயர் பாக்ஸ் ஆகியவை கூகுள் தேடுதளத்தை முகப்பு ப் பக்கமாகக் கொண்டுள்ளன.ஆப்பிள் சவாரி ஆப்பிள் நிறுவனத்தின் முகப்புப்பக்கத்தையும் அமேசான் சில்க் அமேசான் நிறுவனத்தின் பக்கத்தை தன் முகப்புப் பக்கமாக வைத்து உள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவியும் ஓப்ரா உலாவியும் நமது இருப்பிடத்திற்குத் தகுந்தார் போல செய்திகளைச் சேகரித்து நமக்கு ஒரே இடத்தில் தருகின்றன.

இணையத் தகவல்கள் இணையப்பக்கங்களாக உருவாக்கப்படுகின்றன. ஒரு இணையப்பக்கம் எப்படித் தெரிய வேண்டும் எந்த விதங்களில் இருக்க வேண்டும் என்பதை ஒரு இணைய தள வடிவமைப்பாளர் உருவாக்குகின்றார்,

நாம் அனுப்பும் மின்னஞ்சல்களும் ஒரு விதத்தில் இணையப்பக்கங்கள் தான்.

உரைகள் என்று கூறும் போது உருவாக்கப்பட்ட மொழி, உருவாக்கியவர் இணைய தள விவரங்கள் தவிர ஆறுவகையான உரைத் தலைப்புக்கள், பத்திகள், சுட்டிகள் என்று உரை விவரங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். புகைப்படங்கள் 72 பிரிதிரன் அளவு கொண்ட jpg, png கோப்புக்களாக இணையப் பக்கங்களில் இணைக்க முடியும் ஒவ்வொரு புகைப்படத்தின் உரை விவரமும் இந்தப்பக்கங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும்.,mp4 கோப்பாகக் காணொலிகளும் .mp3 ஆவணங்களாக ஒலிக் கோப்புகளும் இணையப்பக்கத்தில் இணைக்கப்படும். இது தவிர பயனர்கள் கணினியிலிருந்து பெறப்பட்டும் தகவல்களைச் சேகரிக்கவும் தரவகங்களில் பயனர் கேட்க்கும் விவரங்களை எடுத்துக் கொடுக்கவும் இணைய வடிவமைப்பாளர் java script, sql போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்துகின்றார். java script பயனர் இட்ட வேலைகளைச் செய்வதற்கும் sql பயனரின் தரவுகளை இணைய தளத்தில் சேமிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.நாம் பல இணைய தளங்களுக்குச் செல்லும் போது நமது பயனர் சொல் கடவுச்சொல் ஆகியவற்றைச் சேமித்து வைக்க வேண்டுமா? என்று உலாவிகள் கேட்கும், அது மட்டுமல்லாமல் பல தளங்களில் கேட்கப்படும் வீட்டு விவரம், அலைபேசி எண், கடன் அட்டை விவரம் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்யாமல் தானாகவே நிரப்பக் கூடிய வசதியையும் உலாவிகள் நமக்குக் கொடுக்கின்றன.

நாம் அவ்வாறு கொடுக்கும் விவரங்கள் நமது கணினியில் ஒரு கோப்பில் உலாவியின் பதுக்ககத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்.இவ்வாறு விவரங்களைச் சேமித்து வைப்பதுவும் சேமித்த விவரங்களைத் தேவைப்படும் போது அனுப்புவதும் உலாவிகளின் வேலையாகின்றது. கால வரையன்றி எப்போதும் பதுக்ககத்தில் சேமிக்க வைக்கப்பட்டு இருக்கும் விவரங்கள், ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை சேமிக்கப்படும் விவரங்கள் என்று இரு வகைகளாக விவரங்கள், நம் கணினிக்குள்ளும் அலைபேசிக்குள்ளும் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும், காலவரையன்றி சேமிக்கப்படும் விவரங்கள் நாம் கணினியையோ அல்லது அலைபேசியையோ அணைத்து விட்டாலும் உலாவி மீண்டும் அதைப் பெறக் கூடிய வகையில் சேமிக்கப்பட்டு இருக்கும். சில சமயம் நாம் செல்லும் இணைய தளம் சரியாக வேலை செய்யாவிட்டால், உலாவியின் அமைப்புக்குள் சென்று ” clear browsing history” என்ற தெரிவை சென்று பார்த்தால், எத்தனை நாட்களுக்கான விவரங்களை எந்தெந்த விவரங்களை அழிப்பது என்று நமக்குப் பல தெரிவுகளை ஒரு உலாவிக் கொடுக்கின்றது.

ஒரு உலாவியின் மூலம் ஒருவரின் கணினியிலிருந்தும் திறன் பேசியிலிருந்தும் பல விவரங்கள் இணையம் வழி இன்னொருவருக்குச்செல்ல இயலும். என்னதான் தரவுகளும் விவரங்களும் நமது கணினியிலிருந்தாலும் அவற்றை நிரலர் மொழி வல்லுநர்களாக விளங்கும் விஷமிகளால் எளிதாகக் கைப்பற்றி விட முடியும். விஷமிகளைத் தாண்டி, நமது விபரங்கள் விளம்பரங்களுக்காகப் பல நிறுவனங்களுக்கு ஒரு நாளில் பல முறை செல்கின்றது என்பது தான் உண்மை. தற்போது சிறுசிறு தானியங்கி மென்பொருள்களும்(bots) நம் கணினியின் விவரங்களைப் பெற முடியும். மனிதர்களை விட இந்த தானியங்கி மென்பொருட்களே இணையத்தில் வலம் வருகின்றன.

