இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 49 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom (Online Education) 49 - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayamஎண்ணியியல் செலவாணி ஒரு விபரீத விளையாட்டா? அல்லது எதிர்கால வர்த்தக முறையா?

எண்ணியியல் செலவாணியின் இன்றைய நடைமுறைகளும், நாளைய அவற்றின் தேவைகளையும் பார்க்கும் போது அதை ஒரு ஒரு சூதாட்ட விளையாட்டு போல எடுத்துக் கொள்ளலாம். அல்லது இன்று வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் இன்று உலகமெங்கும் பெருமளவு செல்வம் சேர்க்கும் வழியான பங்குச்சந்தை என்றும் கொள்ளலாம்.

இன்று சிறுவர்களும் பெரியவர்களும் கணினிகளிலும் விளையாடிக்கொண்டே இருக்கின்றனர், கணினிகளும் திறன்பேசிகளும் இல்லாத காலத்திலுமே விளையாட்டுக்கள் ஒரு சமுதாயத்தின் முக்கிய பங்கு வகித்தன. இப்போதும் வகிக்கின்றன.. எந்த விளையாட்டு என்று எடுத்துக் கொண்டாலும் அந்த விளையாட்டிற்கு என்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த விளையாட்டிற்கு என்று விதிகள் இருக்கும்., விளையாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த விளையாட்டின் விதிகள் அமைந்து இருக்கும்.ஒவ்வோரு விளையாட்டிலும் விளையாட்டில் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருப்பது போல இருக்கும், அவர்கள் சக விளையாட்டுத் தோழர்களாகவோ அல்லது போட்டியாளராகவோ இருக்கலாம். கணினியில் விளையாடும் விளையாட்டு என்றால் விளையாடுபவர் கணினியுடன் ஏதாவது ஒரு வகையில் போட்டியாளராக இருப்பர்..

விளையாட்டின் பங்கேற்பாளர்கள் மனிதனாக இருந்தாலும் கணினியாக இருந்தாலும் ஒவ்வொருவரும் விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்கின்றனர் என்ற பின்னூட்டம் இருக்கும். இந்தப் பின்னூட்டம் எண்கள் வடிவத்திலோ, பரிசுகள் வடிவத்திலோ தண்டனை வடிவத்திலோ இருக்கும். இந்தப்பின்னூட்டங்கள் விளையாடுபவரின், பார்வையாளரின் ஆகிய இருவரின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக இருக்கும்.அந்த உணவர்க்ளின் அடிப்படையில் ஒருவர் அந்த விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவார். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் விளையாடும் போது அதை நம் ஐம்புலன்களால் உணர முடியும். ஆனால் ஒரு மனிதன் கணினியில் தனியாக விளையாடும்போதோ, அல்லது கணினியோடு போட்டியாக விளையாடும்போதோ உணர்வுப் பூர்வமான பின்னூட்டங்கள் பரிசுகள் வாயிலாக விளையாடுபவரை விளையாட்டில் கவனம் வைக்க ஊக்குவிக்கின்றது.

எந்த ஒரு விளையாட்டிலும் விபரீத விளையாட்டுகள் என்ற ஒரு பிரிவு இருக்கத்தான் செய்யும், உயிர் பொருள் சமூக நலன் என்று ஏதாவது ஒருவகையில் ஆபத்தையோ இடையூறையோ இந்த விளையாட்டுக்கள் இழுத்து வைக்கும்.சூதாட்டம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றை விபரீத விளையாட்டுக்களின் உதாரணமாகச் சொல்லலாம்.விளையாட்டையும் எண்ணியியல் செலவாணியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது எண்ணியியல் செலவாணியைப் பற்றிய ஆழமான புரிதலை உருவாக்கும் ஒரு விளையாட்டிற்கும் எண்ணியியல் செலவாணிக்கும் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன.