நம்மைப் பற்றிய விவரங்கள் Cookies (இணைய நினைவி)Extensions( நீட்சிகள்) Privacy Policy (தனியுரிமைக் கொள்கைகள்) மூலம் திரட்டப்படுவது மட்டுமல்லாமல் மற்றவர்களுடன் பகிரப் பயன்படுகின்றது.Cookies (இணைய நினைவி);

இது ஒரு சிறு உரை ஆவணமாகும், நாம் சென்று பார்க்கும் ஒவ்வோரு இணையதளமும் நாம் அவர்களின் தளத்திற்குச் சென்றவுடன் நமது கணினியின் விவரம் , நமது இணைய விவரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு உரை ஆவணத்தை நம் கணினியில் சேர்க்கும். இணையத் தொழில்நுட்பம் வந்த புதிதில் இந்த ஆவணங்கள் ஒரு வரி விபரம் கொண்டவையாக மட்டுமே இருந்தன, ஒரு சேமிப்பகம் தான் ஒருவரின் கணினியில் இடும் இணைய நினைவியை மட்டுமே சென்று பார்க்க முடியும் . மற்ற இணைய தளங்களில் இட்ட நினைவியைச் சென்று பார்க்க இயலாது.

அதனால் தற்போது இணைய தளங்களில் நம்மைப் பற்றி எத்தனைத் தகவல்களைத் திரட்ட முடியுமோ அத்தனை விவரங்களையும் இந்த உரை ஆவணம் எழுதப்பட்டு இருக்கும் மேலும் தேவை என்றால் மற்ற இணைய தளங்களோடு தொடர்பு கொள்ளும் வகையிலும் இந்த உரை ஆவணத்துடன் நிரல்கள் எழுதப்பட்டு இருக்கும். இந்த மாதிரி இணைய நினைவி பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு உருவாக்கும் பொருட்டு மேலைநாடுகளில், ஒரு இணைய தளம் நம்மைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கின்றது என்பதைப் பயனர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற சட்டம் வந்தது.

நாம் இந்த மாதிரியான அறிவிப்பை ஒரு தளத்திற்கு முதல் முறையாகச் செல்லும் போது காணலாம். அதில் நமக்கு மூன்று விதமான தெரிவுகளைத் தருகின்றனர்.

அடிப்படை விவரங்களைச் சேகரிக்க அனுமதி

சில குறிப்பிட்ட விவரங்களை மட்டும் சேகரிக்க அனுமதி

நமது கணினியில் உள்ள எல்லா முக்கியமான விவரங்களையும் சேகரிக்க அனுமதி என்று நமக்குத் தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன

இவற்றில் நாம் மூன்றாவது தெரிவைத் தேர்வு செய்தால் மட்டுமே அந்த இணையதளத்தை நாம் முழுவதுமாகப் பயன்படுத்த முடியாது.

இங்கே இதைக் குறிப்பிடக் காரணம்

நாம் ஒரு திறன்பேசியைப் பயன்படுத்தும் போதும் சரி, இணையதள வசதிகளைப் பயன் படுத்தும் போதும் அது ஒரு பயனருக்கும் அந்த தொழில்நுட்ப வர்த்தகருக்குமான ஒரு வணிக ஒப்பந்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.Extensions( நீட்சிகள்)

இணையம் தொடங்கப்பட்ட காலத்தில் உலாவியால் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்ய இந்த நீட்சிகள் பயன்படுத்தப்பட்டன, ஒவ்வோரு உலாவிக்கும் அதற்கான நீட்சிகள் பக்கம் என்று ஒன்று இருக்கும். அந்த பக்கத்தில் பலவிதமான நீட்சிகளை நாம் காணலாம். ஆனால் தற்போது உலாவித் தொழில்நுட்பம் மாறி வருவதாலும் உலாவிகளிலிருந்து பல விவரங்களை ஒரு இணைய தளத்தால் திரட்ட முடியும் என்பதாலும் இவற்றைப் பயன் படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். இவற்றின் மூலமும் நம் கணினிக்குள் நச்சு நிரல் வர வாய்ப்பு இருக்கின்றது. இந்த நீட்சிகள் நாம் செல்லும் ஒவ்வோரு பக்கத்திற்கும் நாம் என்ன செய்கின்றோம் என்பதைக் கண்காணித்து நீட்சியை உருவாக்கியவருக்கு விவரங்களைத் தந்து கொண்டே இருக்கின்றன.

நாம் 24 மணிநேரம் இணையத்தில் இருக்கும் போது நம்முடைய விவரங்கள் எத்தனை முறை எத்தனை பேரிடம் பகிரப்படுகின்றது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தனியுரிமைக் கொள்கைகள் பற்றி அடுத்து விவரமாகப் பார்க்கலாம்.தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்
தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்தொடர் 12: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்தொடர் 13: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்தொடர் 14: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்தொடர் 15: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்தொடர் 16: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 – சுகந்தி நாடார்தொடர் 17: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 – சுகந்தி நாடார்தொடர் 18: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 – சுகந்தி நாடார்தொடர் 19

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 – சுகந்தி நாடார்