எண்ணியியல் செலவாணியின் ஒரு விளையாட்டாகப் பார்க்கும் போது ஒரு சிக்கலான கணிதப்புதிரை விடுவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாணயம் பரிசாகக் கிடைக்கின்றது. இது தான் அடிப்படை விளையாட்டுக் குறிக்கோளும் அதன் பின்னூட்டமும் ஆகும். முதலில் ஒருவரால் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு இப்போது கணினிகள் வழிதொடர்பில் இருக்கும் குறிப்பிட்ட விளையாட்டாளர்கள் மட்டுமே விளையாடும் வகையில் உள்ளது. விடுவிக்க வேண்டிய கனிதப்புதிர் மனிதனால் உருவாக்கப்படாமல் கணினியால் உருவாக்கப் படுகின்றது. விளையாட்டில் கலந்து கொள்ளும் விளையாட்டாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கணினி கொடுக்கும் கணிதப்புதிர் சிக்கலாகவும் கடினமானதாகவும் தீர்க்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் அமையும்.

எப்படிப்பட்ட கணிதப்புதிராக இருந்தாலும் புதிரை விடுவிப்பதற்கு ஒரு நாணயம் பரிசாகக் கிடைக்கும். தான் பெற்ற ஒரு நாணயத்தை மற்றவர்களிடம் பரிவர்த்தனை செய்யும் போது விளையாடும் நபர்களின் எண்ணிக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப கணிதப்புதிரின் சிக்கலும் பெரியதாக இருக்கும். ஒரு எண்ணியியல் நாணயத்தைப் பெறுவது இந்த விளையாட்டின் வெகுமதி என்றால், அந்த விளையாட்டின் கடினத் தன்மை உணர்வு பூர்வமாக விளையாட்டாளர்களை ஈர்க்கின்றது.இது ஒரு விளையாட்டிற்கும் எண்ணியல் செலவாணிக்கும் உள்ள ஒற்றுமையாகும், அதேசமயம் இந்த விளையாட்டு விளையாட்டாளர் வாழ்க்கையிலும் பார்வையாளர் வாழ்க்கையிலும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துமேயானால் இரு ஒரு விபரீத விளையாட்டாகவே முடியும். இந்த விபரீத விளையாட்டுக்களில் கணினியின் பங்கு இருக்குமானால் விபரீதம் இன்னும் அதிகமாகின்றது .ஏனெனில் கணிதப்புதிரை உருவாக்கும் கணினியின் சிந்தனை பாமர மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

கணித மூளை, கணினிநிரலெழுதும் திறன் சக்தி வாய்ந்த கணினிகள் அளவில்லா, காலத்தையும் நேரத்தையும் செலவிட விளையாட்டாளர்கள் தயாராய் இருப்பது ஆகியவை எண்னியியல் செலவாணியை ஒரு ஆபத்தான விளையாட்டாகக் காட்டுகின்றது.. வ கணினியிலும் பல ஆபத்தான விளையாட்டுக்கள் சிறுவர்களின் உணர்வுகளை ஆட்கொண்டு அவர்களை ஆபத்தான வழியில் கொண்டு செல்வதையும் நாம் அறிந்து இருக்கின்றோம். எப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும் ஒருவர் பெறும் கோபையோ, அல்லது கணினியில் விளையாடும் போது, அதில் பெறும் கொடுக்கப்படும் பரிசு நாணயங்களோ நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த முடியாது என்ற தெளிவு விளையாடுபவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியும். அந்தத் தெளிவு குறையும் போது தான் சூதாட்டம் குதிரைப் பந்தயம் ஆகிய விளையாட்டுக்களைப் போல ஒரு சமூகப் பொருளாதார சிக்கலை உருவாக்குகின்றன, இங்கே எண்ணியல் செலவானி கணிதப்புதிரை விடுவிப்பதற்கான பரிசாக இல்லாமல் இன்றையப் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாக நிஜ வாழ்க்கையில் மாறிவருவதை நாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும்.

எண்ணியியல் செலவாணியாகப் பெறும் நாணயத்தை நடைமுறையில் பயன்படுத்தப்படும் செலவாணியாகப் பார்க்கும் போது இந்த செலவாணியில் உள்ள விபரீதம் புரியும். ஒரு எண்ணியல் செலவாணியின் மூலக்கூறு சிக்கலான முறையில் எழுதப்பட்ட எண் எழுத்துத் தரவுகளே ஆகும்.

மின்வழி தற்போது நாம் நம் வங்கிகளில் செய்யும் பண பரிவர்த்தனைக்கு அடிப்படை நமக்குக் கிடைக்கும் வருமானமும் நிலம் நகை போன்ற சொத்துகளும் இதில் அடங்கும். இன்றையப் பொருளாதாரத்தில் வருமானம் இல்லாத ஒருவர் காகிதப்பணமாகவோ, அல்லது மின்வழியாகவோ எந்த ஒரு பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியாது. வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றாலும் கூட அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருளை வாடிக்கையாளர் வங்கிகளிடம் கொடுக்க வேண்டும். இது தான் இன்றையப் பொருளாதாரம். ஆனால் எண்னியியல் செலவாணி என்பது ஒருமென்பொருள் உருவாக்கிய private key, public key என்ற எண்ணியல் தரவுகளின் பரிமாற்றமே ஆகும். இது எப்படி இன்றையப் பொருளாதாரத்திற்குப் பொருந்தி வரும்.எண்ணியியல் செலவாணியைப் பொறுத்தவரை வருமானம் என்ற அடிப்படையேக் கிடையாது. ஒருவரின் கணித மூளையும்,நிரல் எழுதும் திறமையுமே இங்கு அடிப்படையாக அமைந்துள்ளன. எந்த அடிப்படையே அடிப்படையேப் பிரச்சனைக்குரிய அஸ்திவாரமாக எண்ணியியல் செலவாணிக்கு அமைகின்றது. இருந்தாலும் பொதுமக்களும், நிறுவனங்களில் பணமுதலீடு செய்பவர்களும் வங்கிகளும் ஏன் அரசாங்கமும் கூட உணர்வு பூர்வமாக இயல்புக்கு மீறி இந்த எண்ணியியல் செலவாணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த செலவாணி பிரபலம் அடைந்து வருகின்றது. அதனால் 2011ல் தொடங்கப்பட்ட bit coin என்ற நிறுவனத்தைத் தொடர்ந்து ஏறத்தாழ 1000 நிறுவனங்கள் எண்ணியியல் செலவாணியை அடிப்படையாக கொண்ட வர்த்தக பரிமாற்ற நிறுவனங்களாக உள்ளன,இந்த நிறுவனங்கள் வங்கிகளின் இன்றைய பணியைச்செய்கின்றன.

Bitcoin என்ற எண்ணியியல் செலவாணியைத் தவிர ஏறத்தாழ 4000 வகை எண்ணியியல் செலவாணிகள் இன்று புழக்கத்தில் உள்ளன. alt coin,Ethereum,Litecoin, Cardano,Polkado,Binance Coin, Zcash என்று பலவகை எண்ணியியல் செலவாணிகள் இன்று புழக்கத்தில் இருக்கின்றன

எண்ணியியல் செலவாணியைப் பற்றி ஆராயும் போது 183ம் ஆண்டுகளில் Hans Christian Andersenஎன்ற டென்மார்க் எழுத்தாளர் எழுதிய ஆடையில்லாத பேரரசர் என்ற கதை தான் நினைவிற்கு வருகின்றது. தினம் ஒரு புதிய ஆடை அணிகலன்களை அணிய விரும்பும் பேரரசர் ஒருவருக்கு உலகிலேயே இதுவரை இல்லாத உடையை நெய்து தருவதாக இரு எத்தர்கள் அரசரை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக அரசவைக்கு வருகின்றனர்.. தாங்கள் நெய்யப்போகும் ஆடை முட்டாள்களாலும் அறிவிலிகளாலும் பார்க்க இயலாது என்றும், மிகவும் ஆளுமை உள்ளத் தலைவர்களால் மட்டுமே அந்த ஆடையை உணரமுடியும் என்று கூறுகின்றனர்.

உலகிலேயே இதுவரை நெய்யப்படாத ஆடையை முதன்முதலாக எய்து தான் அணியப் போகின்றோம் என்ற ஆசையில் தனக்காக்கான ஆடையை நெய்ய பெரும் பொருளையும் செல்வத்தையும் எத்தர்களிடம் பேரரசர் கொடுக்கின்றார். எத்தர்களும் அரசரிடமிருந்து பொருளைப் பெற்றுக் கொண்டு தங்கள் இல்லம் வந்து ஆடைக்குத் தேவையான நூலைத் தயாரிப்பது போலவும் , அதற்குச் சாயம் ஏற்றுவது போலவும் நூல் கொண்டு ஆடையை நெய்வது போலவும் அன்றாடம் வெறுமே நடிக்கின்றனர். அவர்களைப் பார்ப்பதற்கு அவர்கள் ஆடைத் தயாரிப்பதில் ஈடுபட்டு இருப்பது போலத் தெரிந்தாலும், உண்மையில் வெறும் காற்றில் தான் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அரசரிடம் அவ்வப்போது சென்று ஆடை தயாரிப்பு எந்த நிலையில் இருக்கின்றது என்று சொல்லி அதற்கான பொருளைப் பெற்று வருகின்றனர். ஆடை தயாரிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து வர பேரரசர் தன் அவையில் உள்ள அமைச்சர்கள், தளபதிகள் நீதிபதிகள் மத குருமார்கள் இன்னும் பல பெருந்தகைகள் ஆகியோரை ஒவ்வொருவராக அனுப்புகின்றார்.நெய்த ஆடையைப் பார்வையிட வந்த ஒவ்வொருவராலும் கண்ணால் ஆடையைக் காண முடியவில்லை. ஆனால் அதைச் சொன்னால் நம்மை முட்டாளாகவும், அறிவிலியாகவும் பிறரும் பேரசரரும் எண்ணிவிடுவரே என்று கவலை கொண்டு தாங்கள் பார்க்க இயலாத ஆடையைப் பார்த்ததாகத் துணியின் மென்மையையும் அழகையும் நிறத்தையும் ஆடையின் வடிவமைப்பையும் தங்கள் கற்பனைக்கு ஏற்ற படி புகழ்கின்றனர்.. கடைசியாகப் பேரரசர் ஆடையை அணியும் நேரம் வருகின்றது. அவர் கண்களுக்கும் எந்த ஒரு ஆடையும் புலப்படவில்லை. நம் கண்களுக்கு ஆடை தெரியவில்லை என்றால் நமது தலைமைப்பண்பை மக்கள் சந்தேகிக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் அணிந்து இருக்கும் ஆடையைச் சுழற்றி விட்டு புதிய ஆடையை அணிந்து கொண்டு பொதுமக்களைப் பார்வையிட வருகின்றார் பேரரசர்.. கூட்டத்தில் இருக்கும் பெரியவர்களோ அரசரின் கோபத்திற்குப் பயந்து அவர் ஆடை எதுவும் அணியவில்லை என்று கூறாமல் அமைதி காக்கக் கூட்டத்தில் இருக்கும் குழந்தைகள் அரசர் ஆடை எதுவும் அணியவே இல்லை என்று கூறி அவரைக் கேள் செய்து எள்ளி நகையாடுகின்றனர். பேரரசர் தான் ஏமாற்றப்பட்டதை உணருகின்றார்.

இன்றைய எண்ணியியல் செலவாணியும் ஐம்புலன்களால் உணரமுடியாத பேரரசரின் ஆடை போல கணினிக்குள் இருக்கும் தரவுகளாக, இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் கணினி மின்பகுதி கடத்தித் தகடுகளில் வழி அணைந்து அணைந்து எரியும் ஒரு மின்சார சக்தியே இன்றையப் பொருளாதாரத்தின் புதிய தொழில்நுட்பமாக எண்ணியியல் செலவாணியாகப் பிரபலம் அடைந்து வருகின்றது..

ஐம்புலனுக்கும் புலப்படாத ஒரு செலவாணி நாளையப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி. எண்ணியியல் செலவாணி பற்றிய அச்சத்தை உருவாகுவது போல இருந்தாலும், ஒரு புது தொழில்நுட்பத்தை ஆழமாக ஆராய்ந்து விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம் ஒரு கணினிநிரலரின் ஒரு கருத்தோவியமாகத்தான் இன்றை எண்ணியல் செலவாணி இருக்கின்றது என்றாலும் அதை பொது மக்கள் புழக்கத்தில் பயன்படுத்தப் பயன் படுத்த ஒரு மதிக்கப்படும் செல்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் காலம் வரலாம். ஆனால் அப்படி அமைவதற்குப் பல காரணிகள் பொருந்தி வர வேண்டும்.இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 ( மதிப்பெண்களா? வாழ்க்கைக் கல்வியா.? ) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 (தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி: ஒரு பரிசீலனை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 (மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 (இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு)– சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 (குறிப்பு எடுத்தல்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 (கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 (இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 (குழுக்களை உருவாக்குதல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 (நழுவல் காட்சிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 (மாணவர்களை உந்துவித்தல்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 (மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 (வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 (இணையத்தில் கவனச் சிதறல்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 (எண்ணிமக் காலடிகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 16 (இணையத்தின் வளங்களைப் பயன்படுத்துவது எப்படி?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 17 (திறவூற்றுத் தொழில்நுட்பமும் காப்புரிமை வகைகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 18 (வளங்களை மேற்கோள் காட்டுதலும், அதற்கான தொழில்நுட்பங்களும்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 19 (இணைய உலாவிகளும் அதன் வசதிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 20 (உலாவிகள் பற்றிய தெளிவு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 (இணையமும் நமது தனிப்பட்ட விவரங்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 22 (கூகுளின் புதியத் தொழில்நுட்பம் எந்த வகையில் சேரும்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 (இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 (இனி அடுத்து என்ன?) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 (இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 (மாற்றம் காணும் விவசாயத் தொழில்நுட்பப் புரட்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 27 (விவசாயத்தில் கணினி சார்ந்த வேலை வாய்ப்பு) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 28 (உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 29 (கணினி நிரலெழுதும் தன்மை வேலை வாய்ப்பிற்கு அவசியம் ஏன்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30 (தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 31 (மூன்று முதல் ஐந்து வகுப்புக்களுகான கணக்கீடு முறை சிந்தனைகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 32 (நமக்குத் தேவை ஆள் வினையுடைமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 33 (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாடுகள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 34 (ஆசிரியர்களின் கடமையும் மாணவர்களின் கணினி அறிவும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 35 (ஆசிரியர்களின் தேவை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 36 (நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இணைய வகுப்புச்சூழல்) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 37 (நடுநிலைப் பாடங்களில் கற்பனைத் திறனும் கணினி நிரல் எழுதும் தன்மையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 38  (கணினி மொழி பயில உதவும் தளங்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 39 (உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் மொழிகளும் பயிற்சிகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 40 (இணைய கணினி வகுப்புகளின் சவாலும் அதன் தீர்வுகளும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 41 (மாற்றம் ஒன்றே மாறாதது) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 42 ( மறை குறியாக்க எண்ணியல் செலவாணி (Cryptocurrency) ) – சுகந்தி நாடார்இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 43 (மாறிவரும் வர்த்தகத் தொழில்நுட்பத்தின் அறிமுகமும் அடிப்படையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 (தேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 45 (மறைக்குறீயீட்டாக்க செலவாணியின் அடிப்படை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 46 (எண்ணியல் செலவாணி – தொடர்ச்சி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 47 (மறைக்குறியீடாக்க செலவாணியின் கலைச்சொற்கள்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 48 (எண்ணியியல் செலவாணியின் அடிப்படைக் கலைச்சொற்களின் விளக்கம்) – சுகந்தி நாடார்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.